பூவே வாய் திறவாயோ -03

Advertisement

அறைக்கு வந்த பாலா யோசனை செய்த வண்ணம் அமர்ந்து கொண்டிருக்க அவனை கண்ட வம்சி "என்னடா ரொம்ப தீவிரமா யோசனை பண்ணுற மாதிரி இருக்கு என்கிட்ட சொன்னா நானும் யோசிப்பேன்ல" என்று கூற

"அது ஒன்னும் இல்லடா அண்ணா" என்றதும் "என்னது அண்ணாவா!" என்று அதிசயித்தவன் "டேய் இப்டி திடீர்ன்னு அதிர்ச்சியெல்லாம் கொடுக்காத என்ன சொல்லணுமோ நேரா சொல்லு ஐஸ் வைக்காத" என்று சொல்ல

"இல்ல பொண்ண நா பாக்கவே இல்ல பெரியவங்க போய் பாத்து பேசிட்டு வந்துட்டாங்க ஒருவேளை பொண்ணு நேர்ல பாக்கும் போது முட்டைக்கோஸ் மாதிரி இருந்துச்சுன்னா என்ன பண்ண" என்று அப்பாவியாய் கேட்க
அவன் பேச்சில் வயிற்றை பிடித்து கொண்டு வம்சி கிருஷ்ணா சிரிக்க "இப்போ எதுக்குடா சிரிக்கிற சொல்லிட்டு சிரி" என்று கேட்க

"நீ சொன்னத நினைச்சு பாத்தேன் சிரிப்பு வந்துருச்சு நீயோ ஈர்க்குச்சி மாதிரி இருக்க ஒருவேளை நீ சொன்ன மாதிரி பொண்ணு முட்டைக்கோஸ் மாதிரி இருந்து நீங்க ரெண்டுபேரும் ஜோடியா நிக்கிறத நினைச்சு பாத்தேனா சிரிப்ப கன்ரோல் பண்ண முடியல நீ வேணா நினைச்சு பாரேன்" என்க

"டேய் ஓவரா கலாய்கிற நீ நினைக்கிற மாதிரி எல்லாம் இருக்காது ஒருவேளை அப்டி இருக்குமோன்னு யோசனை தான் பண்ணேனே தவிர அவ அப்படியெல்லாம் இருக்க மாட்டா" என்று ரோஷத்துடன் கூற

"சரி விடு விதி அப்டியிருந்துச்சுன்னா யாராலா மாத்த முடியும் எதுவா இருந்தாலும் ஏத்துக்கோ" என்றதும் "உன்கிட்ட சொன்னேன் பாரு என்ன சொல்லணும்" என்றவன் "எனக்கு ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணுறயா?" என்றான் பாலா

"என்ன பண்ணனும் அந்த பொண்ண நேர்ல பாக்கணுமா?"

"இல்ல அதெல்லாம் வேணாம் அந்த பொண்ணோட போட்டோ மட்டும் அம்மா கிட்ட கேட்டு வாங்கிட்டு வாயேன் பாக்கணும் போல இருக்கு" என்று கூற

"என்னால முடியாது அதான் நாளைக்கு நேர்லயே பாக்க போறயே அப்பறம் என்ன போட்டோ கேக்குற" என்றான் வம்சி கிருஷ்ணா

"நாளைக்கு பாக்க போறேன் தான்..." என வார்த்தையை இழுத்தவன் "இருந்தாலும் போட்டோல பாத்துட்டா கொஞ்சம் ரிலாக்ஸ்ஸா இருப்பேன்" என்றவன் "சரி இருக்கட்டும் பொண்ணு எப்டி இருந்தாலும் ஏத்துக்க வேண்டியது தான்" என்று கூறி தனக்கு தானே சமாதானம் சொல்லி கொள்ள

