பூவே வாய் திறவாயோ-04

Advertisement

நளாயினி வீட்டில் அருணா பேசி கொண்டிருக்க பக்கத்து வீட்டு வனிதா அரக்கப்பரக்க ஓடி வந்தாள் அவளை கண்ட நளாவின் தாய் சரோஜா "நீ ஏண்டி இப்டி ஓடி வர என்னாச்சு இன்னைக்கும் உன்னோட புருஷன் குடிச்சிட்டு வந்து அடிச்சானா" என்று கேட்க

"அதெல்லாம் இல்ல அந்த மனுஷன் குடிச்சிட்டு வந்து அடிச்சா நா சும்மா இருப்பேனா நாலு அடி சேத்து கொடுத்திருக்க மாட்டேன் ஒருநாள் அடிவாங்கிட்டா எல்லா நாளும் அவருக்கிட்ட அடிவாங்கிட்டு இருப்பாங்களா" என்றவள் "விஷயம் அது இல்ல சரோக்காஅருணா அக்கா எங்க?" என்று கேட்க

"உள்ள தான் இருக்கா" என்றதும் "சீக்கிரம் கூப்பிடுங்க" என்று கூற "அருணா அருணா இங்க வா வனிதா உன்கிட்ட ஏதோ சொல்லானுமா" என்று விட்டு சமையலறை புகுந்து கொள்ள வெளியே வந்த அருணா "என்ன வனிதா" என்று கேட்டதும் "அக்கா அடுப்புல ஏதாவது வச்சுட்டு மறந்து போய் வந்துடிங்களா வீட்டுகுள்ள இருந்து தீஞ்சு போன வாடை வருது ஒரே புகையா வேற இருக்கு உள்ள போக முடியல" என்றதும் "பாதகத்தி என்ன பண்ணி வச்சுறுகான்னு தெரியலையே கடவுளே இவ வேற உள்ள இருக்கா" என்று பதறி கொண்டு வீட்டிற்கு ஓடினார் அருணா

வீடு முழுதும் ஒரே புகைமண்டலமாக காட்சியளித்தது இருமி கொண்டே உள்ளே செல்ல சமையல் செய்கிறேன் பேர்வழி என அடுகளையை அலங்கோலமாக்கி வைத்திருந்தாள் நிரஞ்சனா கேஸை ஆப் செய்து கதவு ஜன்னல் என அனைத்தையும் திறந்து வைத்தவர் மகளை அழைத்து கொண்டு வெளியே வர "அம்மா இன்னும் ரெண்டு சப்பாத்தி தான் போடணும் அதுக்குள்ள இழுத்துட்டு வந்துட்ட" என்று கூற

"அடியேய் உன்ன என்ன பண்ண சொன்னேன் என்ன பண்ணி வச்சுருக்க இது தான் நீ வேலை செய்யிற லட்சணமா இப்டியா பண்ணுவா ஒரு வேலை உருப்படியா பண்ண தெரியிதா இப்டி கிச்சனையே நாஸ்தி பண்ணி வச்சுருக்கயே புகை எல்லாம் கிளியர் ஆன பிறகு தான் தெரியும் கிச்சன் எந்த லட்சணத்துல இருக்குன்னு பூஜை ரூம் மாதிரி வச்சுருந்தேன்" என்று வசைபாட

"நிறுத்தும்மா நீ தானே பண்ண சொன்ன இப்போ வந்து திட்டுற நான் தான் எனக்கு எதுவும் தெரியாதுன்னு முன்னாடியே உன்கிட்ட சொன்னேல எப்டி இருந்தாலும் சாப்பிடுவோம்னு நீ தானே சொன்ன" என்றவள் "போ நா சரோஜா ஆன்ட்டி வீட்டுக்கு போறேன் எனக்கு சாப்பாடு வேணாம் ஒன்னும் வேணாம் அங்கயே சாப்ட்டுகிறேன்" என்று கூற

"நீ தெளிவா தான் இருக்க தீஞ்சு போன வரட்டிய சாப்பிட முடியாதுன்னு இப்டி கோபமா பேசி நடிக்கிறய" என்றதும் "அது ஒன்னும் வரட்டி இல்ல சப்பாத்தி எவ்ளோ டேஸ்டா பண்ணிருக்கேன்னு கொஞ்ச நேரத்துல போய் சாப்ட்டு பார்த்துட்டு நீங்களே சொல்லுவீங்க பாருங்க" என்று கூறி விட்டு நளாயினி வீடு செல்ல

