ப்ரியசகியே 16

Advertisement

Preetz

Writers Team
Tamil Novel Writer
சகி-16






வீட்டினுள் வந்த மாதுவோ சிந்துவை தேட அவளை கவனித்துக்கொண்டிருந்த ரஞ்சனியோ ‘அவ ரூமுக்கு போயிருக்காமா இப்போ வந்துருவா நீ வா நம்ம காஃபி குடிக்கலாம்’என


‘இல்ல ஆன்டீ அவளும் வரட்டும்’என்றுவிட்டு அங்கேயே அமர்ந்துக்கொண்டாள்.


தன்னறைக்கு வந்த சிந்து பேகில் தினிக்க முடியாமல் தினித்திருந்த அந்த பையை எடுத்து கப்போடிற்குள் வைத்துவிட்டு முகம் துடைத்துக்கொண்டு கீழே வந்து சேர்ந்தாள்.


வரும்பொழுதே ‘அம்மா தலை வலிக்குதுமா’ என்றவாரே வர அவரோ முன்பு பேசியிருந்தபடியே ‘மாத்திரை போட்டியாடா?’என்க


‘இல்லம்மா இனிமேதான்’


‘சரி அப்போ இந்த காபி குடிச்சுட்டு மாத்திரை போட்டு கொஞ்சம் தூங்குடா’


‘வெளிலப்போகனும்னு சொல்லிருந்தீயேமா எப்படி தனியா போவ’என கவனித்துக்கொண்டிருந்த மாதுரியோ வாசுவிடம் திரும்பி ‘ஏன் அங்கிள் நீங்க போகலையா?’என அவருக்கு முன் சிந்து பதிலளித்திருந்தாள்


‘இல்ல மாது அப்பாவுக்கு இன்னும் கொஞ்ச நேரத்துல ‘கால்’ இருக்கு நான்தான் அம்மாவ கூப்டிட்டு போறதா சொல்லிருந்தேன்’ என வருந்த


‘அதனால என்ன சின்னு நான் ஆன்டீக்கூட போய்ட்டு வரேன்’


‘உனக்கு வேற வேலை ஏதாவது…’என அவள் தயங்க


‘அப்படி தலபோற வேலைன்னு ஒன்னுமேயில்ல. சோ….’என்று ரஞ்சனியின் பக்கம் திரும்பியவள் ‘என்ன இன்னும் நின்னுட்டு இருக்கீங்க...க்விக் க்விக் சீக்கிரம் கிளம்புங்க பார்ப்போம்’ என பொய்யாக மிரட்ட அவரோ


‘சரிங்க மேடம்’என்று சென்றுவிட்டார் இவளும் கிளம்பிவர சரியாக இருந்தது. அவர்களுக்கு கையாட்டிவிட்டு சிந்து வர வாசுவோ


‘அடுத்து என்ன?’


‘அவங்க வரதுக்கு இன்னும் எவ்வளவு நேரமாகும்?’


‘இரண்டு மணிநேரம் ஆகலாம்டா'


‘அப்போ நாம மத்த வேலையெல்லாம் முடிச்சிடலாம்’ என்றுவிட்டு அவர்கள் எடுத்துக்கொண்ட வேலையை தொடங்கினார்கள்.


-------------------------------------------------------------


அங்கிருந்து கிளம்பிய பிறகே கிருஷ்ணாவின் நினைவு வர அவனுக்கு தான் ரஞ்சனியுடன் வெளியே செல்வதாக ஒரு மெஸேஜை தட்டிவிட்டாள்.


வண்டியை ஓட்டிக்கொண்டே அவளோ ‘எங்கப்போனும் ஆன்டீ’ என்க அவரோ அவள் பக்கம் திரும்பி அமர்ந்துக்கொண்டு


‘அதுசரி அது தெரியாமத்தான் இவ்ளோ தூரம் வந்தியா?’


‘அப்படியில்ல நீங்க எந்த மாதிரி யாருக்காகன்னு சொன்னா வசதியாயிருக்கும்’என அவரோ


‘என் காலேஜ் ஃப்ரெண்ட் சுபா தெரியும்ல’


‘ஆமாம்’


‘அவ இங்க வந்துருக்காடா பசங்களோட அதான் அவங்களுக்கு எதாவது வாங்கலாம்னுட்டுதான்’


‘சூப்பர் ஆன்டீ!!! சரி என்ன வாங்கப்போறீங்க?’


