ப்ரியசகியே 5

Preetz

Well-Known Member
#1
சகி-5‘இங்கதான்மா ரைட்ல நிறுத்திக்கோ’ என்று அவர் காட்டியது ஒரு அபார்ட்மென்ட்டை.
வண்டியை நிறுத்திவிட்டு அவர் இறங்குவதற்கு ஏதுவாக சென்ட்ரல் லாக்கை ரிலீஸ் செய்து கதவை திறந்துவிட்டாள் மாது.
‘வீட்டுக்கு வாயேன்மா’ என அவர் அழைத்துக்கொண்டிருக்க அதை பொறுக்காத அவளது மொபைலோ சமய சந்தர்ப்பம் பார்த்து புல்லாங்குழலை இசைத்து வைத்தது(அதுதான் அவளது ரிங்க்டோன்)
அவருடன் செல்வதற்கு ஓரடி எடுத்து வைத்தவள் ‘ஒரு நிமிஷம்மா’ என்றுவிட்டு போனை காதிற்கு கொடுத்தாள். எதிர்முனையில் வள்ளியம்மாதான்
‘மாதும்மா’
‘ஹாஹ்...சொல்லுங்க வள்ளியம்மா’
‘பிசியா கண்ணு’
‘இல்ல சொல்லுங்கமா’
‘சித்ராம்மா வந்துருக்காங்கமா….உன்னை பார்க்கனும்னு’
‘அங்கிள் வந்துருக்காங்களா வள்ளியம்மா?’
‘இல்லைமா அம்மா மட்டும்தான் வந்துருக்காங்க’
‘அஞ்சே நிமிஷம்மா இதோ வந்துட்டேன்…’ என்று போனை அனைத்துவிட்டு அவள் சுந்தரியிடம்
‘சாரிமா இன்னொரு நாள் வரேன்’
‘ஓ...அப்போ என்னவோ உரிமை போராட்டமெல்லாம் பண்ண’ என அவர் போலியான முறைப்புடன் கேட்க அவளோ
‘இப்பவும் அப்படி தான் அதுல எந்த மாற்றமும் இல்ல….வீட்டுக்கு கெஸ்ட் வந்துருக்காங்களாம்மா ரொம்ப நேரமா வெய்ட் பண்றாங்களாம் அதனால தான்….கட்டாயம் இன்னொரு நாள் வரேன்….’ என்று அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.
அவளுக்கு கை ஆட்டிவிட்டு திரும்பியவருக்கு ஆச்சர்யம் என்னவென்றால்
‘ ஒரு ஒரு மணி நேரம் பேசியிருப்போமா இல்லை மிஞ்சி மிஞ்சி போனா ஒரு இரண்டு மணி நேரம், ஆனா என்னமோ வருடக்கணக்கில் பழகியவர்கள் போல் ஒரு உணர்வு.’


மாதுரி

அவளுக்கு வந்த அழைப்பு வழக்கமானதே. சித்ரா அவளது சுதாகரன் அங்கிளின் துணைவி...மாதுவின் மேல் அளவுக்கதிகமான அன்புடையவர்...அதனால்தானோ என்னவோ அடிக்கடி இப்படி அவளுக்கென்று ஏதாவது ஒன்றை செய்து எடுத்து வந்துவிடுவார்...இன்றும் அதுபோலதான் அவளுக்கு பிடித்த அல்வா சுடச்சுட டேபிளில் வீற்றிருந்தது.
அவள் வீட்டினுள் நுழையும்போதே வாசம் மூக்கை துளைத்தது. அதற்குள் இவள் வருவதை பார்த்துவிட்ட சித்ரா எழுந்து வந்து அவளை கட்டிக்கொண்டார். இப்படி அன்போடு ஒருவர் அனைத்துக்கொள்ளும் பொழுது தன் பிரச்சனைகள் எல்லாம் நினைவிலிருக்குமா என்ன? ...மாதுரியும் மறந்துவிட்டாள் பிரச்சனையுடன் சேர்த்து அல்வாவையும், ஆனால் அதை சாக்கிட்டு அவளை பார்க்க வந்த சித்ரா மறந்துவிடவில்லை என்பது அவர் அதை எடுத்து வந்து ஊட்டியதிலேயே தெரிந்தது. ஊட்டியது மட்டுமின்றி ‘நல்லா சாப்பிடு’ என்று நாலு பக்கத்துக்கு அறிவுறை வழங்கிவிட்டே கிளம்பினார்…