நாளாயினிக்கு அர்ச்சனை நடந்து கொண்டிருந்தது அறையில் மூலையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தவளின் அருகில் சென்று அமர்ந்தவள் "என்னப்பா என்னாச்சு அம்மா அடிச்சிட்டாங்களா அது எப்பவும் நடக்கிறது தானே என்னமோ பிறந்ததுலயிருந்து அடியே வாங்காத மாதிரி உக்காந்து அழுத்துட்டு இருக்குறவ நேத்து கூட பூரி கட்டையால வாங்குன இதுக்கெல்லாம் பீல் பண்ணலாமா" என்று கூற

"நா ஒன்னும் அதுக்கு அழுகல இவங்க அடிக்கிறதெல்லாம் ஒரு அடியா" என்றவள் "நாளைக்கு பொண்ணு பாக்க வர்றாரங்களாம் இப்போ வந்து சொல்றாங்க என்னோட கல்யாணத்துக்கு என்ன அவசரம்னு கேட்டதுக்கு கரண்டிய வச்சு அடிச்சா கூட பரவாயில்ல அட்வைஸ் பண்றாங்க அத தான் என்னால தாங்க முடியல" என்று விசும்பி கொண்டே கூற

"அடிப்பாவி" என்று வியந்தவள் "ஏ கல்யாணம் பண்ணிக்கிறதுல உனக்கு என்ன பிரச்சனை அதான் 23 வயசு ஆகிருச்சில்ல இப்போ கல்யாணம் பண்ணாம பிறகு எப்போ கல்யாணம் பண்ண போற கிழவியான பிறகா?" என்று கேட்க

"கொஞ்சம் புத்தி மதி சொல்லு நிரு இப்போ கல்யாணம் பண்ணாம எப்ப பண்ண போறாலம் இவளுக்கடுத்து அவன் வேற இருக்கான் அவனுக்கும் வயசு ஏறிகிட்டே போகுதா இல்லையா தங்கச்சிக்கு கல்யாணம் பண்ண பிறகு தான் கல்யாணம்னு ஒத்த கால்ல நிக்கிறான்" என அறைக்கு வந்த சரோஜா கூற

"அவன யாரு ஒத்த கால்ல நிக்க சொன்னது அதான் ரெண்டு காலும் நல்லா தானே இருக்கு நல்லாவே நிக்கலாமே" என்றவள் "அவனுக்கு வேணா கல்யாணம் பண்ணுங்க எனக்கு வேணாம் இன்னும் ஒரு ரெண்டு வருஷம் போகட்டும்" என்று கூறியது தான் தாமதம் "எடு விளக்கமாத்த இன்னும் ரெண்டு வருஷமா பொம்பளை பிள்ளைய காலகலத்துல கரை சேத்துரனும் அது தான் நல்லது பொண்ணா பிறந்தா இதெல்லாம் நடக்குறது தான் ஏ நா கல்யாணம் பண்ணிட்டு உங்கப்பா கூட குடும்பம் நடத்தலையா என்ன, எங்கப்பா அம்மா என்ன கேட்டா கல்யாணம் பண்ணி வச்சாங்க நா சந்தோஷமா வாழலையா" என்றவர் "அடியேய் எவனையாவது லவ் பண்றயா அப்டி ஏதாவது இருந்துச்சு அந்த நினைப்ப அடியோட அழிச்சிறு நாளைக்கு மாப்பிளை வீட்டுகாரங்க நிச்சயம் பண்ண வர்றாங்க பையன் தங்கமானவன் சொந்தமா திருச்சியில தொழில் பண்றான் அம்மா அப்பா ரொம்ப நல்லவங்க நாத்தனார்ன்னு யாரும் இல்ல உன்ன அவங்க மகளா வச்சு தாங்குவாங்க யாருக்கு கிடைக்கும் இந்த மாதிரி சம்பந்தம்" என்று சிலாகித்து கூற

