பூர்வ - ஜென்மம் - EPISODE 6 & 7

Advertisement

மறுநாள் காலை 11 மணி அளவில் அந்த வீட்டிற்கு சென்றிருந்தாள். அந்த பெண்மணியின் பெயரை சொல்லி வரசொல்லியிருப்பதாக காவலாளியிடம் தெரிவிக்க அவன் விசாரித்து பிறகு உள்ளே அனுப்பினான். காரியதரிசரை சந்திக்கும் போது தனக்கு வேண்டிய பெண் எனவும் ஒரு ஆசிரமத்தில் பணி புரிவதாகவும் கூறினாள். ரித்திகா வீட்டை சுற்றி நோட்டம் விட்டு கொண்டிருந்தாள். உள்ளே அது கோட்டை போலிருந்தது. பணத்தை இறைத்து இழைத்து கட்டியிருக்கிறார்கள். பிறகு ரித்திகா பேச ஆரம்பித்தாள். ஆசிரமத்தில் 30 பேர் தையல் வேலை செய்வதாகவும், எதோ ஒரு ஆசிரமத்தின் போட்டோக்களை கொண்டு வந்திருந்தாள். அதையும் காண்பித்து தான் கொண்டுவந்திருந்த ஆடையின் மாடலையும் காண்பித்தாள். அந்த காரியதரிசி அவளை ஏற இறங்க பார்த்து விட்டு சிறிது நேரம் காத்திருக்க சொன்னார். அவளும் வெளிப்புற அறையில் உள்ள நாற்காலியில் அமர்ந்து கொண்டாள். அங்கிருந்து பார்த்தால் மாடி வராண்டாவும் கீழ் பகுதியின் அறைகளும் தெரிந்தன. போட்டோ எடுக்கலாமா என்று நினைத்தாள் பிறகு அந்த எண்ணத்தை கைவிட்டுவிட்டாள். ஏனென்றால் அந்த வீடே cctv இன் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது ஒருவன் மாடியிலிருந்து கீழே வர, அவனை எங்கேயோ பார்த்த நினைவு. அவனும் அவளை கடந்து செல்லும்போது நைஸ் லூக்கிங் கேர்ள் என்று கூறிவிட்டு சென்றான். பேச்சிலும் பார்வையிலுமே அப்பட்டமாக தெரிந்தது அவனது குணம். அதற்குள் காரியதரிசி அழைக்க சென்றாள். அவன் அவளை பற்றி காரியதரிசியிடம் விசாரித்து கொண்டிருந்தான். அதற்குள் அவள் பக்கத்தில் அலுவகத்தில் வந்து பார்க்கும் படியும் அதற்கான கடிதத்தையும் கொடுத்தார். அதனை பெற்று கொண்டு அவனை முறைத்து விட்டு வெளியே வந்தாள்.

வெளியே வந்து கோபியை அழைத்தாள். நடந்ததை கூறிவிட்டு அலுவலகம் விரைந்தாள். அந்த வீட்டில் கண்ட மனிதனை எங்கு பார்த்தோம் என்று யோசிக்க அவளுடைய தோழி ஒருத்தியின் புகைப்படத்தில் பார்ததது போல் இருந்தது . அந்த புகைப்படத்தை கைபேசியில் தேட கிடைத்தது. அதில் அவளுடைய கணவனுக்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்தான். அது ஒரு காதல் கல்யாணம். மணமான சிறிது காலத்திலேயே விபத்தில் இறந்து விட்டதாக செய்தி வந்திருந்தது. உடனே தோழியின் பெற்றோற்றிடம் விசாரிக்கலாம் என்று அழைத்தாள் ஆனால் எண் உபயோகத்தில் இல்லையென வந்தது. அலுவலகத்தில் நுழைய முற்படவும் கோபி வரவும் சரியாக இருந்தது .அவளுடைய வண்டியை பற்றி கேட்டான், அவள் காலையிலேயே ஒர்க்கஷாப்பிலிருந்து எடுத்து வந்து விட்டதாக கூறினாள். மதிய உணவை முடிக்க இருவரும் பக்கத்தில் இருந்த ஓட்டலுக்குள் சென்றனர். கோபி கட்சி அலுவலகத்தில் நடந்ததை பற்றியும் அவள் தோழியின் விவகாரத்தை பற்றியும் பேசினர். மறுநாள் கட்சி அலுவலகத்துக்கு அவள் செல்ல வேண்டும்.