சுந்தரி

மாதுவுக்கு கையசைத்து வழி அனுப்பிவிட்டு வீடு திரும்பினால் இவரை கண்டவுடன் முதலில் கட்டிக்கொண்டவன் பிறகு குதிக்க ஆரம்பித்துவிட்டான்…
‘எங்கமா போன’
‘இங்க பக்கத்துலதான்டா,கோவிலுக்கு’
‘போன் எங்க?’ என்று அவன் கேட்ட பின்பே அவர் போனை எங்கே விட்டோம் என்று யோசிக்க தொடங்கினார்.
அவர் யோசிப்பதை பார்த்தே அவனுக்கு புரிந்துவிட்டது அவர் அதை எங்கேயோ தொலைத்துவிட்டார் என்று.
‘புது இடம் , அதுவும் இத்தனை தடவை கால் பண்ணியும் அட்டன்ட் பண்ணலனா டென்ஷனாகாதா மா’ என அவருக்கே கொஞ்சம் சங்கடமாகிவிட்டது. பாவம் அவனும்தான் என்ன செய்வான் ஒரு மாதத்திற்கு முன்பு தான் அந்த வீட்டிற்கு குடிபெயர்ந்திருந்தனர் அப்படி இருக்கையில் வீட்டிற்கு வந்தால் தாயை காணவில்லை , சரி பக்கத்தில்தான் எங்காவது சென்றிருப்பார் என்று காத்திருந்தால் நேரம் போனதே தவிர அவர் வரவில்லை இரண்டு நிமிடத்துக்கு ஒரு முறை என ஐம்பது முறை அழைத்துவிட்டான் அதுவோ ஸ்விட்ச் ஆப் என்றுதான் ஒவ்வொரு முறையும் சொன்னது இருந்தும் அவன் விடாமல் முயற்சித்துக்கொண்டுதான் இருந்தான்.
நேரம் போகப்போக இனிமேல் முடியாது என்று அவன் கிளம்ப அவர் வந்துவிட்டார்.
அவரும் எப்படி வழி தவறினார் என்பதை தவிர மற்ற எல்லாவற்றையும் அவனுக்கு சொல்லிக்கொண்டிருந்தார். முதலில் சுவாரஸ்யமாக கேட்டுக்கொண்டிருந்தவனுக்கு அந்த முகம்தெரியாத பெண்மீது அப்படி ஒரு மரியாதை.ஆனால் அவர் ஒரே கதையை இரண்டு மணி நேரமாக வேறு வேறு கோணத்தில் சொல்லவும் நொந்துவிட்டான் கையில் ஒரு துன்டை எடுத்துக்கொண்டு அவன் பாத்ரூம் பக்கம் நகரவும் ‘சரிப்பா நீ குளிச்சிட்டுவா மீதி கதைய சாப்ட்டுடே பேசலாம்’என்க
‘கடுப்பாகிருவான் கிருஷ்ணா’ என்றுவிட்டு பாத்ரூமிற்குள் புகுந்துக்கொண்டான் அவனுக்கு தெரியாதா அங்கு இருந்திருந்தால் என்ன நடந்திருக்குமென்று...
 

Advertisement

New Profile Posts

Kshipra mam ka mu ka pi epo varum sis
hello friends, waiting for mallika to give link. epi is ready
Neela mam ud yeppo post panringa