"அப்டின்னா அப்பாவ டிவோர்ஸ் பண்ணிட்டு நீயே அந்த மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்கோ" என்றதும் "என்னடி சொன்னா உங்கப்பன் மவளே வாய் கொழுப்பு ஜாஸ்தி ஆகிருச்சு மரியாதையா பேச கத்துக்கோ உங்கப்பா சொல்ல சொன்னாரு சொல்லிட்டேன் அவ்ளோ தான், அவருகிட்ட கல்யாணம் வேணான்னு சொல்லி பாரேன் வாய் சவடலாம் எல்லாம் என்கிட்ட தான் இந்த வீட்டுல உனக்கு தொட்டுக்க ஊறுகா நான் தானே எல்லா என்கிட்ட தான் எடுபடும்" என்றவர் நிரு அவளுக்கு எடுத்து சொல்லும்மா நல்ல இடம் நல்ல சம்பந்தம் வேற"என கூறிவிட்டு சென்று விட

அவர் சென்றதும் வாய் விட்டு சிரித்தவளை கோபத்துடன் முறைத்தாள் நளா |என்னோட நிலைமை உனக்கு சிரிப்பா இருக்கா உனக்கும் ஒரு நாள் கல்யாணம் பண்ணி தானே ஆகணும் அப்ப பாக்குறேன் நீ என்ன சொல்றேன்னு" என்று கூற

"ஏய் சாபமெல்லாம் கொடுக்காத அப்றம் பழிக்காம போனா நீ ரொம்ப பீல் பண்ணுவ பாத்துக்கோ" என்றவள் "நா ஒன்னும் உன்ன நினைச்சு சிரிக்கல ஆன்ட்டிய கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னல அத நினைச்சு பாத்தேன் சிரிப்பு வந்துருச்சு" என்று கூற நளாவும் சிரித்து விட்டாள்

"ம் இப்போ பாக்குறதுக்கு எப்டி இருக்கு தெரியுமா" என்றவள் முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்து அவள் முன் காட்டினாள் "இதுக்கு போய் அழுதுட்டு இருப்பாங்களா இப்டி சிரிச்சுகிட்டே இரு, நாளைக்கு மாப்பிளை வீட்டுகாரங்க நிச்சயம் பண்ண வர்றாங்க ஆனா உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல அது தானே பிரச்சனை அங்கிள் ஆன்ட்டி தானே உன்ன வற்புறுத்தி சம்மதிக்க வைப்பாங்க ஆனா மாப்பிளை வீட்டுகாரங்க அப்டியில்லையே அவங்க முன்னாடியே உனக்கு கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு சொல்லிரு ப்ராப்ளம் சால்வ்" என்று சுடிதாரில் இல்லாத இல்லாத காலரை இருப்பது போல தூக்கி காட்டி கெத்தாக கூற

"என் தங்கம்" என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டவள் "தங்க்ஸ்டி இதுக்கு தான் ஒரு அறிவாளிய பக்கத்துல வச்சுக்கிரணும்னு சொல்றது நீ தான் என்னோட ஆலோசனை மந்திரி" என்று கூற

"ம் ஐஸ் வைக்காத எனக்கு ஐஸ் வாங்கி கொடு" என்றதும் "இந்த நேரத்துலயா?" என்று கேட்க
"என்ன இந்த நேரத்துலயான்னு ஷாக் ஆகுற மணி ஏழு தானே ஆகுது கிளம்பு பக்கத்துல இருக்குற ஐஸ்க்ரீம் பார்லர்ல தான் எனக்கு வேணும்" என்று பிடிவாதமாக கூற "சரி நா அம்மாகிட்ட சொல்லிட்டு வறேன்" என்று எழுந்து சென்றாள் நளாயினி

கடையையே இரண்டாக புரட்டி போட்டு கொண்டிருந்தான் பாலா தன் வருங்கால மனைவிக்கு இன்னும் புடவை எடுத்த பாடில்லை ஒவ்வொன்றாக எடுத்து காண்பிக்க வேண்டாம் என்று நிராகரித்து கொண்டிருந்தான் பாலா "டேய் மகனே சீக்கிரம் எடுடா டைம் ஆச்சு" என்று கூற