இரவு வீட்டிற்கு வந்தபின் திரும்ப அந்த புகைப்படங்களை பார்த்தாள். அதில் இந்த மனிதனின் பார்வையும் கணவனின் முகமும் தோழியின் இறப்பில் மர்மம் இருப்பதை உணர்த்தியது. அது மட்டுமில்லாமல் இவர்கள் இப்போது எடுத்து கொண்டிருக்கக்கூடிய கேஸுக்கும் இதற்கும் சம்பந்தம் இருப்பதாக பட்டது. தான் நினைத்தை உடனடியாக கோபியிடம் தெரிவித்தாள். பிறகு நாளை chief விடம் இதை பற்றி பேசுவோம் என்ற முடிவிற்கு வந்து உறங்க சென்றனர்.

கோபியின் வீட்டில் அவனுடைய தந்தை ஸ்ரீவட்சன், அக்கா பார்வதி மற்றும் அவளுடைய குழந்தை Praveen . கோபியின் மாமா கடற்படை ராணுவத்தில் பணிபுரிகிறார். Mr .ஸ்ரீவட்சன் கல்லூரி பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.Mr .ராமானுஜத்திற்கு சீனியர். புத்தக படிப்பாளி மற்றும் படைப்பாளி. வீட்டிலேயே சிறு நூலகம் வைத்துள்ளார். கோபியின் அக்காவிற்கு ரித்திகா அவர்கள் வீட்டிற்கு மருமகளாக வரவேண்டும் என்ற எண்ணம் உண்டு. ஆனால் தம்பியிடம் இதுவரை அந்த பேச்சை எடுத்ததில்லை.

மறுநாள் கட்சி அலுவலகத்துக்கு சென்றாள் ரித்திகா. கணக்கரிடம் கொண்டு வந்த கடிதத்தை கொடுத்தாள். அவர் சிறிது நேரம் வரவேற்பறையில் அமர சொன்னார். அங்கே அமர்ந்து சுற்றும் புறமும் பார்த்தாள். குறிப்பிடத்தக்க விஷயம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. தொண்டர்கள் அனைவரும் ஒரே நிற ஆடையில் எந்த வித கட்டுப்பாடுமின்றி போய் வந்து கொண்டிருந்தார். பொது மக்களும் தங்கள் ஏரியாவின் குறைகளை கடிதத்தின் வழியாக கொண்டு வந்திருந்தனர். தனஞ்செயனும் கைபேசியில் பேசியபடியே வந்து கொண்டிருந்தான். இவளை பார்த்ததும் திகைத்து நின்றான். இந்த தடவை அவளும் பார்த்துவிட்டாள். அதே திகைப்பு அவளிடமும். சட்டென்று சுதாரித்து கொண்டனர். அவளுக்கு எங்கே தன் குட்டு வெளிப்பட்டுவிடுமோ, எதாவது கேட்டுவிடப்போகிறானோ என்ற உதறல். அதற்குள் கணக்கரிடம் இருந்து குரல் வந்தது. எழுந்து போனாள். அவர் சீருடைகள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும் அது மட்டுமல்லாமல் முதலில் டெபாசிட் கட்ட வேண்டும் அதனால் பெரிய நிறுவனத்துக்கு மட்டுமே கொடுக்க உத்தரவு வந்திருப்பதாக கூறினார். இவள் ஐயோ பாவமாக முகத்தை வைத்து கொண்டாள். மற்றுமொரு விலாசத்தை கொடுத்தார் கணக்கர். அது ஒரு ஆடை தயாரிப்பு நிறுவனம் . அதையும் பெற்றுக்கொண்டு வெளியே வந்துவிட்டாள்.

