பூவே வாய் திறவாயோ - 06

Advertisement

நிலமதி தனக்கு இட்ட பணியை செவ்வனே செய்து முடித்துவிட்டு தன் காதலன் கதிரவனின் வருகைக்காக காத்திருக்க தனக்கு துணையாய் இருந்த நட்சத்திரங்கள் ஒவ்வொன்றாக மறைய தொடங்கியிருந்தன, காலை தென்றல் ரம்மியமாய் தேகத்தை தழுவி செல்ல என்றும் இல்லா அதிசயமாய் நிரஞ்சனா எழுந்து வாசல் தெளித்து ஏதோ தனக்கு தெரிந்த கோலம் என்ற பெயரில் சிறுபிள்ளை தரையில் கிறுக்கி வைத்தது போன்று ஐந்து புள்ளிகள் இட்டு அதில் கோடுகளை இணைத்து விட்டு உள்ளே வர அருணா துயில் கலைந்து எழுந்து வந்தார்


தன் மகளின் பொறுப்புணர்ச்சியை கண்டு அதிசயித்தவர் "நிரு நீயா இது என்னால நம்ப முடியல அதிசயமா இருக்கு இப்டி காலையில எந்திருச்சு வாசல் தெளிச்சு கோலம் போட்டு ஹப்பா! இன்னைக்கு இப்டி ஒரு அதிசயத்தை பாப்பேன்னு நா நினைச்சுக்கூட பாக்கல அதுவும் அஞ்சு மணிக்கெல்லாம் எந்திரிச்சுறுக்க!" என்று சிலாகிக்க


"இப்போ எதுக்கு ஓவரா ஓட்டுறீங்க நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல தூக்கம் வரல அதான்! எவ்ளோ நேரம் சும்மாவே படுத்துருக்குறதுன்னு எனக்கு தெரிஞ்சத போட்டுட்டு வந்துருக்கேன் அதுவும் இல்லாம நைட்டேல்லாம் ஒரே லவ்ஸ் பண்ணிட்டு இருந்திங்க சோ ரொம்ப நேரம் பேசிட்டு இருந்திருப்பிங்க கடந்த கால நீங்கா நினைவுகளா" என்று கண்ணடித்து கூற


"ஏய் வாலு ஒட்டு கேட்டயா..!" என்றதும் "ஆமா நீங்க கதவ லாக் பண்ணிட்டு பேசுனிங்க நா வந்து ஒட்டு கேக்குறதுக்கு நல்லா ஈன்னு திறந்து வச்சு பேசிட்டு இருந்துட்டு நா ஒட்டு கேட்டேன்னு சொல்றிங்களா" என்றவள் "சரிம்மா இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறதா இருந்தா தூங்கு நா பீச் வரைக்கும் போய்ட்டு வறேன் ரொம்ப நாள் ஆகுது காலையில கடற்கரை பக்கம் போய் அப்டியே காலார நடந்துட்டு வறேன், அப்பா எந்திரிகிறதுக்குள்ள போய்ட்டு வந்துருவேன்! பக்கத்துல தானே இருக்கு நானே போய்ட்டு வறேன்" என்று அருணா அடுத்து கேட்பதற்கு வாய் திறக்கும் முன்பே பதில் உரைத்தவள் நடைபயிற்சிக்கு ஏற்ற உடையில் தன்னை புகுத்தி கொண்டு கிளம்பினாள்


பெசன்ட் நகர் கடற்கரை சாலை இரண்டாவது தெருவில் அமைந்திருந்த பத்தொன்பதாவது நம்பர் என்று குறிப்பிட்டு இருந்த வீட்டில் பாலாவை எழுப்புவதற்கு பாடுபட்டு கொண்டிருந்தான் அலாரம் வைத்து எழுந்த வம்சி "டேய் எந்திரிடா மணி அஞ்சாச்சு இப்டி கும்பகர்ணன் மாதிரி தூங்கிட்டு இருக்குற கல்யாணத்தன்னைக்கும் இப்டி தான் தூங்குவியா டேய் எந்திருச்சு தொலைடா.." என்று கத்தியவன் அருகில் இருந்த தண்ணிரை எடுத்து பாலாவின் முகத்தில் ஊற்ற "ஐய்யோ.. கடவுளே..." என்று அலறி கொண்டே எழுந்தவன் "நீ வேணா போய் தொலை நா வரல என்ன விட்டுரு" என்றவன் "கொஞ்ச நேரம் தூங்க விடுடா" என்று மறுபடியும் போர்வையை இழுத்து போர்த்தி கொண்டு படுத்து கொள்ள