"முட்டைக்கோஸ் மாதிரி இருந்தாலும் பரவாயில்லயா" என்றான் வம்சி

"பரவாயில்ல எனக்கு ஓகே தான்" என்றவன் "சரி வா அத்தை சாப்பிட கூட்டிட்டு வர சொன்னாங்க" என்று கூற இருவரும் கீழே இறங்கி வந்தனர்

உடல் மட்டும் வகுப்பறையில் இருக்க உள்ளமோ காலையில் நடந்த நிகழ்வை அசைபோட்டபடி அவனையே சுற்றி வந்து இம்சித்தன "ஏய் நிரு உன்னோட கவனம் எங்கடி இருக்கு மேடம் உன்ன தான் பாக்குறாங்க கிளாஸ கவனி" என்று நளா காதில் கிசுகிசுக்க அவள் கூறியது அவளுக்கு கேட்டதாகவே தெரியவில்லை அசையாமல் கன்னத்தில் கைவைத்தபடி கரும்பலகையை வெறித்து கொண்டிருந்தாள் நிரஞ்சனா

அவளை கவனித்த பேராசிரியை கல்பனா "நிரஞ்சனா" என்று அழைக்க எந்த பதிலும் இல்லை "அவளை கூப்பிடு" என்று நளாவிடம் கூற
"நிரு மேம் கூப்பிடுறாங்க" என்றதும் வேகமாக எழுந்தவள் "யெஸ் மேம்" என்க

"நா இப்போ என்ன சொல்லிட்டு இருந்தேன்னு சொல்லு பாப்போம்" என்று கேட்க

திருதிருவென முழித்தவள் நளாவை பார்க்க அவ்ளோ பரிதாபமாக அவளை பார்த்து கொண்டிருந்தாள் "அவள என்ன பாக்குற சொல்லு நா என்ன சொல்லிட்டு இருந்தேன்" என்று மீண்டும் கேட்க "மேம் அது வந்து..." என தயங்கியவள் "சாரி மேம் நா கவனிக்கல" என்க

"நானும் கிளாஸ்க்குள்ள என்ட்ரி ஆனதுல இருந்து பாத்துட்டு தான் இருக்கேன் உன்னோட கவனம் இங்க இல்ல நெக்ஸ்ட் மன்த் செமஸ்டர் வருது அதுக்குள்ள சிலபல்ஸ் முடிக்கணும்னு ராத்திரி முழிச்சுக்கிட்டு இருந்து பிரிப்பர் பண்ணிட்டு வந்து கிளாஸ் எடுத்தா நீ முழிச்சுக்கிட்டே பகல் கனவு காணுற" என்றவர் "இன்னைக்கு முழுக்க நீ கிளாஸ் ரூம் வர கூடாது ஸ்டாப் எல்லார்க்கிட்டயும் நா சொல்லிக்கிறேன் வெளிய போ" என்று கோபமாக கூற

தன் செயலை எண்ணி நொந்துகொண்டே வேகமாக வெளியே வந்தவள் மணாவிகளுக்கென ஒதுக்கப்பட்ட ஓய்வறையில் வந்து அமர்ந்து கொண்டாள் "எல்லாம் அவனால வந்தது ச்சே இன்னைக்கு எனக்கு நேரமே சரியில்ல எல்லாம் என்ன சொல்லணும் அவன பாக்க போனது என்னோட தப்பு தான் இனி இதுவேற எல்லா ஸ்டாப் கிட்டயும் என்ன மாதிரி சொல்லிவைக்க போகுதோ தெரியல அவங்க கேக்குற கேள்விக்கு வேற பதில் சொல்லணும் பதில் சொல்றத விட காதுல ரத்தம் வர்ற அளவுக்கு அட்வைஸ் வேற பண்ணுவாங்களே கால கொடுமடா சாமி" என புலம்பி கொண்டிருக்க

அருகில் வந்து அமர்ந்தாள் நளாயினி "என்னப்பா ஆச்சு உனக்கு Mr கிருஷ்ணாவ பாத்துட்டு வந்ததுல இருந்து உன்னோட முகமே சரியில்ல அவரு ஏதாவது சொன்னாரா என்கிட்ட சொன்னாதானே என்னன்னு எனக்கு தெரியும் இப்டி அமைதியா இருந்தா எப்டி" என்று கூற

