ப்ரியசகியே 14

Advertisement

Preetz

Writers Team
Tamil Novel Writer
சகி-14





கடைக்குச்சென்றுவிட்டு வீடு திரும்பிய கிருஷ்ணாவிற்கு வீட்டு வாசலை நெருங்கும்போதே இவர்கள் பேசியது காதில் விழுந்தது. அவன் சிந்துவை அங்கே எதிர் பார்க்கவில்லை அதுவும் அவள் சுந்தரியுடன் சேர்ந்துக்கொண்டு மாதுரியை கிண்டலடித்தது ஆச்சர்யமே. சிந்துவை இதற்குமுன் அவன் இப்படி பார்த்ததில்லையல்லவா.

முதலில் ‘வந்துட்டான்ல என் நண்பன்’ என்ற ரீதியில் திரும்பியவள் அவன் சொன்னதின் அர்த்தம் புரிந்தவுடன்


‘யூ டூ ப்ரூடஸ்?’ என்று சோஃபாவிலிருந்த தலையணையை எடுத்து அவன்மீது வீச அதிலிருந்து தப்பியவன்


‘எதா இருந்தாலும் குணமா வாயில சொல்லனும் இப்படி ஆயுதம்லாம் எடுக்ககூடாது’


‘குணமா சொல்லனுமா இப்போ எவ்ளோ குணமா சொல்றேன் பாரு’ என்று விரட்ட


‘அம்மா உன் புள்ள மேல அவ கொலைவெறி தாக்குதல் நடத்தறா நீ என்னனா காமெடி ஷோ மாதிரி பார்க்கற’


அவரோ சிந்துவிடம் திரும்பி ‘இவங்களுக்கு இதான் வேலை வா நாம கேசரி கிண்டலாம்’ என

அவ்வளவு நேரம் விளையாடிக்கொண்டிருந்தவள் கேசரி என்ற வார்த்தையைக்கேட்டவுடன் நின்று விட்டாள்.


‘சுந்துமா நீங்க கேசரி கிண்டறதா சொல்லவேயில்ல’


‘சஸ்பென்ஸா இருக்கட்டுமேன்னு நினைச்சேன்’ என்க அவளோ


‘சாப்பாட்டுல என்னம்மா சஸ்பென்ஸ்’என்க கிருஷ்ணாவோ


‘அம்மா நான் சமைக்கறேன் இன்னைக்கு’என்று அசால்டாக ஒரு குண்டை தூக்கி வீசினான்.


‘என்னது…’ என்று சுந்தரி அதிர மாதுவோ


‘ஹேய்!!! நீ சமைப்பியா? சொல்லவேயில்ல என்ன ஸ்பெஷலா பண்ணுவ?’ என ஆர்வமாக கேட்க சுந்தரி


‘ஆஹ் சாம்பார் காபி’ என


‘சாம்பார் காபியா அப்படினா என்ன சுந்துமா?’ என்று வினவ கிருஷ்ணா தான் பதறிவிட்டான்


‘தெய்வமே….போடான்னு சொல்லு போயிடறேன் ஆனா அதுக்காக இப்படி மட்டும் பண்ணிடாதேம்மா அதுவும் இந்த சின்சியர் சிங்காரத்துக்கு முன்னாடி’ என அவரும்


‘சரி பொழச்சுபோ ஆனா முகத்த மட்டும் அப்படி வைக்காதே’ என இதையெல்லாம் சிந்து சுவாரஸ்யமாக பார்த்துக்கொண்டிருக்க அடுகளைக்குள் சென்ற மாது


‘கிருஷ்ணா நான் காய் கட் பண்றேன் நீ குக் பண்ணு’ என இப்பொழுது அதிர்வது சிந்துவின் முறை ஆகிற்று பின்னே அவள் கடைசியாக வெட்டியது பீன்ஸ் அதுவும் கத்தரிகோலால் அப்படியிருக்க சிந்து அதிர்ச்சிக்குள்ளாவது நியாயம்தானே


‘இல்ல மாது நான் காய் கட் பண்றேன் நீ கிருஷ்ணாவுக்கு ஹெல்ப் பண்ணு’ என்றுவிட மூவரும் அடுக்களையை நோக்கி படையெடுத்தனர் இதை பார்த்த சுந்தரியோ ‘கிட்சன காப்பாத்து கடவுளே’என்று வேண்டிக்கொண்டார்.


சிறிது நேரம் கழித்து சுடசுட சாப்பாடு டேபிளில் வீற்றிருந்தது அதை சற்றி அவர்களும்.


சுந்தரியின் கண்களில் தெரிந்த மரண பீதியை கவனித்துவிட்டு சிந்துவோ


‘ஏன் ஆன்டீ இப்படி பார்க்கறீங்க?’ என


‘இல்ல சிந்து அவன் தனியா சமைச்சாலே டேஞ்சர் இதுல இவங்க இரண்டு பேரும் சேர்ந்து வேர செஞ்சிருக்காங்க அதான் கொஞ்சம் திகிலா இருக்கு’என


‘அய்யோ ஆன்டீ நீங்க டென்ஷனே ஆக வேண்டாம் நான் பக்கத்துல தான இருந்தேன் சோ பயப்படாம சாப்பிடலாம்’என்று கண்ணடிக்க அவர்களையே கவனித்துக்கொண்டிருந்த கிருஷ்ணா


‘அப்படி என்ன ரகசியம் பேசறீங்க?’


‘அதுவா நீங்க பிரியாணிக்கு கரம் மசாலாக்கு பதிலா சாம்பார் பொடி போட்டீங்களே அத தான் ரகசியமா சொல்லிட்டிருந்தேன்’ என்று பகீரங்கமாக போட்டுடைக்க சுந்தரியோ ‘என்னது மறுபடியும் சாம்பார் பொடியா?’ என்று பதற

அவரை பார்த்து கண்ணடித்து லுலூவாய்க்கு என்று சிந்து சொல்ல மாதுவோ ரொம்ப சீரியசாக


‘இல்லையே சிந்து நான்தானே எடுத்துக்கொடுத்தேன் அப்படியொன்னுமில்லையே’ என கிருஷ்ணாவோ


‘ஹேய் மாது அவங்க நம்மள கலாய்க்கறாங்களாம்மாம்’


‘ஓ….எதா இருந்தாலும் சொல்லிட்டு செய்ங்கப்பா’ என்று பல்ப் குடுக்க அன்றைய தினமும் அந்த சாப்பாடும் அவர்களுக்கு கல கலப்பாக சென்றது.


-------------------------------------------------------------


ஒரு மாதத்திற்கு பிறகு


தனிமையையும் ரசிக்கும் ஜீவன் என்றால் அது சிந்துவாகத்தான் இருக்க முடியும் அந்த காலை நேரக்குளிரை அனுபவித்தபடி காபி குடிக்கலாம் என்று காபி கலக்கி கொண்டிருந்தாள். வாசுவும் ரஞ்சனியும் சொந்தத்தில் ஏதோ விசேஷம் என்று வெளியூருக்கு சென்றிருந்தனர் எப்பொழுதும்போல் இப்பொழுதும் வேலையை காரணம் காட்டி வீட்டிலிருக்கிறாள் அதுவும் அன்று விடுமுறை தினம் வேறு அதனால்தானோ என்னவோ எல்லா வேலைகளையும் பொறுமையாக செய்துக்கொண்டிருந்தாள்.


டிவியில் பாடல் ஓடிக்கொண்டிருக்க ஒரு கையில் காபி மக்கையும் மறு கையில் ஒரு புத்தகத்தையும் எடுத்துக்கொண்டு கீழே கால்நீட்டி உட்கார்ந்து சோஃபாவில் சாய்ந்துக்கொண்டாள்.


காபியையும் புத்தகத்தையும் ரசித்துக்கொண்டிருந்தவளை அதற்குமேல் ரசிக்க விடாமல் போன் பாடியது. அங்கிருந்த டேபிளில் மக்கையும் நாவலையும் வைத்துவிட்டு போனை எடுத்து பார்த்தவள் முகத்தினில் மென்மை.



அழைத்தது மாதுரிதான் நேற்றிலிருந்து அத்தனை முறை அழைத்துவிட்டாள்.அன்று விடுமுறை தினமென்பதால் எங்காவது ‘லாங் ட்ரைவ்’ போவதாக திட்டமிட்டிருந்தனர் அதற்குதான் இத்தனை அழைப்பும்.


‘சொல்லு மாது’


‘கிளம்பிட்டியா ?’


‘மணி ஏழு தானே ஆகுது எட்டு மணிக்குதானே’


‘நல்லா பாரு மணி ஏழரையாகுது நாங்க இன்னும் பத்து நிமிஷத்துல கிளம்பிடுவோம் நீ ரெடியாயிரு’ என்றுவிட்டு வைக்க அவள்தான் முன்பே கிளம்பிவிட்டாளே மறுபடியும் சென்றாள் எங்கே காபியும் நாவலும் இசையும் தான்.



சொன்னது போலவே கொஞ்ச நேரத்தில் வீட்டு வாசலில் ஹார்ன் சத்தம் கேட்டது.

இவளும் எல்லா கதவுகளையும் மூடிவிட்டு சிலின்டர் பார்த்துவிட்டு கிளம்பிவிட்டாள் இல்லை கிளம்பிவிட்டார்கள்.


‘ஹாய் ஆன்டீ!!! எப்படியிருக்கீங்க?’


‘நான் நல்லா இருக்கேன் நீ எப்படியிருக்கே?’என கிருஷ்ணாவோ ட்ரைவர் சீட் பக்கம் திரும்பி


‘ஏன் மாது இது இவங்களுக்கே ஓவரா இல்லையா என்னமோ ரொம்ப வருஷம் பாக்காதவங்க மாதிரி பேசுறாங்க நேத்துதானே பேசினாங்க’ என


‘நம்ம கையில எதுவுமில்ல கிருஷ்ணா...ஆனா உன் மொக்க ஜோக்குக்கு இது பரவால்லப்பா’என்று தோளை குலுக்க


அவன் இன்னும் கடுப்பாகி போனான். முன் சீட்டில் மாதுரிக்கு பக்கத்தில் அமர்ந்திருந்தவன் வெளிபக்கம் முகத்தை திருப்பிக்கொண்டான். கொஞ்சதூரம் அமைதியாக வந்தவளுக்கு அவனின் அமைதி சுத்தமாக பிடிக்கவில்லை ‘என்ன பண்ணலாம்?’என்று யோசித்துக்கொண்டே வந்தவள் கண்ணில் அங்கே தூரத்தில் ஒருவர் சைக்கிளில் பதனி விற்றுக்கொண்டிருந்தது கண்ணில் பட்டது.


‘மிஸ்டர். மொக்க ஜோக் முனியாண்டி’ என

அவன் இன்னும் முறுக்கிக்கொண்டான். வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தியவள் அவன் பக்கம் திரும்பி


‘கிருஷ்ணா எனக்கு அது வேணும்’என அவனோ கடுப்பாக


‘எப்ப பார்த்தாலும் சாப்பாடு சாப்பாடு….போ நான் மொக்க ஜோக் அடிக்கறேன்ல என்கிட்ட ஏன் கேட்கறே’ என திரும்பிக்கொள்ள. அவள் பின் பக்கம் திரும்பி ‘சுந்துமா சிந்து நீங்களும் குடிக்கறீங்களா ?’


‘ இல்ல மாது இப்போதான் காபி குடிச்சேன் எனக்கு வேண்டாம்’என சுந்தரியும் சிந்துவுடன் சேர்ந்துக்கொண்டு


‘எனக்கும் வேண்டாம்டா’ என்றுவிட

மாதுவோ முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு வண்டியை எடுக்க இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த கிருஷ்ணா


‘சரி வா முகத்த மட்டும் அப்படி வைக்காத...பார்க்க சகிக்கல’ என்றுவிட்டு இறங்கியவன் சிறிது நடந்து ‘பதனிக்காரரே...அண்ணா கொஞ்சம் நில்லுங்க’ என இங்கிருந்தே அவரை நிறுத்திவிட்டு போய் வாங்கி வந்தவன் சும்மா இருந்திருக்கலாம் அதை விட்டு மாதுரி ‘எப்படி ?’ என வினவ


‘ஏனா நீ என் நண்பன்…’ என்று அவன் தளபதி பட டையலாக்கை எடுத்துவிட இதை பார்த்துக்கொண்டிருந்த சிந்துவோ சுந்தரியிடம் திரும்ப அவரோ ‘வெய்ட் அன்ட் வாட்ச்’ என்று சிக்னல் செய்ய அங்கு மாதுவோ கிருஷ்ணாவின் தோள்மேல் கை போட்டுக்கொண்டு


என் ஃப்ரெண்ட போல யாரு மச்சான்

அவன் ட்ரெண்ட எல்லாம் மாத்தி வச்சான்


என பாட சிந்து சுந்தரி பக்கம் திரும்ப அவரோ


‘இரண்டும் ஒன்னுக்கு ஒன்னு சளைச்சதில்ல’ என சிந்துவோ சத்தமாக சிரிக்க ஆரம்பித்துவிட்டாள் விடுவார்களா இவர்கள் கிருஷ்ணா மாதுவை பார்த்து


‘ஹே அந்த சின்சியர் சிங்காரம் நம்மல பார்த்துதான் சிரிக்குது’ என இதை கேட்ட சிந்துவோ பொங்கி எழுந்துவிட்டாள் காரைவிட்டு கீழிறங்கி அவர்கள் இருவரையும் பார்த்து ‘உங்களை….’ என்று விரட்ட அவர்களிருவரும் ஓட சிறுபிள்ளைகள் போல் அவர்கள் விளையாடுவதை பார்த்தவர் ‘இப்படியே இவங்க மூனு பேரும் கடைசிவர சந்தோஷமாயிருக்கனும்ப்பா…’ என்று வேண்டிக்கொள்ள அவர் வேண்டுதலை முறியடிக்கவென அதே நேரத்தில் விமான நிலையத்தில் வந்திறங்கினான் ஒருவன்.



அவன் ராகவ்….ராகவ் சத்யமூர்த்தி. ‘சத்யா அன்ட் கோ’வுடைய உறிமையாளர் சத்யமூர்த்தியின் ஒரே மகன்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top