‘அவ பொண்ணுக்கு கோரல் கலர்ல ஹுடீ வேணுமாம்டா அதுவும் பான்டா ப்ரின்டட்’என்க கேட்டுக்கொண்டே வந்தவள்

திடீரென


‘என்னது கோரல் கலர்ல ஹுடீஸா!!!’என


‘முதல்ல சீ ப்ளூ தான்டா கேட்டா பட் அப்புறம் மாத்திட்டா’


‘சீ ப்ளூ வா? அதுக்கு கோரல் பெட்டர்’என்றாள். அதன்பின் இருவரும் சேர்ந்து அந்த கோரல் நிற ஹுடீஸை தேடும் வேட்டையில் இறங்கினர்.


கடை கடையாக ஏறி இறங்கி கடைசியில் ஒரு கடையில் பான்டா ப்ரின்டட் ஹுடீஸை பார்க்கும்போது பசியிலிருந்தவனுக்கு பால்கோவா கிடைத்ததுப்போலிருந்தது இருவருக்கும் பின்னே எத்தனை கடைதான் ஏறி இறங்குவது அதுவும் மாதுவினுடைய ஷாப்பிங்கெல்லாம் மிஞ்சிப்போனால் அரை மணி நேரம் ஆனால் இன்றோ இந்த ஒன்றை தேடுவதிலேயே இரண்டு மணி நேரம் போயிருந்தது இனி மற்றவையும் வாங்க வேண்டுமே அதற்குமேல் நேர விரயம் செய்யாமல் வாங்க வேண்டியிருந்ததையும் வாங்கிக்கொண்டு வீடு திரும்ப அவர்கள் நினைத்ததைவிட தாமதமாகிவிட்டது.


அவர்கள் வரவுக்காகவே காத்துக்கிடந்த சிந்து வண்டிச்சத்தம் கேட்ட வுடனே காபி தயாரிக்க ஆரம்பித்துவிட்டாள். வாசுவோ பையையெல்லாம் தூக்கிக்கொண்டு வர உள்ளே நுழைந்தவர்களுக்கு முன் ஆவி பறக்க காபி இருந்தது. அந்த காபி அப்பொழுது அவர்களுக்கு மிகவும் தேவையாகயிருந்தது. காபி கப்பை காலி செய்துவிட்டு ‘தாங்கஸ் சின்னு ஆனா இந்த நேரத்துல காபி குடிச்சா எப்படி சாப்பிடறது’என்க


‘அத குடிக்கறதுக்கு முன்னாடி சொல்லியிருக்கனும்….நாம இப்போ வெளில போறோம் மாது டின்னர் அங்கதான் சோ நோ ப்ர்ப்ளம்’ என மாதுவுக்கோ ‘என்னது மறுபடியும் முதல்ல இருந்தா’ என்றானது. அவளையே கவனித்துக்கொண்டிருந்த சிந்து அவளை அவளறைக்கு தள்ளிக்கொண்டுப்பபோய் கப்போர்டிலிருந்து ஒரு கவரை எடுத்து அவளிடம் கொடுக்க அதை திறந்து பார்த்த மாதுவுக்கு ஒரு நிமிடம் திகைத்துவிட்டாள்


‘ஹேய்….இது...இது...இந்த ட்ரெஸ்...எப்படி?’ என அதிர்ச்சியில் திணர


‘ஞாபகமிருக்கா மாது இது நீ ஆசப்பட்ட உனக்கு பிடிச்ச சர்ஃப் ப்ளூ கலர் கௌன்’


‘உனக்கு இதெல்லாம் ஞாபகமிருக்கா சின்னு...எப்படி?...நான் எத்தனையோ வருஷத்துக்கு முன்னாடி சொன்னத ஞாபகம் வச்சிருக்க’என்றவள் அவளை இறுக கட்டிக்கொண்டு ‘தாங்க யூ சோ மச்’ என


‘அதெல்லாம் சரி இப்போ நீ இத போட்டுட்டு தான் வர’


‘அப்படி எங்க போறோம்?’


‘நீயே வந்து பார்த்துக்கோ’என


‘என்னமோ நடக்குது உலகத்துல…’என்று பாடிக்கொண்டே உடை மாற்ற சென்றுவிட இவளும் கிளம்பத் தயாரானாள்.


இருவரும் தயாராகி கீழே செல்ல அங்கு வாசுவும் ரஞ்சனியும் தயாராகி உட்கார்ந்திருந்தார்கள். மணியை பார்த்துவிட்டு கிளம்பலாமா என்று அவர்களிருவரும் முன்னே நடக்க பின்னே சிந்துவுடன் வந்துக்கொண்டிருந்த மாதுவோ


‘ஹே...மணி இப்போவே 10:30 வீட்டுக்கு வர மிட்நைட் ஆகிடுமே’என


‘அதெல்லாம் பரவால்ல பார்த்துக்கலாம்’ என்று முடித்துவிட்டாள்.


