ப்ரியசகியே 17

Advertisement

Preetz

Writers Team
Tamil Novel Writer
images (10).jpeg







சகி-17




கிருஷ்ணாவிற்கு ஏனோ அந்த புதியவனை சுத்தமாக பிடிக்கவில்லை பார்க்க நல்ல வாட்ட சாட்டமாகயிருந்தாலும் அவனிடம் ஏதோ ஒன்று குறைந்தாற்போல் இருந்தது அவனது பார்வை, அவன் பேசிய விதம் ஏதோ ஒன்று நெருடியது. அங்கு வந்திருந்த சிலர் கிளம்ப அதை உணர்ந்து சிந்துவிடம் திரும்பி ‘ சிந்து நீ போய் அவங்கக்கிட்ட பேசிட்டிரு நான் மாதுவ கூப்ட்டுட்டு வரேன் அவன் எழுந்து செல்ல சிந்துவும் மற்றவர்களை கவனிக்க செல்ல ரகுவிற்கோ ‘அப்பாடி’என்றானது.




அவனோ மாதுவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்க அவளோ நான் உனக்கு எந்த வகையிலும் சளைத்தவளில்லை என்று பார்த்துக்கொண்டிருந்தாள். பார்வையில் எந்த பயணுமில்லை என்பதை உணர்ந்தவன் வாயை திறந்தான்.


‘ஹேய் ஸ்வீட்டீ!!! என்ன ஞாபகமிருக்கா ?’என்க அவளோ அவள் வலது கையை இடது கையால் தேய்த்துக்கொண்டே அவனை நக்கலாக பார்த்துக்கொண்டே


‘உன்ன மறக்க முடியுமா?’என அவளது பாவனையில் கோபம் தலைக்கேறினாலும் அதை முகத்தில் காட்டிக்கொள்ளாமல்


‘நானும் மறக்கல...உன்னையும் மறக்கல நீ குடுத்ததையும் மறக்கல’ என்றவன் குரல் மாறியிருக்க அவள் ஏதோ சொல்ல ஆரம்பிக்கும் முன்பே

குரலை மாற்றிக்கொண்டு


‘ஐ மிஸ்ட் யூ சோ மச் ஸ்வீட்டீ….’என்று ஆரம்பித்தவன் இன்னும் என்ன சொல்லியிருப்பானோ அதற்குள் அங்கு கிருஷ்ணா வந்துவிட அதில் கடுப்பானவன் கிருஷ்ணாவை பார்த்து ‘ஹே!!! உங்களுக்குலாம் கொஞ்சம்கூட மேனர்ஸ் இல்ல? அது என்ன எப்ப பார்த்தாலும் அவகூடவே சுத்திட்டிருக்க?’ என்று தன் திட்டத்தில் குறுக்கிட்டுவிட்டான் என்ற ஆத்திரத்தில் வார்த்தையை விட்டுவிட ஒரு நிமிடம் கிருஷ்ணாவிற்கு எதுவும் விளங்கவில்லை ஆனால் மாதுவோ


‘ஹேய் யூ...என்ன வார்த்தை நீளுது மேனர்ஸ்ஸ பத்தி நீ பேசுறியா ?’ என அதில் இன்னும் கடுப்பானவன்


‘ஹே ஸ்வீட்டி நீ என்ன இன்சல்ட் பண்ற அதுவும் ஒரு சாதாரண எம்பளாயி முன்னாடி’என கிருஷ்ணாவை இன்னும் முறைக்க அவனை நோக்கி ஒரடி எடுத்துவைத்த மாதுவின் கையை பற்றி நிறுத்தினான் கிருஷ்ணா. அதை பார்த்துக்கொண்டிருந்தவனின் கோபம் இன்னும் தாறுமாறாக எகிற மாதுவோ கிருஷ்ணாவின் தோள்மேல் கைபோட்டுக்கொண்டு இவனிடம் திரும்பி


‘இவன் என் நண்பன்...என் கிருஷ்ணா இவன பத்தி இன்னொரு வார்த்தை தப்பா பேசின…’என்றவள் முடிப்பதற்குள் அவன் இருவரையும் கேவலமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு ‘ஃப்ரெண்ட்தானா ஸ்வீட்டி?’ என அவ்வளவு நேரம் மாதுவிற்காக அமைதிகாத்த கிருஷ்ணா கொந்தளித்துவிட மாதுவோ அவனை இளக்காராமாக பார்த்துவிட்டு ‘ஹ்ம்...நீ உன் அளவுக்குதான யோசிப்ப...உனக்கு எக்ஸ்ப்ளைன் பண்றதும் பன்னிக்குட்டிக்கு பால்கோவாவ ஊட்டிவிடுறதும் ஒன்றுதான் சிம்ப்ளி வேஸ்ட் ஆஃப் டைம்’ என்றுவிட்டு திரும்ப, அந்த வார்த்தைகளில் அவனிடமிருந்த கொஞ்சநஞ்ச பொறுமையும் பறந்துவிட


