ப்ரியசகியே 6

Advertisement

Preetz

Writers Team
Tamil Novel Writer
சகி-6




சுந்தரி

கிருஷ்ணா உள்ளே சென்ற இரண்டு நிமிடத்தில் அவனுடைய போன் பாடத்துவங்கியது. அவன் உள்ளிருந்தே குரல் கொடுத்தான்.
‘அம்மா யாருன்னு பாரேன்’
‘ஒரு நிமிஷம்’ என்று போனை எடுத்து பார்த்தால் அதில் அவருடைய எண்ணில் இருந்துதான் அழைப்பு வந்திருந்தது. அது அவர் வருவதற்குள் கட்டாகியிருந்தது.சரி நாமே அழைக்கலாம் என்று அவர் நினைக்கயிலேயே அடுத்த அழைப்பு, இந்த முறை எடுத்துவிட்டார்.
‘ஹலோ...மிஸ்டர்.கிருஷ்ணாவா?’
‘மாதுரி!!! நான் சுந்தரி பேசறேன்மா,எப்படி இருக்க? சாப்டாச்சா? வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க?இது எப்படிமா உன் கைக்கு வந்தது?’ என்று அவர் கேள்விகளை அடுக்க, கேட்டுக்கொண்டிருந்த அவளுக்கே மூச்சு வாங்கியது.
‘ச்சில் ச்சில்...இப்படியா மூச்சுவிடாம கேப்பாங்க முதல்ல கொஞ்சம் தண்ணி குடிங்கமா...அப்புறம் நான் சொல்றேன்’ என்க அவரும் சிறு பிள்ளை போல் தண்ணீரை குடித்து விட்டு கவனிக்க தொடங்கினார்.
‘நான் நல்லா இருக்கேன்மா,நியாயபடி நான் தான் இந்தக்கேள்விய கேட்கனும், நீங்க எப்படி இருக்கீங்கமா இப்போ?’
‘எனக்கு இப்போ ஒன்னும் இல்லை நான் நல்லா இருக்கேன். நீ சாப்பிட்டாச்சா?’
‘ம்ம்..சாப்டேனே. நீங்க?’
‘இனிமேதான் சாப்பிடனும் கிருஷ்ணாக்காக வெய்ட்டிங் குளிக்கப்போயிருக்கான்’
‘சீக்கிரமா சாப்பிட்டு நல்லா ரெஸ்ட்டெடுங்கம்மா’
‘ம்ம்...சரி நீ சொல்லு இது எப்படி உன் கையில கிடைச்சுது?’
‘அது உங்கள கூட்டிட்டு வரும்போது நான்தான் பின் சீட்ல எல்லாத்தையும் போட்டேன் ஆனா போன மட்டும் எடுத்து குடுக்க மறந்துட்டேன் இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஃபைல எடுக்க போனப்போதுதான் பார்த்தேன். சார்ஜ் இல்லாம இருந்தது , சார்ஜ் பண்ணி பார்த்தா இந்த நம்பர்ல இருந்து அவ்ளோ கால்ஸ் அதான் கூப்பிட்டேன்’ என்ற அவளது நீண்ட விளக்கத்தை கேட்டுக்கொண்டிருந்தவர் அவர் பங்கிற்கு நலம் விசாரிக்க ஆரம்பித்தார், இவர்களின் பேச்சு இப்படியே நீண்டுக்கொண்டே போக அவர் கிருஷ்ணா வெளியே வந்ததையும் கவனிக்கவில்லை, திரும்பி லாப்டாப்பும் கையுமாக உள்ளறைக்கு சென்றதையும் கவனிக்கவில்லை...கடைசியில் வால் க்ளாக்கிற்குள் தூங்கிக்கொண்டிருந்த குருவி மட்டும் கத்தி ஒன்பது மணியாகிவிட்டது என்று சொல்லவில்லையென்றால் அவர்கள் நிறுத்தியிருப்பார்களா என்பது சந்தேகமே.
குளித்து முடித்து வெளியே வந்த கிருஷ்ணாவின் கண்கள் முதலில் தேடியது அவன் அன்னையைதான்.அவரோ இன்னமும் பேசிக்கொண்டுதான் இருந்தார் அவர் பேசுவதையே ஒரு நிமிடம் நின்று பார்த்தவனுக்கு அவரை தொந்திரவு செய்ய மனமில்லாமல் லாப்டாப்பை தூக்கிக்கொண்டு உள்ளே சென்றுவிட்டான்.
அவன் வந்து சிறிது நேரத்திற்கெல்லாம் அவரும் வந்துவிட்டார்.
‘சாரிப்பா ரொம்ப நேரம்மா வெய்ட் பண்றியா?’
‘அதெல்லாம் இல்லைமா, ஒரு சின்ன வேலை அதைத்தான் பண்ணிட்டிருந்தேன். யாரும்மா கூப்பிட்டது?’
‘நம்ம மாது தான்டா’என்க அவனுக்கோ ‘ நம்ம மாதுவா யாரா இருக்கும்’ என்ற.யோசனையில் இறங்கிவிட்டான்.
‘போன் அவகிட்ட தானிருக்கு நான் காரிலயே மறந்து விட்டுட்டேன் போல அதான் கால் பண்ணா….’ என்று அவர் மேலும் பேசிக்கொண்டே போக அவனுக்கு விஷயம் ஒரளவிற்கு புரிந்துவிட்டது.
சுந்தரி பேசுவது காதில் விழுந்தாலும் எதுவும் மனதில் பதியவில்லை. அவன் கண்ணிமைக்காமல் அவரையே தான் பார்த்துக்கொண்டிருந்தான்.
அவர் அவ்வளவு சந்தோஷமாக பேசிக்கொண்டிருந்தார் இதைத்தானே அவனும் எதிர்பார்த்தான்….


