புரட்டாசி ஸ்பெஷல் - 2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
வைகுண்டத்தில் ஒரு நாள் திருமாலின் பாதுகைக்கும் திருமுடிக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.
பாதுகை கூறியது
"நான் பகவானின் திருவடிகளோடு பிணைந்தவன்
இறைவன் திருவடி சேர்ந்தவர்க்கே எல்லாப் பெருமையும் உரியது" என்றது.
"அவர் காலடியில் கிடக்கும் உனக்கே இவ்வளவு இருக்குமானால், அவர் தலையில் இருக்கும் எனக்கு எவ்வளவு பெருமை" என்றது மகுடம்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் சங்கும் சக்கரமும் கிரீடத்தின் பக்கம் சேர்ந்து கொண்டன.
ஆதரவற்ற நிலையில் இறைவனிடம் அடைக்கலம் தேடியது திருவடி.

திருமால் திருமுடியை பார்த்து சொன்னார்
" உனக்கு இவ்வளவு அகந்தையா!!
என் தலைமேல் அமர்ந்து இருப்பதால் தானே இந்த ஆனவம் உனக்கு.
என் அடுத்த இராமாவதாரத்தில் நீ யாரை இகழ்ந்தாயோ அந்த பாதுகையின் மேல் அமர்ந்து இருப்பாய்" என்றவர்,
சங்கு சக்கரத்தின் பக்கம் திரும்பி "திருமுடியோடு சேர்ந்து பாதுகையை கேலி செய்த நீங்கள் பரத சத்ருக்கனனாக பிறந்து பதினான்கு ஆண்டுகள் பாதுகையை வழிபட்டு வருவீர்கள்" என்று சொன்னார்.

கருத்து: ஒருவரை அவரது பணி, நிலை இவற்றை கொண்டு ஏளனமாகப் பேசக் கூடாது.

தென்கச்சி சுவாமிநாதன்.
 
Last edited:

P.Barathi

Well-Known Member
It is little bit exaggerated but it made me think about media in India- It made me wonder what happened to Pollachi victims and the perverts?? Justice ???? only it leaves anger , bitterness, helpless feeling about the situation. so called leaders and their view about women and media's priority :mad::mad::mad::mad:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top