பூவே வாய் திறவாயோ - 02

Advertisement

அறையை விட்டு வேகமாக வெளியே வந்த நிரஞ்சனா "ஏய் வாடி போலாம்" என்றதும் "என்னடி பேசிட்டியா" என்றவள் "ஆமா உன்னோட முகம் எதுக்கு வேர்த்து இருக்கு என்னாச்சுப்பா!" என நளா கேட்க

"கேள்வி கேக்காம வாடி" என்று எரிந்து விழுந்தவள் "ச்சே பக்கா டிசன்டா இருக்கானே தவிர கேரக்டர் சுத்த மோசம் சரியா தான் பேர் வச்சுருக்காங்க கிருஷ்ணாவாம் கிருஷ்ணா" என புலம்பி கொண்டே வெளியே வந்தவள் மெதுவாக எதிரில் இருந்த கடையை எட்டிப்பார்க்க வெளியே நின்று பேசி கொண்டிருந்தார் சந்திரசேகர் அவரை கண்டதும் முன்னே சென்ற நளாவை இழுத்தவள் "அப்பா இருக்காருடி அவரு உள்ள போன பிறகு போலாம்" என்று கூறி செக்யூரிட்டி அறையின் சுவர் ஓரமாக மறைந்தவாறு இருவரும் நின்று கொண்டனர்


வம்சியை பார்த்து கொண்டிருந்த பாலா "விரல் வச்சா கடிக்க தெரியாத பச்ச மண்ணுன்னு நினைச்சேன் ஆனா நீ வேற" என்றவன் "எல்லாரும் நல்ல பிள்ளைன்னு நினைச்சுட்டு இருக்காங்க நீ எந்த அளவுக்கு நல்லவன்னு இன்னைக்கு நல்லா பாத்துட்டேன்" என கூற

"ப்ச் உனக்கு என்ன வேணும் எதுக்கு வந்த" என்றான் வம்சி "நீ தான் சொல்லாம கொள்ளாம கிளம்பி வந்துடயே அதான் உன்ன கூட்டிட்டு வரசொன்னாங்க" என்று கூற

"எனக்கு நிறைய வேலை இருக்கு எதுவா இருந்தாலும் நைட்டு பேசிக்கலாம்னு அம்மாகிட்ட சொல்லு" என்றதும் "கூப்டுட்டு வர சொன்னது பெரியம்மா இல்ல அத்தை" என்றான் பாலா

"அத்தையா...! அவங்க எப்போ வந்தாங்க?"

"இன்னைக்கு காலையில தான் வந்தாங்க வந்ததும் உன்ன தான் கேட்டாங்க நீ கிளம்பி ஆபிஸ் வந்துட்டன்னு சொன்னதும் கையோட உன்ன கூட்டிட்டு வர சொன்னாங்க சீக்கிரம் வா போலாம் எல்லாரும் உனக்காக தான் வெய்ட் பண்றாங்க" என்று கூற

"எல்லாரும்னா?" என்று புரியாமல் கேட்டான் வம்சி

"எல்லாரும்னா... எல்லாரும் தான்! அத்தை மாமா உன்னோட அம்மா அப்பா என்னோட அம்மா அப்பா" என்றதும் அவனுக்கு புரிந்து போனது தன்னை அழைத்து வர சொன்னதின் காரணம் என்னவென்று "உங்களுக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா" என சலித்து கொண்டவன் "சரி வா போகலாம்" என்று கூற இருவரும் வெளியே வந்தனர்


அதுவரை பெண்கள் இருவரும் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தனர் "சரி நீ இங்கயே இரு நா போய் கார் எடுத்துட்டு வறேன்" என்று கூறி பார்க்கிங் சென்று காரை எடுத்து வர பாலா ஏறிக்கொண்டதும் காரை கிளப்பியவன் கிளப்பிய வேகத்தில் சட்டென நிறுத்தினான் "டேய் என்னடா ஆச்சு ஏ வண்டிய நிறுத்துன" என கேட்டவன் வம்சியின் பார்வை சென்ற இடத்தை பார்க்க புரிந்து போனது "நடத்துடா நாடகத்த" என்றவன் "நா வேணா இறங்கிக்கிறேன் நீ அவங்க போற வரைக்கும் இருந்து பாத்துட்டு வா" என்று இறங்க போனவனை தடுத்தவன்