"இப்போ எதுக்கு அந்த பேச்சு, விடு அவர் எதுவும் சொல்லல நா வேற ஒரு யோசனையில இருந்தேன்" என்றவள் "சரி மேம் என்ன சொன்னாங்க" என்று கேட்க

"ம் நூறு தடவை இந்த தியரிய எழுதிட்டு வர சொல்லி அசைன்மெண்ட் கொடுத்துருக்காங்க நீ தான் வேகமா கிளம்பி வந்துடயே அவங்க அடுத்து என்ன சொல்றாங்கன்னு கூட கேக்காம இந்தா மண்டே சப்மிட் பண்ணனுமா இல்லன்னா அதுக்கும் சேத்து பனிஸ்மெண்ட் டபுளாகுமா சொல்ல சொன்னாங்க" என்றவள் "சரி நீ இங்கயே இரு நா கிளாஸ்க்கு போறேன் இல்லன்னா அந்த சருக்கு மண்டை எல்லார் முன்னாடியும் வச்சு மானத்த வாங்கிரும்" என்று கூறிவிட்டு வேகமாக சென்று விட

தலையில் கைவைத்தவண்ணம் கண்களை மூடி சுவரில் சாய்ந்த படி அமர்ந்து கொண்டாள், கல்லூரி நூலகத்தில் அமர்ந்து அன்றைய பொழுதை நெட்டி தள்ளியவள் நான்கு மணியாகி வகுப்பு முடிந்தும் நளா வரவில்லை என்று பொறுமையை இழுத்து பிடித்து காத்து கொண்டிருக்க சிரித்த முகத்துடன் வந்தவளை ஏறிட்டவள் "ஏண்டி கிளாஸ் முடிஞ்சு வர்றதுக்கு இவ்ளோ நேரமா" என்றவள் "எவ்ளோ நேரம் உனக்காக வெய்ட் பண்ணிட்டு இருக்குறது" என்று எறிந்து விழ

"ஏம்ப்பா இப்டி கோபப்படுற சவிதா ஒரு ஜோக் சொன்னாளா அத கேட்டு சிரிச்சுட்டு பேசிட்டு வர்றதுக்கு லேட் ஆகிருச்சு" என்றதும் அவளை முறைக்க "முறைக்காத நீயும் அந்த ஜோக் கேட்டா கோபத்தை விட்டுட்டு சிரிப்ப நான் வேணா சொல்லட்டுமா" என கேட்க

அவளை எரித்து விடுவது போல பார்க்க "சரி சரி கோவிச்சுக்காத உனக்கு என்ன வேணும் சொல்லு நா வாங்கி தரேன்" என்றவள் "நீ ரொம்ப கோபமா இருக்கு சோ ஜில்லுன்னு கூல்ட்ரிங்ஸ் வாங்கிட்டு வரட்டுமா" என சொல்ல

"எனக்கு எதுவும் வேணாம் வீட்டுக்கு எப்படா போவோம்னு இருக்கு இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்தேனா டென்ஷன்ல தலையே வெடிச்சிரும்" என்றவள் "சீக்கிரம் வா நா வண்டிய எடுத்துட்டு வறேன்" என்று கூறிவிட்டு செல்ல

"இவளுக்கு மட்டும் ஏன் தான் இப்டி கோபம் வருதோ உள்ளே ஏதோ நடந்துருக்கு சொல்ல மாட்டிங்கிறா இருக்கட்டும் பாத்துகிறேன்" என எண்ணி கொண்டவள் அவள் மீண்டும் அழைப்பத்திற்குள் சென்று ஆஜராக வேண்டும் என்று ஓட்டமும் நடையுமாக சென்று ஸ்கூட்டியில் ஏறிக்கொள்ள மொத்த கோபத்தையும் ஹேன்ட்பரில் காட்ட ஸ்கூட்டி மின்னல் வேகத்தில் சென்றது