"இருங்கம்மா அவள நா பாத்தது கூட இல்ல நீங்க சொன்னத வச்சு எது நல்லா இருக்கும்னு பாத்து எடுக்க வேணாமா போட்டோ காட்ட மாட்டேன்னு சொல்லட்டிங்க பின்ன அவளுக்கு பொருத்தமா எப்டி எடுக்குறாதாம்" என நொடித்து கொண்டவன் "அந்த பிங்க் கலர் எடுங்க" என்றதும் பாலா கூறிய நிறத்தில் எடுத்து கொடுத்த பெண்மணி "சார் பொண்ணுங்க கூட இவ்ளோ நேரம் எடுக்க மாட்டாங்க சீக்கிரம் எடுங்க சார்| என்று சிரித்து கொண்டே கூறினாலும் அவளின் அவசரம் அவர்களுக்கு புரிந்தது

கடை உரிமையாளரிடம் பேசி விட்டு வந்த வம்சி "என்ன சித்தி எடுத்தாச்சா! கிளம்பலாமா?" என்று கேட்க
"இன்னும் இல்லடா எதை எடுத்து காட்டுனாலும் நல்லா இல்ல வேணாம்னு சொல்றான் சீக்கிரம் எடுக்க சொல்லுடா நேரமாகுது அண்ணி வேற திட்டுவாங்க" என்று கூற

அவன் முதுகில் லேசாக தட்டியவன் "சித்தி சொன்னது சரி தான் என்னமோ நானே செலக்ட் பண்ணுவேன்னு விராப்பா சொன்ன இது தான் செலக்ட் பண்ற விதமா இன்னும் கொஞ்ச நேரத்துல கடைய க்ளோஸ் பண்ண போறாங்க நீ எடுக்குறய இல்ல நா செலக்ட் பண்ணவா" என்று கேட்க

"இல்ல நானே செலக்ட் பண்ணிட்டேன் இதோ இந்த புடவை அவளுக்கு நல்லா இருக்கும்" என்றவன் "இதை பில் போட்டுருங்க" என்று விட்டு "சரி வாங்க போகலாம் அடுத்து எங்க நகை கடைக்கு தானே?" என்று கேட்க

"இனி எங்க போறது இப்போவே நேரம் ஆச்சு நாளைக்கு எடுத்துக்கலாம் ஈவ்னிங் தானே என்கேஜ்மெண்ட்" என்ற ரஞ்சனி வம்சியிடம் "நாளைக்கு இவன கூட்டிட்டு வந்து அளவு பாத்து எடுடா பொண்ணோட விரல் அளவு மோதிரம் இதோ இது தான் ரெண்டு பேருக்கும் ஒரே டிசைன்ல எடுத்துருங்க அப்றம் பூ மாலை மட்டும் வாங்கணும்னு நாளைக்கு மதியம் சித்தப்பாவ அனுப்பி வாங்கிகலாம் இப்போ கிளம்பலாம் அக்கா மட்டும் தனியா எல்லா வேலையையும் பாத்துட்டு இருப்பாங்க" என்று கூற நால்வரும் காரில் ஏறியதும் கார் வேகமெடுத்தது

அருண் ஐஸ்க்ரீம் பார்லரில் இருவர் மட்டும் அமரும் இருக்கையில் அமர்ந்து கொண்டு வெண்ணிலாவை ஃப்ளேவரை ரசித்து ருசித்து சப்புகொட்டி உண்டு கொண்டிருக்க அவளையே பார்த்து கொண்டிருந்தாள் நளா "இன்னைக்கு காலேஜ்ல நடந்துகிட்ட விதத்துக்கு இப்போ நடந்துகிற விதத்துக்கும் கொஞ்சமாவது சம்மந்தம் இருக்கா இவ என்ன டிசைன்னே தெரியலயே" என்று எண்ணியவள் "இன்னொன்னு வேணா சொல்லட்டுமா?" என்று கேட்டதும் "போதும் இதுக்கு மேல சாப்பிட முடியாது" என்று கூற

"ஏண்டி இன்னும் ஒன்னு சாப்ட்டா ரவுண்டா பத்து கணக்காகிரும் நைட்டு சாப்பிட வேண்டிய அவசியம் இருக்காதுல்ல" என்று கிண்டல் செய்ய

"இல்லப்பா போதும் திருப்தியா சாப்டேன்" என்றதும் "ஒரு ஐஸ்க்ரீமோட முடிஞ்சிரும்னு நினைச்சு பணம் எடுத்துட்டு வந்தா இப்டி மொத்த உண்டியலையும் காலி பண்ணிட்டாயேடி" என்று நொடித்து கொள்ள