"டேய் நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல இது வேற விஷயம்" என்றவன் "இரு என்ன தான் நடக்குதுன்னு பாப்போம்" என்றுவிட்டு அவர்களின் நடவடிக்கையை கவனிக்கத் தொடங்கினான்

"நல்லா மாட்டிக்கிட்டோம் டைம் வேற ஆச்சு இவரு எப்ப உள்ள போக நாம எப்ப காலேஜ் போக கடவுளே" என புலம்பியவளை "கொஞ்ச நேரம் சும்மா இருடி" என்று அடக்கிய நிரஞ்சனா எட்டி எட்டி பார்த்து கொண்டிருந்தாள் சந்திரசேகரன் செல்வதாய் தெரியவில்லை கடவுளே என நொந்து கொண்டிருக்க


காரை அவர்களின் அருகில் வந்து நிறுத்தியவன் "என்ன டார்லிங் என்ன விட்டுட்டு போக மனசில்லையா!" என சீண்ட


அவனை முறைத்து பார்த்தவள் வெடுக்கென திருப்பி கொண்டாள் வம்சியின் கையை சுரண்டிய பாலா "டேய் சும்மா இருடா அவங்க வேற முறைச்சு பாக்குறாங்க நீ வண்டிய எடு போகலாம்" என்க

"ப்ச் நீ சும்மா இரு" என்றவன் "நீ சொல்லு டார்லிங் எனக்காக தானே வெய்ட் பண்ணிட்டு இருக்க" என்றதும் "சார் உங்க வேலைய பாத்துட்டு போங்க சார்" என்றவளின் பார்வை எதிர் கடையின் பக்கம் நிலைத்து நின்றது

"ஓ இது தான் விஷயமா.." என நினைத்தவன் "டார்லிங் அது உங்க அப்பா தானே என்று விட்டு "அங்கிள் அங்கிள்" என்று கத்த "அய்யோ நாசமா போச்சு இவன் வேற மாட்டிவிடமா போக மாட்டான் போல கேர்ள் பிரெண்டுன்னு சொன்னது ஒரு குத்தமா, நேரம் பாத்து பழி வங்குறானே" என் எண்ணியவள் "சார் சார் இப்போ எதுக்கு அவர கூப்பிடுறீங்க ப்ளீஸ் வேணா சார் அவருக்கு தெரிஞ்சா ரொம்ப கோபப்படுவாறு" என்று கொஞ்ச

"உன்னோட அப்பா தானே பேபி அப்றம் என்ன பயம் நீ தான் ஜான்சி ராணியாச்சே சமாளி" என்று கூறியவன் "அங்கிள்" என்று அழைக்க அவன் வாயை தன் கரங்கள் கொண்டு வேகமாக மூடியவள் "சார் ப்ளீஸ் வேணாம்" என்று கண்களால் கெஞ்சினாள் அவளின் செயலில் திகைத்தவன் ரசனையுடன் அவளை பார்க்க அவன் பார்வையை கண்டு வேகமாக கையை விலக்கி "சாரி" என்று முணுமுணுத்தவள் நளாவின் பக்கம் திரும்பி கொள்ள


இருவரின் செயலையும் ஆச்சர்யத்துடன் பார்த்து கொண்டிருந்தாள் நளா,பாலாவோ நடப்பது நடக்கட்டும் என்ற ரீதியில் பார்த்து கொண்டிருக்க "ஏய் நிரு அப்பா போயிட்டாரு வா போகலாம்" என்று அழைக்க அவனை முறைத்து கொண்டே ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பினாள்

"டேய் அவங்க போய் அரைமணி நேரமாச்சு கிளம்பு" என்றவன் "விட்டா கூடவே போயிருவ போல" என முணுமுணுக்க சிரித்து கொண்டே காரை கிளப்பினான் வம்சி