"ம்ஹும் உன்ன எழுப்பி விடுறதுல என்னோட முத்தானா பதினைஞ்சு நிமிஷத்தை வீணாகிட்டேன் நாளைக்கு நைட்டு படுக்க போகும் போது காலையில என்ன சீக்கிரம் எழுப்பி விடுன்னு மட்டும் சொல்லு அப்ப இருக்கு உனக்கு" என கருவி கொண்டே அறையை விட்டு வெளியே வர


சோபனா எழுந்திருந்தார் அதிகாலையில் சீக்கிரம் எழுந்து பழக்கம் என்பதால் அனைவருக்கும் முன்பே எழுந்து குளித்து வாசல் தெளித்து கோலமிட்டு உள்ளே வர "குட்மார்னிங் ஸ்வீட்டி நா ஜாகிங் போய்ட்டு வறேன்" என்று புன்னகையுடன் கூற


பதில் புன்னகைத்தவர் "சரிடா சீக்கிரம் போய்ட்டு வா அப்டியே அவனையும் கூட்டிட்டு போலாம்ல" என்றதும் "யாரு! அவன போ ஸ்வீட்டி எவ்ளோ நேரமா எழுப்பி விட்டுட்டு இருந்தேன் தெரியுமா? நல்லா எரும மாடு மாதிரி தூங்கிட்டு இருக்கான் அதான் நா மட்டும் கிளம்பிட்டேன் சரி நா போய்ட்டு வேறேன்" என்று விடைபெற்று சென்றான் வம்சி கிருஷ்ணா


கடற்கரை குளிர் காற்று தேகத்தை தழுவி செல்ல இரு கைகளையும் பரபரவென்று தேய்த்து கொண்டு கன்னத்தில் வைத்தாள் நிரு, ஆர்ப்பரிக்கும் அலைகளின் ஓசை செவிகளுக்கு கிளர்ச்சியூட்ட மூச்சை உள்ளிழுத்து கொண்டு கண்களை மூடி ரசித்தவள் கதிரவனின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தாள், கதிரவனோ மேக திரள்களின் ஊடே மறைந்து கொண்டு வழிபரியில் ஈடுபடும் கள்வனை போல போக்கு காட்டி கொண்டிருந்தான் வெளியே வருவதும் பின் மேகங்களுக்கு இடையில் மறைவதும் என்று திங்களின் போக்கு தனத்தை ரசித்து கொண்டிருந்தவளின் இதழ்களில் புன்னகை உறைய நின்றிருக்க


"ஹாய் டார்லிங் குட்மார்னிங்" என்று ஓர் ஆணின் குரல் மிக சமீபத்தில் கேட்டதும் திடுக்கிட்டு திரும்பி பார்க்க எதிரில் ஆறடி உயரத்தில் வெண்ணிற பற்கள் வரிசை தெரிய வசிகரமாய் புன்னகைத்து நின்று கொண்டிருந்த வம்சியை கண்டதும் கோபம் கொப்பளித்தது, விறுவிறுவென நடையை கட்ட அவள் பின்னோடு சென்று வழி மறித்தவன்


"என்னாச்சு என்னோட டார்லிங்க்கு இன்னே வரைக்கும் நல்லா தானே இருந்த" என்றவன் "ஓஓ என்ன பாத்ததும் பயம் வந்துருச்சா" என்று அவளை சீண்ட ரௌத்திரத்துடன் முறைத்து பார்த்தவள் "எனக்கென்ன பயம் துஷ்டன கண்டா தூர விலகுன்னு பெரியவங்க சொல்லுவாங்க அதான் கிளம்புறேன்" என மிடுக்குடன் கூறியவள் "ச்சே மூடே ஸ்பாயில் ஆகிருச்சு" என்று முணுமுணுக்க


