ப்ரியசகியே 4

Advertisement

Preetz

Writers Team
Tamil Novel Writer
சகி-4





பூ பூக்கும் ஓசை
அதை கேட்கத்தான் ஆசை
என்று பாடல் ஓடிக்கொண்டிருக்க அந்த கருப்பு நிறக்காரோ ரோட்டில் பறந்துக்கொண்டிருந்தது. அதை ஓட்டிக்கொண்டிருந்தவளின் முகமோ அந்த பாட்டிற்கு நேரெதிராக இருந்தது.
பூ என்ன பூகம்பமே வந்தாலும் அவளிருக்கும் மனநிலையில் அதை உணர்வாளா என்பது சந்தேகமே. முதலில் வருத்தமாக ஆரம்பித்தது இப்போது கோபத்தின் உச்சக்கட்டமாக உருமாறியிருந்தது. காலையில் அத்தனை சந்தோஷமாக ஆரம்பித்த நாளில் இவ்வளவு சிக்கல்களை சத்தியமாக மாதுரி கற்பனைக்கூட செய்திருக்க மாட்டாள். காலையில் வள்ளியம்மா கொண்டு வந்து கொடுத்த மொபைலில் மிஸ்ட் கால் ஆகிருந்த எண்களுக்கு அழைத்தவளுக்கோ கிடைத்த செய்தி அவ்வளவு வருத்தத்தை கொடுத்தது.
அலுவலகத்துக்கு வந்தவளுக்கோ ஒன்றும் ஓடவில்லை ‘இது சரிபட்டு வராது’ என்று முடிவெடுத்தவள் சிந்துவை அழைத்து ஒரு சில முக்கிய பொறுப்புகளை அவளிடம் ஒப்படைத்துவிட்டு ‘முக்கியமான வேலை வந்துவிட்டது சிந்து நான் போயே ஆகனும்’ என்று கிளம்பிவிட்டாள். சிந்துவும் மாதுவும் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். அவள் சிந்துவை நன்கறிவாள் அதனால்தானோ என்னவோ ஆபிசை பற்றிய கவலையின்றி கைகளில் கார் பறந்துக்கொண்டிருந்தது.