நிரஞ்சனாவின் மனம் தனலாய் குமுறியது "ச்சே அப்பாவே பேசி முடிச்சிறுப்பாரு தேவையில்லாம இந்த ஆள பாக்க வந்து கடைசியில அவன் கிட்டயே கெஞ்ச வேண்டியதா போச்சே என்ன பத்தி என்ன நினைச்சுறுப்பான், விராப்பா பேசிட்டு கடைசில இப்டி ஆகிருச்சே எல்லாம் இந்த அப்பாவால வந்தது அப்டி இருப்பான் இப்டி இருப்பான்னு பெருசா பில்டப் பண்ணி ஹீரோ ரேஞ்சுக்கு பேசுனாரு நேர்ல பாத்தா தானே தெரியிது ஆள் எப்டின்னு பாக்க பேச நல்லா இருந்தா மட்டும் போதுமா?, கேரக்டர் நல்லா இருக்கணுமே உங்க கேரக்டர் என்னன்னு கேட்டா அது எங்க கிடைக்கும் எவ்ளோ விலைன்னு கேட்பான் போல ஆள பாரு அவனும் அவனோட பேச்சும் டார்லிங் பேபின்னு, முன்ன பின்ன தெரியாத ஒரு பொண்ணு கிட்ட எப்டி பேசனுன்னு கூட தெரியல" என வழி நெடுக்க புலம்பி கொண்டே வர

"ஏய் என்னாச்சு எதுக்கு உனக்கு இவ்ளோ கோபம் உள்ள போகும் போது நல்லா தானே போன அப்றம் என்னாச்சு அவரு ஏதாவது திட்டினாறா காரணம் இல்லாம ஏ புலம்பிட்டு வர" என்று கேட்க

"வாய மூடிட்டு சும்மா வர்றயா! செம்ம கடுப்புல இருக்கேன் ஏதாவது வாய திறந்த அப்டியே நடு ரோட்ல இறக்கி விட்டுட்டு போயிடுவேன் பாத்துக்கோ" என்றதும் வாயை மூடி கொண்டு அமைதியாக வந்தாள் நளாயினி


வீட்டு வாசலில் காரை நிறுத்தியவன் "முதல நீ உள்ள போ நா பின்னாடி வறேன்" என்க

"ஏ ஆரத்தி எடுத்துட்டு வந்து உள்ள கூப்பிட்டாதான் வருவயா" என்ற பாலா "சீன் போடாம வாடா "என இழுத்து கொண்டு உள்ளே சென்றான்


மூத்த தலைமுறையினர் அனைவரும் ஒன்றாய் ஹாலில் அமர்ந்து பேசி கொண்டிருக்க யாரையும் பார்க்காமல் விறுவிறுவென சென்றவனை "டேய் நில்லுடா" என்ற சோபனா "அத்தை மாமா சித்தி சித்தப்பா வந்துருக்காங்க ஒரு வார்த்தை வாங்கன்னு சொல்லமா எங்கடா வேகமா போற" என்றவர் "இங்க வா உனக்காக தானே எல்லாரும் காத்திட்டு இருக்கோம் நீ பாட்டுக்க பாத்தும் பாக்காத மாதிரி போனா என்ன அர்த்தம்" என்று கண்டன குரலில் கூற

"என்ன! அத்தை வந்திருக்கங்களா?" என தெரியாதது போல ஆச்சர்யத்துடன் வினவியவன் "சாரிம்மா நிஜமாவே நா பாக்கல ஏதோ வயசு பொண்ணு உக்காந்து இருக்குதுன்னு நா நினைச்சேன்" என்றதும் "சோபா உன் பையனுக்கு வாய் கொழுப்பு இன்னும் குறையல அப்டியே தான் இருக்கான் என்ன பாத்த வயசு பொண்ணு மாதிரியா தெரியிது இது அவனுக்கே ஓவரா தெரியல" என்று கூற

"அச்சோ அத்தை நீங்க நம்பலையா வேணும்னா பாலா கிட்ட கேட்டுப்பாருங்க" என்றதும் "டேய் என்ன ஏண்டா கோர்த்து விடுற பாவி" என நினைத்தவன் "அத்தை இன்னுமா உங்களுக்கு புரியல ஐஸ் வைக்கிறான் உங்கள கரெக்ட் பண்ணிட்டா அவனுக்கு சாமளிக்கிற வேலை ஈஸி பாருங்க" என்று கூற