அவள் முணுமுணுத்தது தெளிவாகவே அவன் செவிகளுக்கு கேட்டது "அப்டின்னா சரி பண்ணிருவோம்" என்றதும் அவன் என்ன செய்வான் என யூகித்தவள் "இங்க பாருங்க சார் நா கொஞ்ச நேரம் தனியா இருக்கலாம்னு வந்தேன் நா என்னோட வழியில போறேன் நீங்க உங்க வழியில போங்க வீணா வம்பு பண்ணாதிங்க" என்று குரலில் தீவிரத்துடன் கூற


"பாருடா ஜான்சி ராணி மிரட்டுறாங்க அப்படியெல்லாம் போக முடியாது உன்ன தனியா விட்டுட்டு நா எப்டி போறது உனக்கு துணையா நா வறேன்" என்றதும் "சார் வீட்டுல இருந்து தனியா வந்த எனக்கு திரும்பவும் தனியா வீட்டுக்கு போக தெரியாத " என்றவள் "நா கிளம்புறேன் நீங்களே இந்த கடற்கரையில நடந்துகோங்க" என்று கோபமாக கூறிவிட்டு நடக்க


அவள் செல்வதை குறுஞ்சிரிப்புடன் வம்சி பார்த்து கொண்டிருக்க "டேய் அண்ணா இது நல்லா இல்ல பாத்துக்கோ" என்று வம்சியின் பின்னால் இருந்து வந்த குரலில் திடுகிட்டு திரும்பி பார்க்க எதிர்ல பாலா முறைத்து கொண்டு நிற்பதை கண்டு அசடு வழிய "நீ எப்டி வந்த தூங்கிட்டு தானே இருந்த" என்று கேட்க


"பேச்சை மாத்தாத என்னடா பண்ணிட்டு இருக்க நேத்து ஆபிசுக்கு வந்த அதே பொண்ணு! என்ன பேசிவச்சுட்டு வந்திங்களா! உண்மைய சொல்லு நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றிங்களா என்ன! அப்ப கல்யாணம் வேணாம்னு சும்மா சீன் போட்டயா!" என்று அடுக்கி கொண்டே போக


"டேய் என்ன பேச விடுடா நீ பாட்டுக்கு பேசிட்டே போற நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல சும்மா அவள பாத்ததும் சீண்டி பாக்க தோணுச்சு அதான் வேற ஒன்னுமில்ல, அவ Mr. சந்திர சேகரோட பொண்ணு அவ்ளோ தான் எனக்கு தெரியும் நேத்து அவங்க அப்பா கடை விஷயமா பேச வந்தா மேனேஜர் என்ன பாக்க முடியாதுன்னு சொன்னதும் என்னோட கேர்ள் பிரெண்டுன்னு பொய் சொல்லிட்டு என்ன பாக்க வந்தா அவள கொஞ்சம் பயமுறுத்தலாம்னு பாத்தா கரடி மாதிரி உள்ள வந்து காரியத்தை கெடுத்துட்ட" என்று கூற


இப்போது அசடு வழிவது பாலாவின் முறையாயிற்று "இவ்ளோ தானா நா கூட உனக்கு லவ் வந்துருச்சோன்னு நினைச்சேன் பரவாயில்ல நீ அதுகெல்லாம் சரிபட்டு வர மாட்டேன்னு நிரூபிச்சிட்ட" என்று கேலி செய்ய


"மவனே இன்னைக்கு தானே பொண்ணு பாக்க போறோம் கல்யாணம் எப்டி நடக்குதுன்னு நானும் பாக்குறேன் பொண்ணு கிட்ட உன்ன பத்தி ஏடாகூடமாக போட்டு கொடுக்கல" என்று மிரட்ட


"டேய் அண்ணா சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் எனக்கு வினையா எதுவும் பண்ணிறாத நீயும் எதுவும் சொல்ல வேணாம் நானும் இங்க நடந்த விஷயத்தை யார்கிட்டயும் சொல்ல மாட்டேன் ப்ராமிஸ்" என்க


"இப்போ இங்க என்ன நடந்துச்சுன்னு யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்னு சொல்ற" என்று கேட்க