மாது ட்ரைவர் சீட்டை நோக்கிச்செல்ல அவளுக்கு முன் வேகமாக வந்த சிந்து

‘நான் ஓட்டுறேன்’

‘சரி ஓகே’ என்றுவிட்டு பின்னிருக்கையில் ரஞ்சனியின் பக்கம் அமர்ந்துக்கொண்டவள்

‘ரஞ்சிமா எல்லாரும் சேர்ந்து என்னமோ பெருசா ப்ளான் பண்றீங்க ஹ்ம்ம்…’என்றுவிட்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டாள். அவளது முக பாவத்தில் சிரிப்புவர அவரும் தலையை அந்தப்பக்கம் திருப்பிக்கொண்டார்.


மாதுரி இருந்த மனநிலையில் அவள் எதையுமே சரியாக கவனிக்கவில்லை அதனால்தானோ என்னவோ வண்டி நின்ற பிறகே கவனித்தாள் அது அவள் வீடிருக்கும் பகுதி என்று ஆனால்...எதுவோ வித்யாசமாகப்பட இறங்கப்போனவளை தடுத்து நிறுத்திய சிந்து தனது போனில் எதுவோ நோண்டிவிட்டு இவள் பக்கம் திரும்பி


‘ஒரு நிமிஷம் மாது கீழ இறங்கவேண்டாம்’என


‘ம்ம்ம்…’


சிந்துவின் போன் சினுங்க அதை எடுத்துப்பார்த்தவள் இவளிடம் திரும்பி


‘வண்டியை வீட்டு வாசலுக்கே கொண்டுப்போறேன் பட்….நீ கண்ண கட்டிக்கனும்’


அவளை ஏற இறங்கப்பார்த்தவள் ‘ஏதோ பெருசா ப்ளான் பண்ற….சரி ஓகே’என்றுவிட அவள் ரஞ்சனியின் பக்கம் திரும்ப அவரோ மாதுவின் கண்ணை கட்டிவிட்டார். தெருமுனையில் வண்டியை நிறுத்தியிருந்தவள் அவள் வீட்டு வாசலுக்கு வந்துவிட்டு கீழிறங்கி கிருஷ்ணாவை அழைத்தவள் அவன் வரவும் மாதுவை இறங்க வைக்க அவளோ


‘டேய்...என்னடா பண்றீங்க இரண்டு பேரும்’


‘ஆஹ் உன்ன கிட்னாப் பண்றோம்’


‘ஓஹ்!!! பார்த்து பண்ணுங்கப்பா’


‘நீ இப்படியே பேசுனா உனக்கு சாக்லேட் கிடையாது’என அவளோ


‘டேய்!!! நான் இளம்தொழிலதிபர்னு அவார்ட் வாங்குனவடா...நீங்க என்னமோ அஞ்சு வயசு பிள்ளை மாதிரி டீல் பண்றீங்க’


‘அப்போ உனக்கு வேண்டாமா?’ என சிந்து கேட்க


‘வேணும்….’ என்று இழுக்க


‘அப்போ அமைதியாயிரு’ என்றவாரே அவர்கள் தோட்டத்துக்கு வந்துவிட்டனர்.



அங்கேயே நின்று மாதுவையும் நிறுத்திவிட்டு கிருஷ்ணா மிகவும் ஆழமானக்குரலில் ‘மாது’ என்றழைக்க அந்த வித்யாசத்தை உணர்ந்த மாதுவோ