வேதவள்ளி-ராஜசேகர் தம்பதியரின் ஒரே மகள் அதுவும் செல்ல மகள்தான் மாதுரி, அன்னையின் மறைவிற்குப்பிறகு தந்தையின் செல்லம் அதிகமானதே தவிர குறைந்ததில்லை. அதற்காக அவள் பொறுப்பற்றவள் என்று யாராலும் சொல்லிவிட முடியாது. பொறுப்பில்லாதவளால் தொழிலில் இவ்வளவு முன்னேற்றம் கண்டிருக்க முடியாது, ஆனால் அப்படிப்பட்டவள் இன்று அவளுடைய பொறுப்பை மற்றவளிடம் விட்டுவிட்டு வந்திருக்கிறாளென்றால்….என்று யோசிக்க யோசிக்க அவளுக்கு கோபம் தான் பொத்துக்கொண்டு வந்தது.
‘இதெல்லாம் அவனால் வந்தது மனசில பெரிய இவன்னு நினைப்பு’ என்று எங்கோ இருக்கும் ஒருவனுக்கு வசவுப்பாடிக்கொண்டிருந்தாள்.
‘அவன் மட்டும் என் கையில் கிடைக்கட்டும் அவனை….’ என்று ஓடிக்கொண்டிருந்த எண்ணவோட்டத்தை தடை செய்தது அவள் கண்டகாட்சி….
அதற்குள் அவள் வண்டியின் வேகத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து ஒரு கட்டத்தில் வண்டியை நிப்பாட்டிவிட்டு இறங்கி ஓட ஆரம்பித்து விட்டாள்….அவள் கண்ட காட்சி அப்படி.
தூரத்தில் வரும்போதே பார்த்துவிட்டாள் ஒரு நடுத்தர வயது பெண்மணி, அவள் தாயைவிட நாலைந்து வயது மூத்தவராக இருக்கலாம் அவர் நடந்து வந்த விதமே சரியில்லை ஏதோ நடப்பதற்கே கஷ்டப்படுவது போல் தெரிந்தது எப்படியும் அவரால் நடக்க முடியாது என்று தோன்றவே வேகத்தை குறைத்தாள். ஒரு கட்டத்தில் அவர் விழுந்துவிடுவார் என்று தோன்றவே வண்டியை நிறுத்தி இறங்கி விட்டாள்….எப்படியோ அவர் விழுவதற்குள் பிடித்துவிட்டாள். அவரை அனைத்த வாரே காருக்கு அழைத்து சென்றுவிட்டாள். அவரை தொட்டவுடனே தெரிந்துவிட்டது லோ பீபி என்று கிட்டத்தட்ட வேர்வையிலேயே குளித்துவிட்டவர் போலிருந்தார்….அவரை கை தாங்களாக அழைத்துச்சென்று குடிக்க கொஞ்சம் தண்ணீரை கொடுத்து வற்புறுத்தி இரண்டு சாக்லேட்களை உண்ண வைத்த பின்னரே அவர் கொஞ்சம் தெளிந்தது போல் இருந்தது.
‘இப்போ எப்படி இருக்குமா?’ அவர் தன் தாயைவிட ஒரு சில வயதே மூத்தவராக இருப்பார் என்ற எண்ணத்தினாலோ என்னவோ அவளுக்கு அவரை பார்த்தவுடன் அம்மா என்றுதான் அழைக்க தோன்றியது.
‘இப்போ பரவாயில்லை, ரொம்ப தாங்க்ஸ்மா நீ மட்டும் இந்நேரத்துல இங்க வரலைன்னா என்னாகிருப்பேன்னு தெரியலை’
‘ஏன்மா இந்த நேரத்துல அதுவும் இந்த ரோட்டுல கண்ணுக்கெட்டுன தூரம் வரைக்கும் மரமேயில்ல, எப்படி நடந்து வந்தீங்க ?’ அவள் பேசி முடிக்கும் வரை அவளை பார்த்துக்கொண்டிருந்தவருக்கு அவ்வளவு பிடித்துவிட்டது. எக்கேடோ கெட்டுப்போ என்று விடாமல் உதவியது மட்டுமின்றி பரிவோடு பேசியது, இப்படி கேள்வி கேட்பது, ஏன் அவரை அம்மா என்று அழைத்தது எல்லாம் பிடித்துவிட்டது.
‘இல்லைமா வீடு இங்க பக்கம் தான் கோவிலுக்குப்போய்விட்டு…..என்று ஆரம்பித்தவரின் முகம் அப்படியே மாறிவிட்டது அதை அப்படியே ஒதுக்கிவிட்டு தொடர்ந்தார் ஏதோ யோசனையில வழி தவறிட்டேன் போல என்று முடித்தார்.
என்னதான் அவர் முக மாற்றங்களை அவளிடமிருந்து மறைத்தாலும் அவர் ஆரம்பித்துவிட்டு பாதியில் நிறுத்தியதிலேயே அவளுக்கு புரிந்து விட்டது ஏதோ வேண்டாத ஒன்று என்று.
அதற்குமேல் அவளும் அதைப்பற்றி கேள்வி எழுப்பவில்லை.
என்ன தோன்றியதோ அவரே ஆரம்பித்தார் ‘உன் பேரென்னமா?’
‘மாதுரி’
‘சரியாத்தான் வச்சிருக்காங்க’என அவள் ஒரு புரியாத பார்வையை வீசினாள்.
ஆர்வத்தை அடக்கமுடியாமல் கேட்டே விட்டாள்.
‘ஏன்மா?’
‘உன் பேரைப்போல நீயும் ரொம்ப ஸ்வீட்னு சோன்னேன்’
‘ஓ….அப்போ உங்க பேரென்ன?’
‘சுந்தரி’
‘நீங்க ரொம்ப மோசம்மா’என்க
‘ஏன்மா ஏன் அப்படி சொல்ற?’
‘பின்ன நான் சொல்ல வேண்டிய டைலாக்க நீங்க சொல்லிடீங்களே’
‘அப்படியா? அப்படி என்ன டைலாக் அது?’என்று தெரிந்துக்கொண்டே அவர் கேட்க. அவளும் அவர் புரிந்துக்கொண்டதை உணர்ந்தே அவரை போலவே சில ஏற்ற இறக்கங்களுடன்
‘சரியாத்தான் வச்சிருக்காங்க’ என்று முடித்தாள்.
அவள் பேசிய விதத்தில் அவருக்கு சிரிப்பு வந்துவிட இவ்வளவு நேரம் அவருக்கிருந்த கவலைகள் எங்கே போனதென்றே தெரியவில்லை. அவளுக்குமே ஆச்சர்யம்தான் பத்து நிமிடங்களுக்கு முன் அவள் இருந்த மனநிலை என்ன சொல்லப்போனால் அவள் வந்த காரியத்தையே மறந்துவிட்டாள்.
சிரிப்பின்னூடே அவர் ‘அப்படியே கிருஷ்ணா மாதிரியே பேசறேமா நீ’ என்க
‘அது சரி, கிருஷ்ணா யாரு?’
‘என் பையன்’
‘ஓ….உங்கள இங்க தனியா விட்டுட்டு சார் என்ன பன்றாரு’ எவ்வளவு முயன்றும் குரலில் கோபம் தெரிந்துவிட்டது.
‘அவன் வேலை விஷயமா வெளில போயிருக்கான், அவனுக்கு தெரியாது நான் கோவிலுக்கு கிளம்பினது’ என்று மணியை பார்த்தவர் ‘அச்சோ ரொம்ப நேரமாகிடுச்சு அவன் இப்போ வந்திருவான்’ கிளம்ப ஆயத்தமானவரை
நிறுத்தி ‘என்ன மறுபடியும் நடக்கப்போறீங்களா அந்த விஷப்பரீட்சையே வேண்டாம் நானே உங்கள கொண்டு போய் விடறேன்’
‘உனக்கு ஏன்மா தொல்லை, உன் வேலையையும் கெடுத்துக்கிட்டு’
‘எனக்கு இப்போ இதைத்தவிர முக்கியமான வேலை எதுவுமில்லைமா, அதனால நானே கூட்டிட்டு போறேன்’ அவர் அப்பொழுதும் தயங்குவது போல் தெரியவே ‘ஏன்மா உங்க கிருஷ்ணா கூப்பிட்டாலும் இப்படிதான் தயங்குவீங்களா?’ என்க
அதற்குமேல் அவரால் என்ன சொல்ல முடியும்
அவளது கேள்வி அர்த்தமற்றது என்று அவளுக்கே தெரியும் இருந்தும் ஏனோ அவரை அப்படி விட்டுவிட அவளுக்கு இஷ்டமில்லை…..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top