‘ஏ...என்னடி ரொம்ப ஓவரா போற...நீயே வந்து என்கிட்ட சாரி கேப்ப கேட்கவைப்பேன்’என்றவன் கர்ஜிக்க லேசாக திரும்பி அவனைப்பார்த்தவளோ


‘சர்தான் போடா’ என்று கிருஷ்ணாவுடன் நகர்ந்துவிட்டாள். கிருஷ்ணாவிற்கோ மாது இப்படியெல்லாம்கூட பேசுவாளா என்று பார்த்திருக்க அவளது செயலில் கடுப்பானவனோ அங்கிருந்து வேகமாக வெளியேற அவன் வெளியேறுவதை பார்த்துக்கொண்டிருந்த ரகுவிற்கோ ‘ரைட்டூ....இன்னைக்கு விசாரணை கன்ஃபர்ம்’என்றிருந்தது. முக்கால் வாசிப்பேர் சென்றுவிட மற்றவர்களும் கிளம்பிக்கொண்டிருக்க அங்கு நின்றுக்கொண்டிருந்த சிந்து மாதுரி வேகவேகமாக வந்து அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துக்கொள்ள கிருஷ்ணாவோ எதோ ஒரு யோசனையில் அங்குச்சென்று அமர்வதை கவனித்தவள் வாசுவிடம் பார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டு அந்த டேபிளை நோக்கிச்சென்றாள்.

‘ஹே என்னாச்சு ?’என்க கிருஷ்ணாவோ முதலில் மாதுரியை பார்க்க அவள் கவனம் இங்கேயில்லை என்பதை உணர்ந்தவன் சிந்துவிடம் சுறுக்கமாக நடந்ததையெல்லாம் சொல்ல அவர்களிருவரின் பார்வையும் ரகுவின் பக்கம் திரும்ப அவனோ ‘டேய்!!!என்ன ஏன்டா இரண்டு பேரும் இப்படி பாரக்கறீங்க...சத்தியமா நான் அவன இன்வைட் பண்ணலடா’என கிருஷ்ணாவோ


‘அதுசரி அவன் யாரு? ஏன் நீ அவன பார்த்து டென்ஷனாற? அவன் ஏன் அப்படி பேசிட்டு போறான்?’ என்று கேள்வி மேல் கேள்வி கேட்க அவனோ மாதுவின் முகத்தை பார்கக அவள் இன்னும் ஏதோ யோசித்துக்கொண்டிருப்பதை பார்த்துவிட்டு ஆரம்பித்தான்.


‘அவன்...அவன் பேரு ராகவ்...ராகவ் சத்யமூர்த்தி’என சிந்துவோ


‘எது சத்யா அன்ட் கோ சத்யமூர்த்தியோட மகனா?’ என


‘ஆமா அவனேதான்’.


‘சரி அவன எப்படி உங்களுக்கு தெரியும்?’


‘அவன் எங்க காலேஜ் சீனியர்’


‘என்னது…’


‘ ஆமா நாங்க செகன்ட் இயர் படிக்கும்போது அவன் தர்ட் இயர்’


‘டேய்...இப்போ நீ பிட்டு பிட்டா சொல்லாமா முலூசா சொல்றீயா’ என கிருஷ்ணா கடுப்பாக அவன் தொடர்ந்தான்.


‘ராகவ் கொஞ்சம் ஒரு மாதிரிடா’


‘ஒரு மாதிரின்னா?’


‘ஆரோகன்ட், ப்ளேபாய், சினிமாலல்லாம் பெரியவீட்டு பசங்கன்னு காட்டுவாங்கல்ல இவன் அதுக்கும் ஒருபடி மேல. அதுவும் காலேஜ் சீனியர் வேற சொல்லவாவேணும்?’


‘சரி ரகு அவனுக்கும் மாதுவுக்கும் அப்படி என்ன பிரச்சணை?’


