மகாலட்சுமிக்கு பிடித்த மாதுளை

#1
மகாலட்சுமிக்கு பிடித்த மாதுளை !

பெருமாள் பக்தனான மன்னன் பத்மாட்சன், காட்டிற்குச் சென்று தவ வாழ்வில் ஈடுபட்டான்.
அவனுக்கு காட்சியளித்த பெருமாள், அவன் விரும்பும் வரம் அளிப்பதாக கூறினார்.
மன்னன் அவரிடம், “எனக்கு லட்சுமி தாயார், மகளாக பிறக்க வேண்டும்,” எனக் கேட்டான்.

பத்மாட்சனிடம் ஒரு மாதுளம்பழத்தைக் கொடுத்து, “உன் விருப்பம் விரைவில் நிறைவேறும்,” என அருள்புரிந்தார் பெருமாள்.
மன்னனிடம் தரப்பட்ட அந்தக் கனி பெரிதாக வளர்ந்தது.
வியப்படைந்த மன்னன், அதை உடைத்துப் பார்த்த போது, ஒரு புறம் மாதுளை முத்துக்களும், மறுபுறம் பேரழகு மிக்க பெண் குழந்தையும் இருப்பது கண்டு மகிழ்ந்தான்.
செந்தாமரை மலர் போல சிரித்த முகத்துடன் காட்சியளித்ததால் தன் மகளுக்கு பத்மை என்று பெயரிட்டான்.
இந்த பெயரே இப்போது பத்மா என திரிந்துள்ளது.

மாதுளம் பழத்தில் இருந்து லட்சுமி தோன்றியதால், மாதுளை செடி இருக்கும் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
பெருமாளுக்கும், லட்சுமிக்கும் பூஜை செய்யும் போது, நைவேத்யமாக மாதுளம்பழம் வைப்பது சிறப்பு.

ஓம் மகாலக்ஷ்ம்யை நமஹ !
 
#8
சூப்பரான தகவல். நான் இன்று சாமிக்குப் படைக்கும் போது மஹாலக்சுமிக்கு என்ன பழம் பிடிக்கும் என்று யோசிச்சனான். நீங்கள் இன்று தகவல் தந்து விட்டீர்கள் மஹாலசும்மிக்குப் பிடித்தது மாதுளம்பழம் என்று. நன்றி பானுக்கா. மஹாலக்சுமியின் கடாட்சம் எல்லோருக்கும் கிட்டட்டும்.
1596239908311.png 1596239957794.png 1596240205606.png 1596240399748.png 1596240618133.png 1596240648737.png 1596240679279.png
 
ShanviSaran

Well-Known Member
Tamil Novel Writer
#9
மகாலட்சுமிக்கு பிடித்த மாதுளை !

பெருமாள் பக்தனான மன்னன் பத்மாட்சன், காட்டிற்குச் சென்று தவ வாழ்வில் ஈடுபட்டான்.
அவனுக்கு காட்சியளித்த பெருமாள், அவன் விரும்பும் வரம் அளிப்பதாக கூறினார்.
மன்னன் அவரிடம், “எனக்கு லட்சுமி தாயார், மகளாக பிறக்க வேண்டும்,” எனக் கேட்டான்.

பத்மாட்சனிடம் ஒரு மாதுளம்பழத்தைக் கொடுத்து, “உன் விருப்பம் விரைவில் நிறைவேறும்,” என அருள்புரிந்தார் பெருமாள்.
மன்னனிடம் தரப்பட்ட அந்தக் கனி பெரிதாக வளர்ந்தது.
வியப்படைந்த மன்னன், அதை உடைத்துப் பார்த்த போது, ஒரு புறம் மாதுளை முத்துக்களும், மறுபுறம் பேரழகு மிக்க பெண் குழந்தையும் இருப்பது கண்டு மகிழ்ந்தான்.
செந்தாமரை மலர் போல சிரித்த முகத்துடன் காட்சியளித்ததால் தன் மகளுக்கு பத்மை என்று பெயரிட்டான்.
இந்த பெயரே இப்போது பத்மா என திரிந்துள்ளது.

மாதுளம் பழத்தில் இருந்து லட்சுமி தோன்றியதால், மாதுளை செடி இருக்கும் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
பெருமாளுக்கும், லட்சுமிக்கும் பூஜை செய்யும் போது, நைவேத்யமாக மாதுளம்பழம் வைப்பது சிறப்பு.

ஓம் மகாலக்ஷ்ம்யை நமஹ !
சூப்பர் பானுமா...
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement