பெண் பார்க்கும் படலம்

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
#1
“பெண்ணாய் பிறந்து

மண் பார்த்து

நடந்து

குணத்தில்

குன்றிலிட்ட விளக்காய்

மனத்தால்

கோபுர கலசமாய்

இளமையின்

பூரிப்பில்

பேரழகியாய் நிற்கும்

பெண்ணிற்கு

பெண் பார்க்கும்

படலம்”“மஞ்சள்நிற

மங்கையிவள்

புடவை

சரசரக்க

பூமி பார்த்த

பார்வையில்

உறவுகள்

புடைசூழ

சபையினில்

வந்து நிற்க

சடுதியில்

ஓர் அமைதி

ஓவிய அழகு

முன்னால்

நிற்கையில்

ஒலிதான் வருமோ

எவர் வாயிலும்”“மாப்பிள்ளை

வீட்டார்

மகிழ்வுடன்

தாம்பூலம்

மாற்ற

மங்கையவளின்

மணாளன் தான்

மன்றாடினானே

தரை பார்க்கும்

தன்னவள்

பார்வை

தன்னை பார்க்காதா என”“திருமணத்தேதியும்

குறித்திட

வாசல்

வந்துவிட்டனர்

மாப்பிள்ளை

வீட்டார் தான்

தன் வீடு

சென்றிட

வஞ்சியின்

ஓரப்பார்வையாவது

ஓர் நொடி

கிடைக்காத என

உள்ளத்தில்

ஓர் கூச்சலிட

தவிப்போடு

பார்த்தான்

நாயகியின் நாயகன்”“தவிப்பை

தகர்த்திட

தந்தாளே

ஓர் பார்வை

தன்னவனுக்கு

தன் ஆயுள்

முழுமைக்கும்

என் தலைவன்

நீ தான் என”“சொல்லவும்

வேண்டுமோ

கண்ணாளின்

களிப்பை

விழி வழி

செய்தியில்

விளைந்த இன்பத்தில்

வென்று விட்ட

உணர்வு தான்

அவனுக்கு

வையகத்தை”“அழகாய்

அங்கே துவங்கியது

அழியாத காதல்

அதற்கு

அச்சாரம் இட்டது

பெண் பார்க்கும் படலம்” 
Attachments

Advertisement

Sponsored