‘அது...எங்க க்ளாஸ்ல இருக்க ஒரு பொண்ணுகிட்ட வம்பிழுத்தான்டா அந்த பொண்ணு ரொம்ப அப்பாவி இவன் பண்ற டார்ச்சர்ல அவ ரொம்ப பயந்துட்டா...அப்புறம் அது ப்ரின்ஸி வர போய் ரொம்ப பெரிய பிரச்சணை ஆச்சு’


‘சரிடா இதுல மாது எங்க வந்தா?’ என்று குழம்ப


‘கம்ப்ளைன்ட் குடுத்ததே மாதுதான்டா’


‘என்ன…’ என்று இருவரும் திகைக்க ரகுவோ இதுக்கே அதிர்ச்சியானா எப்படி என்று தொடர்ந்தான்.


‘பட் எப்போவும்போல ஒரு வார்னிங்க்கோட விட்டுட்டாங்க...அவனும் கொஞ்சநாள் அமைதியாத்தான்டா இருந்தான் ஆனா ஒரு நாள்…ஒரு நாள் க்ளப் மீட்டிங் இருந்தது நாங்க மீட்டிங் போயிருந்தோம் ரிடர்ன் வரும்போது நான்தான்.மாதுகிட்ட ஒரு அஞ்சு நிமிஷம் வெய்ட் பண்ண சொன்னேன். ஆனா நான் திரும்பி வரும்போது பளார்னு ஒரு சத்தம்டா மாதுதான் அவன் என்ன பண்ணான்னு தெரியல பட் அவனே அத எதிர்பார்க்கலன்னு அவன் முகமே சொல்லுச்சு அவன் என்ன முறைச்சுக்கிட்டே போய்ட்டான்டா. ஆனா சத்தியமா இன்னைக்கு வரைக்கும் என்ன நடந்ததுன்னு அவளும் சொல்லல’என


அவர்களுக்கு புரிந்தது என்ன நடந்திருக்குமென்று. அப்பொழுதும் ஏதோ யோசனையிலிருந்த மாதுவை பார்த்துவிட்டு சிந்துவோ ‘இன்னும் உன் லைஃப்ல யாரெல்லாம் இருக்காங்க மாது ? அது எப்படிபா உனக்கு மட்டும் இப்படி வித்யாசமா நடக்குது.திடீர் திடீர்னு கேரக்டர்ஸ்லாம் என்ட்ரீ குடுக்குது’

என அலுத்துக்கொள்ளவும் சுந்தரியும் ரஞ்சனியும் வரவும் சரியாக இருந்தது. அவர்களை பார்த்துவிட்டு இவர்கள் இந்த விவாதத்தை கைவிட அங்கு வந்த இருவரும்


‘உள்ள போய் பேசுங்க இங்க நேரமாகிடுச்சு குளிருது வேற. மாது என்னைக்கு கிளம்பனும்?’என


‘இரண்டு நாள்ல சுந்துமா’


‘அப்போ ரெஸ்ட் எடுத்துக்கோடா போ’என எல்லோரும் அன்று அங்கே தங்கிவிட்டார்கள்.








வெளியூர் பயணங்கள் அவளுக்கு புதிதல்ல ஆனாலும் அன்று காலை வீட்டிலிருந்து கிளம்பியது முதல் விமான நிலையத்துக்கு வந்துச்சேரும் வரையுமே மனம் அலைபாய்ந்துக்கொண்டே இருந்தது. ஏதோ விரும்பத்தகாத ஒன்று நடக்கவிருப்பதாக தோன்றியது ஆனால் அவள் செல்லவிருப்பது மிகவும் முக்கியமான ஒன்று அதை ரத்து செய்ய இயலாத ஒரு சூழ்நிலை. வழியனுப்ப வந்த கிருஷ்ணாவிடம்கூட சரியாக பேசவில்லை சிந்துவும் அத்தனை முறை அழைத்துவிட்டாள் ஆனால் இவள் என்ன பேசினால் என்று இவளுக்கே தெரியவில்லை.கடைசி நொடி வரை அவளது முகம் சரியில்லாததைக்கண்டு கிருஷ்ணாவும் யோசனையில் ஆழ்ந்துவிட்டான்...அவளும் அந்த நெருடலுடனே பயணப்பட்டாள் ஆனால் அவள் எது நடந்துவிடக்கூடாது என்று பயந்தாளோ அதுவே நடந்தேறியது. அவள் வீடு திரும்பிய போது அழுத விழிகளுடன் வள்ளியம்மாதான் அவளை எதிர்க்கொண்டார்.


அவர் சொல்லச்சொல்ல நடந்ததை கேட்டவளுக்கு ரத்தம் கொதித்தது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top