"இன்னைக்கு என்ன ஐஸ் வாச்சாலும் நா உருக மாட்டேன் ஒரு முடிவோட தான் கிளம்பி வந்துருக்கேன்" என்றவர் "வாடா வந்து உக்காரு உன்கிட்ட பேசணும்" என்றார் பல்லவி கறாராக


அவர் அருகில் அமர்ந்தவன் "அத்தை நான் தான் சொல்லிட்டேன்ல இப்போதைக்கு எதுவும் வேணாம்னு அப்றம் எதுக்கு என்ன கம்பல் பண்றிங்க இதோ இவனுக்கு வேணா ஏற்பாடு பண்ணுங்க ரொம்ப ஆவலா காத்துட்டு இருக்கான் எப்பாடா பொண்டாட்டி கையால நல்ல சாப்பாடு கிடைக்கும்னு" என்றதும் பாலாவின் தாய் ரஞ்சனி 'ஏண்டா அவன் சொல்றது நிஜமா!" என்றவர் "இத்தனை நாள் பிடிக்காம தான் நல்லா இருக்குன்னு சொல்லி சாப்டயா" என்று கோபம் கொள்ள


"அய்யோ அம்மா அவன் சொல்றதையெல்லாம் நம்பாத என்ன கோர்த்து விட்டு வேடிக்கை பாக்கணும்னு கங்கணம் கட்டிக்கிட்டு இருக்கான்" என்றவன் "விஷயத்தை டைவர்ட் பண்றான் இது கூடவா உங்களுக்கு புரியல" என்று கூற


"டேய் மகனே அம்மா பிள்ளைக்கு இடையில சண்டை முட்டிவிட பாக்குற" என்றவர் "முடிவா என்ன தான்டா சொல்ற நாளைக்கு இவனுக்கு பொண்ணு பாக்க போறோம் அப்டியே உனக்கும் பாத்திறலாம்னு இருக்கோம் பொண்ணு ரெடி நல்லா அம்சமா உனக்கு ரொம்ப பொருத்தமா இருக்கா நீ சரின்னா முடிச்சிறலாம்" என்றவர் "உனக்கு கல்யாணம் ஆனா பிறகு தான் இவன் கல்யாணம் பண்ணுவேன்னு பிடிவாதம் பண்ணிட்டு இருக்கான்" என்று ரஞ்சனி கூற


"அப்டின்னா இந்த ஜென்மத்துல கல்யாணம் நடக்காது" என்றவன் சலித்து கொண்டே "இப்போ என்னோட கல்யாணத்துக்கு என்ன அவசரம் எல்லாம் நடக்கும் போது நடக்கும் அதுவரைக்கும் யாரும் என்னோட கல்யாணத்தை பத்தி பேச வேணாம் முதல இவனுக்கு கல்யாணம் முடியட்டும் அப்றம் பாத்துக்கலாம்" என்று அழுத்தம் திருத்தமாக கூற


"உனக்கு அவசரம் இல்லப்பா வயசு ஏறிகிட்டே போகுதே அதனால தான் நாங்க அவசரப்படுறோம் நல்ல காலத்திலேயே பொண்ணு கிடைக்க மாட்டேங்கிது இதுல நீ வேற போகட்டும் போகட்டும்னு தள்ளி போடுகிட்டே போனா என்ன தான் ஆகுறது, நடக்கும் போது நடக்கும்னா எப்ப நடக்கும்னு சொல்லு நாங்க இத பத்தி பேசல" என்று பல்லவி கூற மற்ற இருப்பெண்களும் ஆமோதித்தனர் "அதையாவது சொல்லுடா எப்ப நடக்கும்" என்று சோபனா கேட்க


"உங்க கூட பெரிய தொல்லையா போச்சு, எனக்கு என்ன ஐம்பது வயசா ஆகிருச்சு இருபத்தி ஏழு தானே ஆகுது" என்றவன் "இப்போ கல்யாணம் பண்ணி என்ன ஆக போகுது கல்யாணம் பண்ணா அவார்ட் கொடுக்குறேன்னு யாராவது அனோன்ஸ் பண்ணிருக்காங்களா சொல்லுங்க" என்று எரிச்சலுற்றவன் "கல்யாணம் பண்ணி வைங்கன்னு நானே உங்க கிட்ட வந்து சொல்றேன் அதுவரைக்கும் கல்யாணம் பண்ணிக்கோன்னு டார்ச்சர் பண்ணாதீங்க" என்று கூறி விட்டு விறுவிறுவென சென்றுவிட்டான் வம்சி


பெண்கள் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள ஆண்கள் இருவரும் நாளிதழில் முக்கிய செய்தியான மாமியாரை கொன்ற மருமகள் என்ற செய்தியின் விவரத்தை படித்து விவாதித்து கொண்டிருந்தனர்


கணவர் தனபதியின் செயலில் கோபமுற்ற சோபனா "இங்க என்ன நடந்துட்டு இருக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம செய்தி படிச்சிட்டு இருக்கீங்க உங்க மகன் என்ன சொல்லிட்டு போறான் பாத்தீங்களா?" என்று சீற


நாளிதழை மடித்து வைத்தவர் "இப்போ என்ன! என்ன பண்ண சொல்ற! அவனோட பிடிவத குணம் தெரிஞ்சும் கல்யாணம் பண்ணிக்கோன்னு பேச சொல்றியா எப்ப தோணுதோ அப்ப சொல்றேன் கல்யாணம் பண்ணி வைங்கன்னு அவனே சொல்லிட்டு போறான்ல இதுக்கு மேல அவன்கிட்ட போய் என்ன பேசுறது, பேச்சுல அப்டியே உன்ன மாதிரி இருக்கான் அவன்கிட்ட பேசி என்னால ஜெயிக்க முடியாது இந்த ஒருவிஷயத்துல மட்டும் நா உன்னோட பேச்ச கேக்க மாட்டேன் சாரி சோபா" என்று கூற


சோபனா கோபமாக அடுத்த வார்த்தை பேசுவதற்குள் "சரி விடுங்க அவனுக்காக நீங்க ரெண்டுபேரும் சண்டை போட்டுக்க வேணாம்" என தடுத்த பல்லவி " அந்த பொண்ணுக்கு நாளைக்கு காலேஜ் லிவுன்னு சொன்னாங்க முதல இவனுக்கு பாத்து பேசி நிச்சயம் பண்ணிட்டு வந்துருவோம்" என்றவர் "ரஞ்சனி என்னென்ன வங்கணுமோ நீயும் கோபாலும் போய் வாங்கிட்டு வந்துருங்க அப்றம் கிளம்பும் போது அது இல்ல இது இல்லன்னு சொல்லிட்டு இருக்க கூடாது" என்று வீட்டின் முத்த தலைவியாய் கூற


"அண்ணி எனக்கு என்னென்ன வாங்கணும்னு தெரியாது நீங்க லிஸ்ட் போட்டு கொடுங்க வாங்கிட்டு வந்துடுறோம்" என்றதும் "சரிம்மா சாப்டுட்டு என்னோட ரூமுக்கு வா எழுதி கொடுக்கிறேன் ஒன்பது தாம்பூலம் வச்சா போதும் அதுக்கு தேவையானது மட்டும் வாங்குங்க" என்று கூறியவர் " டேய் தனா கோபாலு பொண்ணு வீட்டு சைடு முறை எப்டி பண்ணுவாங்கன்னு என்ன மாதிரின்னு கேட்டு செய்ங்க எந்த குறையும் வந்துற கூடாது" என்று கூற தமையன்கள் இருவரும் "சரிக்கா" என்று ஒருசேர கூறிவிட்டு எழுந்து சென்றனர்


பாலா யோசனை செய்தபடி நின்று கொண்டிக்க"டேய் நீ ஏண்டா நின்னுட்டு இருக்க போய் அவன சாப்பிட கூட்டிட்டு வா" என்று கூறியவர் "நீங்க ரெண்டுபேரும் போய் சாப்பாடு எடுத்து வைங்கம்மா நா போய் மாத்திரை போட்டுட்டு வறேன்" என்று பல்லவி சென்றுவிட பாலா வம்சியின் அறைக்கு சென்றான்...

தொடரும்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top