சிந்து

மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன்மடி மேலே ஓரிடம் வேண்டும்
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை
….என்று பாடிய போனை அனைத்து விட்டு எழுந்துக்கொண்டாள் சிந்து.சோம்பல் முறித்துவிட்டு கட்டிலில் இருந்து கீழிறங்கியவள் வெளியேவந்து
‘குட் மார்னிங்பா...குட் மார்னிங்மா’என்று அந்த பேப்பரை அலசிக்கொண்டிருந்த இருவருக்கும் மத்தியில் அமர்ந்துக்கொண்டாள். ‘இரு காபி எடுத்துட்டு வரேன்’ என்று எழப்போன ரஞ்சனியை தடுத்துவிட்டு ‘நானே எடுத்துக்கரேன்’ என்று எழுந்துக்கொண்டவளை பார்த்து ‘இன்னைக்கு வர லேட்டாகுமா சின்னு?’ அவளின் அப்பா வாசு கேள்வி எழுப்ப
‘ கொஞ்சம் லேட்டாகும்பா இன்னைக்கு மாது காலைல வேலை விஷயமா எங்கயோ வெளிய போறா அதான்...ஏன்பா எங்கயாவது போகனுமா?’
‘இல்லைமா சும்மா எங்கயாவது போய்ட்டு வரலாமேன்னு பார்த்தேன்…’
‘சூப்பர்ப்பா நான் முடிஞ்ச அளவுக்கு சீக்கிரம் வர பார்க்கிறேன்’ என்றுவிட்டு அறைக்குச்சென்றுவிட்டாள்.
அவளுக்கு புரியாத விஷயமென்னவென்றால் இரண்டு வாரங்களுக்கு முன் இதே மாது அவ்வளவு தலைவலியிலும் ஒரு கப் காபியை விழுங்கிவிட்டு உட்கார்ந்திருந்தவள் நேற்று என்னவென்றால் பாதியில் கிளம்பிவிட்டாள்,
இரவே இவளுக்கு அழைத்து வேண்டிய ஒருவரை சந்திக்க இருப்பதால் இன்று வர தாமதமாகும் என்கிறாள்...அப்படி யாரது என்ற சிந்தனையில் இறங்கிவிட இருந்தவளை கடிகாரம் தான் ‘உனக்கு ஆஃபிசுக்கு லேட்டாச்சு கிளம்பு’ என்று விரட்டியது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top