சிறிது நேரம் கழித்து அந்த கணக்கரை அணுகி விசாரித்தான். அவரும் அவள் ஒரு ஆசிரமத்தில் வேலை செய்பவள் என்றும் மேற்படி வந்த விஷயத்தையும் கூறினார். அந்த ஆசிரமத்தின் விலாசத்தை வாங்கி கொண்டான். ஒன்றும் புரியவில்லை அவனுக்கு ஜௌர்னலிசம் படித்து விட்டு documentary பிலிம் எடுப்பவள் ஆசிரமத்தில் வேலை செய்கிறாள். குழப்பமோ குழப்பம் . தானே சென்று அந்த விலாசத்தில் பார்த்துவிடுவது என்று முடிவெடுத்தான். மதிய வேளை ஒரு இரு சக்கர வண்டியை வாடகைக்கு எடுத்தான், தன்னுடைய கட்சி உடையை மாற்றி சாதாரண உடையை வாங்கி அணிந்துகொண்டான். விலாசத்தை எடுத்து கொண்டு புறப்பட்டான். ஒரு வழியாக கண்டுபிடித்து விட்டான்.

Thodarum... 6

அது ஒரு பள்ளியின் முகவரி. எதற்காக பொய்யான விலாசம் கொடுக்க வேண்டும், புரியவில்லை. மண்டை குடைய ஆரம்பித்தது. மீண்டும் கட்சி அலுவலகத்துக்கே வந்தான். என்னவென்று ஆரம்பிப்பது எப்படி கேட்பது என்று புரியவில்லை. அந்த நேரம் நேற்று ரித்திகா முறைத்த மனிதன் இன்று கணக்கரிடம் அவளை பற்றி கேட்டுக்கொண்டிருந்தான். கணக்கரும் அவள் அம்புஜத்துக்கு தெரிந்த பெண் எனவும் உதவிக்காக வந்திருந்தாள் எனவும் கூறினான் . அதை கேட்டுக்கொண்டிருந்த தனஞ்செயனுக்கோ உலகமே சுற்றுவது போல் இருந்தது. அதைவிட இவன் ஏன் இவ்வளவு விசாரிக்கிறான் சரியில்லையே என்று யோசித்தான் . தனஞ்செயனுக்கு ஓரளவு அந்த மனிதனை பற்றி தெரியும். ஒரே நாளில் ஒரு மனிதனுக்கு எத்தனை சோதனைகள்..

தாரா டிடெக்ட்டிவ் agency , கோபி ரித்திக்காவின் தோழியின் விவரத்தை கூறினான். அவருக்கும் தான் எடுத்துக்கொண்ட கேஸுக்கும் இதற்கும் சம்பந்தம் இருப்பதுபோல் பட்டது. உடனே அந்த தோழியின் பெற்றோரை விசாரிக்க சொன்னார். ரித்திகா அவர்கள் மாயவரத்தில் இருப்பதாக சொன்னாள். அன்று இரவே பயணப்பட தயாராயினர்.

இரவு மணி 8 .45 Koyambedu பேருந்து நிலையம்.

கோபியும் ரித்திகாவும் மாயவரம் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தனர்.

தண்ணீர் பாட்டில் வாங்கி வர கோபி கீழே இறங்கினான். கட்சி அலுவலகத்தில் பார்த்த நபர் அந்த டீ கடையில் நின்று கொண்டிருந்தார். அந்த நபரிடம் சென்று பேச்சு கொடுத்தான். வேளாண் விதைகள் மற்றும் உரங்களின் ஏற்றுமதியை பற்றி ஆரம்பித்தான். அவனும் அதை பற்றி விவரிக்க ஆரம்பித்தான். பேச்சு வாக்கில் மூலிகைகளின் ஏற்றுமதி பற்றியும் சொன்னான். என்னென்ன மூலிகைகள் என்று கேட்க அதை பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்று நழுவிவிட்டான்.

கோபி வந்து ரித்திகாவிடமும் இதை தெரிவித்தான். சந்தேகம் உறுதியானது. ஆனால் எப்படி செய்கிறார்கள் என்பது புரியவில்லை.