ரஞ்சனியும் கோபாலும் நிச்சயம் செய்வதற்கு தேவையான பொருள்களை வாங்குவதற்கு தியாகராயா கடைவீதிக்கு செல்ல, செல்லும் பாதி வழியிலேயே கார் பஞ்சராகி பாவமாய் காட்சியளித்தது வம்சிக்கு போன் செய்த ரஞ்சனி "டேய் கிருஷ்ணா வண்டி பஞ்சர் ஆகிருச்சு நடுவழியில நிக்கிறோம் நீ கார் எடுத்துட்டு சீக்கிரம் வாடா நல்ல நேரம் முடியிரத்துக்குள்ள நிச்சயதார்த்த புடைவை எடுக்கணும் மாமாகிட்ட சொல்லிட்டு சீக்கிரம் வாடா கண்ணா" என்று கூற

"சரி சித்தி நீங்க எங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க எனக்கு இப்போ வேலை எதுவுமில்ல சீக்கிரம் வந்துறேன்" என்றதும் ரஞ்சனி இடத்தை கூற "சரி சித்தி பத்து நிமிஷத்துல நீங்க இருக்குற இடத்துக்கு வந்துடுறேன்" என்று அணைப்பை துண்டித்தவன் தனபதியிடம் கூறிவிட்டு பாலாவை அழைத்து கொண்டு வேகமாக கிளம்பினான்

வீடு வந்ததும் ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு வேகமாக உள்ளே நுழைந்த நிரஞ்சனா பேக்கை வீசி எறிந்து விட்டு அறைக்குள் சென்று முடங்கி கொள்ள அவள் செயலை கண்ட அருணா "ஏய் நிரு என்ன பழக்கம் இது படிக்கிற புத்தகம் இருக்குற பைய இப்டி தூக்கி விசிட்டு போறது என்னாச்சு எப்பவும் இப்பிடி பண்ண மாட்டியே காலேஜ்ல ஏதாவது ப்ராப்ளமா" என அவள் அருகில் அமர்ந்த அருணா கேட்க

"அதெல்லாம் ஒன்னுமில்ல கொஞ்ச நேரம் தனியா இருக்க விடுங்க" என்று கோபமாக கூறவும் அருணாவின் முகம் சுருங்கி போனது அமைதியாக எழுந்து சென்று விட்டார்

இரவு உணவை தயார் செய்து கொண்டிருக்க பின்னோடு வந்து அருணாவை அணைத்தவள் "சாரிம்மா ஏதோ டென்ஷன்ல கோபமா பேசிட்டேன் ப்ளீஸ் மன்னிச்சிறு" என்று கேட்க

எதுவும் பேசாமல் அமைதியாக சப்பாத்திக்கு மாவு பிசைந்து கொண்டிருந்த அருணாவை தன் புறம் திருப்பியவள் "அதான் சாரி கேக்கிறேன்ல பின்ன எதுக்கு இப்டி மூஞ்சிய தூக்கி வச்சுருக்க சின்ன பிள்ளை ஏதோ தெரியாம பேசிட்டேன் மன்னிச்சுட்டேன்னு ஒரு வார்த்தை சொன்னா தான் என்னவாம்" என்று பாவமாய் கேட்க

"நா மன்னிக்கனுமனா இன்னைக்கு நைட்டு நீ தான் டின்னர் ரெடி பண்ணுற சரியா" என்றதும் "அம்மா.. நானா... எனக்கு என்ன தெரியும்? சமையல் கட்டு பக்கம் தண்ணி குடிக்க மட்டும் தான் வருவேன் என்ன நம்பி இவ்ளோ பெரிய பொறுப்பை கொடுக்கிறயே" என்று கூற