"ஏய் எவ்ளோ பெரிய ஐடியா சொல்லிருக்கேன் அதுக்கு இதுவே கொஞ்சம் தான் மீதி நாளைக்கு பாதுக்கலாம்னு இருந்தா நீ ரொம்ப தான் அலுத்துகிற இன்னும் என்கிட்ட நிறைய ஐடியா இருக்கு ஒருவேளை உன்னோட விருப்பத்தை மாப்பிள்ளை வீட்டுகாரங்க மதிக்காம கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டா என்ன செய்வ?" என்று அசல்டாக கூற
"ஏய் என்னடி இப்டி சொல்ற அப்போ இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்குமா?" என்று பயத்துடன் நளா கேட்க

"முதல பில் செட்டில் பண்ணு பாவம் ரொம்ப நேரம் வெய்ட் பண்ணிட்டு இருக்காரு பாரு" என்றதும் தான் அருகில் நின்று கொண்டிருந்த கடை ஊழியரை பார்த்தாள், அவசரமாக பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு நிருவின் முகம் பார்க்க "சரி வா கிளம்பலாம் டைம் ஆச்சு" என்று கூற

"ஏய் நாளைக்கு நடக்குற நிச்சயத்தை எப்டி நிறுத்துறது நீ சொல்ற மாதிரி கல்யாணம் நடந்துருச்சுன்னா என்னடி பண்றது இன்னும் கொஞ்ச நாள் உன்கூட சேந்து இருக்கலாம்னு நினைச்சேன் அது நடக்காது போல இருக்கே" என்று சலித்து கொள்ள

"ஆஹா என்ன ஒரு பாசம் உன்னோட பாசம் எனக்கு தெரியாதுன்னா நினைக்கிற" என்றவள் "போதும் இப்போ தான் ஒன்பது ஐஸ்க்ரீம் சாப்டேன் இதுக்கு மேல வயிறும் தாங்காது உடம்பும் தாங்காது குளிர் ஜுரம் வந்துரும் நாளைக்கு சொல்றேன் ஈவ்னிங் தானே வர்றாங்க பாத்துக்கலாம் இப்போ வீட்டுக்கு போலாமா?" என்க

"சரி" என அரைமனதுடன் கூற இருவரும் இல்லம் நோக்கி நடைபோட்டனர், அருணா சமையலறையை சுத்தம் செய்த வண்ணம் தன் மகளை அர்ச்சித்து கொண்டிருந்தார் "சமையல் செய்ய சொன்னா இப்டி பண்ணி வச்சுருக்காளே இவள செய்ய சொல்லிட்டு போனேனே என்ன சொல்லணும், பிள்ளை கத்துகட்டும்னு விட்டுட்டு போனா... எனக்கு ஒரு வேலைக்கு இரு வேலையா பண்ணி வச்சுருக்கா வரட்டும் அவருக்கும் இருக்கு ரொம்ப செல்லம் கொடுத்து கெடுத்து வச்சுருக்காறு" என சந்திர சேகருக்கும் சேர்ந்து அர்ச்சனை நடக்க

கடிகாரத்தில் மணி எட்டு என காட்டியது "நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை நீருக்குள் மூழ்கிடும் தாமரை..." என தனக்கு பிடித்த பாடலை முணுமுணுத்தபடி ஆடி கொண்டே உள்ளே நுழைந்தவள் "என்னம்மா என்னோட சமையல் எப்டி இருக்கு டேஸ்ட் பண்ணி பாத்தியா" என குதூகலத்துடன் நிரஞ்சனா கேட்க

"இன்னும் இல்லமா அப்பா வந்த பிறகு நாமா முணுபேரும் ஒண்ணா உக்காந்து சாப்பிடலாமே இப்போ என்ன அவசரம்" என போலியாய் புன்னகைத்து கூற

"அதுவும் சரி தான் அப்பா தான் என்னோட சமையலை பாராட்டுவார் நீ வேணா பாரு சாப்ட்டு பாத்துட்டு வாயடைச்சு போவாரு என்னோட மகளா சமைச்சதுன்னு" என்று பெருமை பேச

"அதுக்கு தானே மகளே காத்துட்டு இருக்கேன்" என்று சிரித்து கொண்டே கூற அந்த சிரிப்பின் அர்த்தம் அவளுக்கு புரியவில்லை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top