"ப்ச் ஏதோ வாய் தவறி உளறிட்டேன் சரி வா கொஞ்ச நேரம் நடந்துட்டு போகலாம்" என்றதும் "ஆமா நா கூப்பிடப்போ தூங்க விடுன்னு சொல்லிட்டு போர்வைய இழுத்து போர்த்திட்டு தூங்குன இப்போ எப்டி வந்த" என்று கேட்க


"அந்த கொடுமைய ஏ கேக்குற" என்றதும் "சரி கேக்கல விடு" என்று வம்சி கூற


"டேய் கேலி பண்ணாத உங்கம்மா பரவாயில்லடா எங்கம்மா இருக்கே..." என்று அலுத்து கொண்டவன் "நல்லா தூங்கிட்டு இருந்தேன் ஒரு பக்கெட் தண்ணிய எடுத்திட்டு வந்து ஏ மேல ஊத்திட்டு காளி மாதிரி பயங்கரமா இடுப்புல கைவச்சுட்டு நின்னுட்டு இருந்தாங்க அப்றம் எங்க தூங்க அவங்க கிட்ட இருந்து எஸ் ஆனா போதும்னு வேகமாக வந்துட்டேன், அப்பாவுக்கும் அதே நிலைமைதான் பாவம் நானாவது உன்கிட்ட சொல்றேன் அவரு யார்கிட்டயும் வாய் திறந்து சொல்ல மாட்டாரு சரியான புள்ள பூச்சி" என்று கழிவிரக்கத்துடன் கூற


வாய் விட்டு சிரித்த வம்சி "உனக்கெல்லாம் இப்டி ஒரு ஆள் பக்கத்துலயே இருக்கணும் அப்ப தான் நீ வழிக்கு வருவா நாளைக்கு வர போற பொண்டாடியும் இதே மாதிரி இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்" என்று ஆனந்தத்துடன் கூற


"உனக்கு ஏண்டா இப்டி ஒரு காண்டு என்மேல ஒண்ணுக்கே இங்க தாங்கலை இதுல இன்னொன்னு வேறயா முடியாது சாமி" என்று அவனை இழுத்து கொண்டு ஓட "இருடா நானே வறேன்" என்றவன் பாலாவுடன் சென்றான்


இல்லம் வந்த நிரஞ்சனா கோபத்துடன் சோபாவில் அமர்ந்தாள் "என்னடி போன அரைமணி நேரத்துல வந்துட்ட என்னாச்சு" என்று கேட்க


"இல்லம்மா போன நேரம் சரியில்ல பாக்க கூடாத ஒருத்தர பாத்துட்டேன் அதான் வந்துட்டேன் அவருக்கும் எனக்கும் ஆகாது" என்றவள் "ஒரு காஃபி கிடைக்குமா?" என்று தலையை பிடித்த வண்ணம் கேட்க


"சரி சரி டென்ஷன் ஆகாத இரு கொண்டு வறேன்" என்றவர் ஐந்து நிமிடத்தில் மணக்க மணக்க பில்டர் காஃபியை கொண்டு வந்து நீட்ட வாங்கி ஒரு மிடறு குடித்தவள்
"உன்னோட காஃபிய குடிச்சா தலைவலி என்ன! எந்த வலியா இருந்தாலும் பறந்து போயிரும்" என்க


"ம் உனக்கு ஏதாவது காரியம் ஆகணும்னா தேனா.. பேசுவ கோபமா இருந்தா எரிஞ்சு விழுவ உனக்கு இப்போ என்ன வேணும் அத சொல்லு" என்று கீரையை அரிந்து கொண்டே கேட்க


"இல்ல.. எனக்கு எப்பவும் அரைச்சு வைப்பயே பூண்டு குழம்பு அது வேணும் செஞ்சு கொடுகுறையா?" என்றதும் "போடி என்னால முடியாது யாரு நின்னுகிட்டே அரைக்கிறது எனக்கு கையெல்லாம் வலிக்கிது நின்னுகிட்டே அரைச்சா இடுப்பு வேற வலிக்கும் வேணுன்னு ஒன்னு பண்ணுவோம் நா எல்லாத்தையும் எடுத்து கொடுக்குறேன் நீ அரைச்சு கொடு நா வச்சு தறேன்" என்க