அவன் கையைத்தேட அதை உண்ர்ந்து அவளது கையை பிடித்துக்கொண்டு


‘மாது...நீ ஒரு தேவதைடா என் லைஃப்ல நான் ரொம்ப பெரிய கஷ்டம் வரும்போதுலாம் நான் உன்ன தான் நினைச்சுக்குவேன் ஏன்னா...பத்தொன்பது வயசுல உனக்கு இருந்த தைர்யமும் தன்னம்பிக்கையும் இந்த வயசுலக்கூட எனக்கு வருமான்னு தெரியல பட்...நீ என்கூட இருக்கும்போது எப்படிப்பட்ட பிரச்சணையா இருந்தாலும் அத சமாளிக்க முடியும்னுர நம்பிக்கை வருது. இப்படிப்பட்ட என் தேவதைக்கு என் பெஸ்ஸ்ஸ்ட் ஃப்ரெண்ட்க்கு எங்களால முடிஞ்ச ஒரு சின்ன சர்ப்ரைஸ்’.என்றுவிட்டு அவன் அந்த கட்டை அவிழ்க்க அவன் பேசியதில் கண் கலங்கியிருந்த மாதுவுக்கு முதலில் எதுவுமே தெரியவில்லை பின் கிருஷ்ணாவையும் சிந்துவையும் பார்த்தவள் இருவரையும் சேர்த்து கட்டிக்கொள்ள அதைப்பார்த்த எல்லோரும் நெகிழ்ந்துவிட்டார்கள். அங்கிருந்த அனைவரும் மாதுரியுடைய நண்பர்களே அவளைப்பற்றி நன்கறிந்தவர்களும்கூட.


அவர்கள் செய்திருந்த ஏற்பாட்டையெல்லாம் பார்த்த மாதுவிற்கு பேச்சே எழும்பவில்லை ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப்பார்த்து செய்திருந்தான். அங்கு வந்திருந்த அனைவரும் அவளது நண்பர்களேயென்றாலும் அவர்களையெல்லாம் பார்த்து பல வருடங்களாகியிருந்தது.


எல்லோருடனும் நலம்விசாரித்துவிட்டு அங்கிருந்த ஒரு டேபிளில் ரகு, கிருஷ்ணா மற்றும் சிந்துவும் அமர்ந்திருக்க அவர்களுடன் இணைந்துக்கொண்டவள்.


‘அடப்பாவிகளா அப்போ மூனு பேரும் கூட்டுக்களவாணிகளா?’என ரகுவோ


‘இல்ல மாது கிருஷ்ணாதான் சொன்னான் ஸ்பெஷலா இருக்கனும்னு….ஆமா நீ கொஞ்சம்கூடவா கெஸ் பண்ணல?’


‘என்னமோ பண்றீங்கன்றளவுக்கு கெஸ் பண்ணேன் பட் இப்படி எதிர்பார்க்கல’என ரகுவோ


‘அதுக்குதானே நாங்க நாளைக்கு வைக்காம இன்னைக்கு நைட் வச்சிருக்கோம்’ என்று பெறுமையாக சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவன் போன் அலற ‘ஒரு நிமிஷம்’ என்றுவிட்டு அங்கிருந்த ஒரு மரத்தின் பக்கம் நின்று பேசியவிட்டு திரும்ப அதே நேரம் அங்கு வாசல் பக்கம் ஒரு கார் வந்து நிற்கவும் சரியாகயிருந்தது. மறுபடியும் அங்கே வந்து அவன் உட்கார்ந்துக்கொள்ள சில செல்ஃபிகளை எடுத்து அதை அவர்களே கலாய்த்துக்கொண்டிருக்க திடீரென்று ஒருவன் ‘ஹேய் ஸ்வீட்டீ!!! மெனி மோர் ஹாப்பி ரிடன்ஸ் ஆஃப் தி டே டியர்!!! என்ன ஞாபகம் இருக்கா?’ என்றவாரே ஒரு பூங்கொத்தை அவளிடம் நீட்ட ரகுவிற்கோ பகீரென்றானது ‘இவன் எங்க இங்க? நான் கூப்பிடவேயில்லையே. இவ என்ன பண்ணப்போறாளோ...கடவுளே’ என்று வேண்டிக்கொண்டான். ஆனால் வந்திருந்தவனோ இன்னும் ஒரு படி மேலேபோய் உன்கிட்ட கொஞ்சம் பேசனும் டியர்’என்க சிந்துவும் கிருஷ்ணாவும் மாதுவை ஒரு புரியாத பார்வை பார்க்க அவளோ ‘ஒரு நிமிஷம்’ என்றுவிட்டு நடந்தாள். போனவன் வாயை வைத்துக்கொண்டு சும்மாயிராமல் ரகுவின் பக்கம் திரும்பி ‘ஹே!!!ரகு எப்படியிருக்க?’என இவனோ ‘நல்லாயிருக்கேன்’ என்று திக்கி திணறி முடிப்பதற்குள் அவன் சென்றிருந்தான் இவனுக்கானால் ‘அப்புறம் ஏன்டா கேட்கற’ என்றானது இந்த பக்கம் திரும்பினாலோ சிந்துவும் கிருஷ்ணாவும் அவனிடம் விசாரணை நடத்துவதற்கு தயாராகயிருக்க பாவம் அவன்தான் விழித்துக்கொண்டிருந்தான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top