மறுநாள் காலை தோழியின் பெற்றோர் வீட்டில் அந்த விஷயத்தை பற்றி பேசக்கூட தயாராக இல்லை.தங்களை ஏமாற்றி விட்டு காதல் திருமணம் செய்து கொண்டதில் வருத்தம். இறந்த செய்தி கேட்டு கடமைக்கு சென்று பார்த்துவிட்டு வந்திருந்தனர். அவள் இருந்த வீட்டு விலாசத்தை வாங்கி கொண்டு திரும்பினர். கோபிக்கு அவர்களை பார்த்ததிலிருந்து மனது சரியில்லை. அதன் பிரதிபலிப்பு முகத்தில். ரித்திகா என்ன என்று கேட்க அரசியலில் தொடர்பு கொண்டவனை எப்படி முழுமையாக நம்பி திருமணம் செய்து கொண்டாள். அதனால் அனைவருக்கும் தலைகுனிவு என்று தன மனதில் பட்டதை கூறினான். ரித்திக்காவிற்கு உடனே தனஞ்செயனின் நினைவு வந்தது. ஆனால் அந்த ஏமாற்றும் வட்டத்திற்குள் அவனை நினைத்து பார்க்க முடியவில்லை.

அவர்கள் கொடுத்த முகவரி பாண்டிச்சேரியில் இருந்தது. இருவரும் அங்கு எதாவது ஆதாரம் கிடைக்கலாம் என்று கிளம்ப தயாராயினர்.பாண்டிச்சேரி, அவர்கள் கொடுத்த முகவரியில் வேறு ஒரு குடும்பம் இருந்தது. வீட்டின் உரிமையாளரை பார்த்து பேசினர். அந்த வீட்டிலிருந்து அந்த பெண்ணின் இறப்புக்கு பிறகு காலி செய்துவிட்டனர். அதற்கு மேல் ஒன்றும் தெரியாது எனவும் கூறிவிட்டார். இவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு கிளம்ப தயாராகும்போது நினைவு வந்தவராக வீட்டின் உள்ளே சென்றார். வரும்போது ஒரு சிறிய கைப்பை கொண்டு வந்தார். வீட்டை சுத்தம் செய்யும்போது கிடைத்ததாக கூறினார். உரிமையாளர்கள் வந்தால் கொடுக்கவேண்டும் என்பதற்காக வைத்திருந்தேன் என்றார். இவர்கள் சொன்ன விஷயங்களை கேட்டபிறகு இவர்களிடம் ஒப்படைத்தார்.

பாண்டிச்சேரி கடற்கரை - இருவரும் மணலில் அமர்ந்து கடல் நீரில் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகளை பார்த்து கொண்டிருந்தனர். பிறகு கைப்பையில் இருந்த கடிதத்தை மீண்டும் ஒரு முறை படித்தனர். அந்த கைப்பையில் ஒரு கடிதமும் ஒரு சில போட்டோக்களும் மற்றும் ஒரு சாவியும் இருந்தது. அது ஒரு வங்கியின் லாக்கர் சாவி என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்விவரங்களை chief இடம் தெரிவித்தனர். அவர் நாளை அந்த வங்கிக்கு சென்று பார்க்க பணித்தார்.

மறுநாள் வங்கியின் வரவேற்பறையில் அமர்ந்து இருந்தனர். அந்த நேரம் ஒரு போலீஸ் சாதாரண உடையில் வந்து அறிமுகப்படுத்திக்கொண்டார். மூவரும் மேலாளர் அறைக்கு சென்று லாக்கரை திறந்து பார்க்க அனுமதி கேட்டனர். அதற்கு அவர் உரிமையாளர்கள் தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லை என்று கூறினார். உடனே உடன் இருந்த போலீஸ் அதிகாரி உரிமையாளர் இறந்து விட்டதாகவும் ஒரு விசாரணையின் பேரில் தாங்கள் வந்திருப்பதாகவும் கூறி ஒரு FIR காபியையும் கொடுத்தார்.அதன்பிறகு ஒருவருக்கு அனுமதி வழங்க பட்டது. ரித்திகா சென்று அந்த box உடன் வந்தாள்.

Thodarum...7
 

Saroja

Well-Known Member
கேஸ் நல்லா சுத்தி வளைச்சு
போகுதா
அருமையான பதிவு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top