"நானா... எனக்கு மட்டும் கை வலிக்காதா!" என்றதும் "ஏண்டி வயசு பொண்ணு நீ பண்ண மாட்ட வயசானவ நா நின்னுகிட்டு அரைச்சு உனக்கு மணக்க மணக்க செஞ்சு கொடுக்கணுமா நீ அரைச்சு கொடுக்குறதா இருந்தா நா செஞ்சு கொடுக்குறேன் உங்கப்பா கூட போன வாரமே கேட்டாரு நான் தான் முடியாதுன்னு மறுத்துட்டேன்" என்று கூற


"சரி எடுத்து கொடு அரைச்சு தரேன்" என அரைமனதுடன் ஒப்பு கொண்டவள் அருணா எடுத்து கொடுத்த இத்தியாதி பொருட்களை அம்மியில் வைத்து அரைத்து கொடுக்க மணக்க மணக்க குழம்பு வைத்து சாதம் வடித்து விட்டு சேகரிடம் சென்றார், கடைக்கு கிளம்பி கொண்டிருந்தவரிடம் "என்னங்க உங்களுக்கு மதியம் சாப்பாடு வைக்கவா" என்று கேட்க


"இல்லம்மா நா மதியம் வீட்டுக்கு வந்துருவேன் அப்றம் நளாவ இன்னைக்கு நிச்சயம் பண்ண வர்றாங்க கூடமட இருந்து வேலைய பாரு சரோஜா மட்டும் தனியா பாக்க முடியாது நேத்து நைட்டு மூர்த்தி சொன்னாரு உன்கிட்ட சொல்ல சொல்லி" என்று கூற


"சரிங்க நா கூட இருந்து பாத்துகிறேன் சாப்பிட வாங்க உங்களுக்கு பிடிச்ச பூண்டு குழம்பு அம்மியில அரைச்சு வச்சுருக்கேன்" என்று கூற


"யாரு நீயா அரைச்ச பொய் சொல்றாங்கப்பா கைவலிக்க அரைச்சு கொடுத்தது நானு" என்று அங்கு வந்த நிரஞ்சனா கூற பாவமாக அருணாவை பார்த்தார் சேகர் அவர் பார்வையை கண்டதும் நேற்று இரவு நடந்ததை நினைத்து சிரிப்பு வர சிரிப்பை அடக்கி கொண்டு "பயப்படாதீங்க அரைச்சு மட்டும் தான் கொடுத்தா சமைச்சது நான் தான்" என்று கூற நிம்மதி பெருமூச்சு விட்டவர் மகளை பார்க்க தந்தையை முறைத்த வண்ணம் இடையில் கைவைத்து நின்றிருந்தாள்


"சாரிடா உண்மைய சொல்லிடுறேன் நேத்து நைட்டு நிஜமாவே முடியல கண்ணு கலங்கி கொஞ்ச நேரத்துல என்னமோ பண்ணிருச்சு அவ்ளோ காரம் உப்பு ஒரு வாய் கூட வைக்க முடியல உன்னோட மனசு கஷ்டபட கூடாதுன்னு தான் நானும் அம்மாவும் பொய் சொன்னோம் சாரிடா" என்று கூற


கண்களில் குளம் போல கண்ணீர் தேங்கி வரவா வேண்டாமா என துறுத்தி கொண்டிருந்தது "சாரிப்பா அளவு தெரியாம பண்ணிட்டேன்" என்று குரல் தழுதழுக்க கூற ஆதரவாக மகளை அணைத்தவர் "ஆரம்பத்துல இப்டி தாண்டா இருக்கும், போக போக எல்லாத்தையும் கத்துகிவ அம்மா உனக்கு சொல்லி தருவாங்க" என்று சேகர் ஆறுதலாக கூறியதும் "சரி சரி சாப்பிட வாங்க நேரம் ஆகுது" என்ற அருணா "கண்ணை துடை எதுகெதுக்கு அழுக்கணும்னு இல்ல" என்று விட்டு முன்னே செல்ல மகளும் தந்தையும் பின்னே வந்தனர்.


மாலை நான்கு மணியிலிருந்தே நிச்சயத்திற்கு மாப்பிளை வீட்டிலும் பெண் வீட்டிலும் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று கொண்டிருந்தன...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top