"எனக்கு தெரியாது நீ எப்டி சமைச்சாலும் சரி சாப்பிடுறதுக்கு நானும் அப்பாவும் ரெடி எதுவும் சொல்ல மாட்டோம் நீ தான் சமைக்கிற நாளைக்கு போற இடத்துல இப்டி சொல்லி பாரு எனக்கு நல்ல மரியாதை கிடைக்கும் இதெல்லாம் எப்ப கத்துகிறது" என்றவர் "இந்தா மாவு பிசைஞ்சுட்டேன் குருமா வச்சு சப்பாத்தி ரெடி பண்ணி வை இப்போதான் யூ ட்யூப் இருக்கே அதுல பாத்து பண்ணு நா நளா வீடு வரைக்கும் போய்ட்டு வறேன்" என்று செல்ல

"அம்மா அம்மா எனக்கு எதுவும் தெரியாதும்மா..." என்று கத்த "கத்துக்கோ..!" என்று விட்டு சென்றுவிட எதை வைத்து சமையல் செய்வது என முழித்து கொண்டு நின்று கொண்டிருந்தாள் நிரஞ்சனா

நிச்சயத்திற்கு தேவையான இதர பொருட்களை வாங்கியவர்கள் புடவை எடுக்க வழக்கமாக செல்லும் கடைக்கு செல்ல கடையின் முதலாளி வாசல் வரை வந்து வரவேற்றார் "வாங்க கிருஷ்ணா தம்பி புடவை வேணும்னு சொல்லிருந்தா நானே வீட்டுக்கு அனுப்பி வச்சிருப்பேனே நீங்க இவ்ளோ தூரம் வர வேண்டிய அவசியம் இருந்திருக்காதே" என்று பணிவும் மரியாதையும் கலந்து கூற

"அங்கிள் நாளைக்கு பாலாக்கு நிச்சயம் பண்ண போறாங்க சோ பார்ச்சேஸ் பண்ண வந்தோம் சரி வந்துட்டோமே கையோட கடைக்கே வந்து எடுத்துட்டு போலாம்னு பெரியவங்க சொன்னாங்க அதான் கூட்டிட்டு வந்துட்டேன் புடவை செக்சன் எங்க இருக்கு அங்கிள் புது காலெக்ஸ்னா வேணுமாம்" என்று கூற

"அதுகென்ன தம்பி தாத்தா காலத்துல இருந்து உங்க குடும்பம் நம்மாளுக்கு பழக்கம் உங்களுக்கு இல்லாததா" என்றவர் கடை ஊழியரை அழைத்து அவர்களை அழைத்து செல்லுமாறு கூற "வாங்க சார் மேல ரெண்டாவது மாடி" என்று பணியாளர் கூற

"சித்தி நீங்க முன்னாடி போங்க நா பேசிட்டு வறேன்" என்றதும் "சீக்கிரம் வாடா நீ தான் புடவை நல்லா செலக்ட் பண்ணுவேன்னு அக்கா சொன்னாங்க இவனுக்கு எதுவும் தெரியாது நல்லா சாப்பிடுறது தவிர" என்று விட்டு செல்ல பாலா ரஞ்சனியை முறைத்த கொண்டு நின்றான்

வம்சி "சரி விடு உண்மை கசக்க தான் செய்யும் நீ போ நா வறேன்" என்க "டேய் அண்ணா எனக்கு ஒரு நாள் வரும் அப்போ பாத்துகிறேன் நீ ஒன்னும் செலக்ட் பண்ண வேணாம் என்னோட பொண்டாட்டிக்கு நானே செலக்ட் பண்ணிக்கிறேன் நீ பேசி முடிச்சிட்டு வா எப்டி இருந்தாலும் அவ என்னோட செலெக்ஷ்ன ஏத்துப்பா" என கூறிவிட்டு வேகமாக செல்ல புன்னகைதபடி அவன் செல்வதை பார்த்தவன் கடை உரிமையாளரிடம் பேச்சை தொடர்ந்தான்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top