Rajalakshmi Narayanasamy

Writers Team
Tamil Novel Writer
#1
ஒரு ஞாயிற்றுக் கிழமை நூலகத்திற்கு சென்ற பவித்ராவை நூலகர் பாட்டாசாலைக்கு அழைத்தார்... "பவிமா.. அத்தை கூட பயராவுசு வர வாயேன்..."

"எதுக்கு?" - பவி

"நிறைய புக்ஸ் வந்து இறங்கிருக்கு..." - நூலகர்

"அப்றம்.." - பவி

"ரெண்டு பேனு வேற ஓடல.." - நூலகர்

"அதுக்கு.." - பவி

"அதா பயராவுசுகாரகள பாத்து அதெல்லாம் செஞ்சி தர சொல்லி கேக்கனும்.." - நூலகர்

"போய் கேளுங்க" - பவி

"என்ன பவி இப்படி சொல்லிட்ட ... நம்ம நூலகத்துக்காக இது கூட செய்ய மாட்டேயா? என் கூட தானே வர சொல்றேன்... வரலாம்ல" என்றார் நூலகர்

"ஆஹா, இப்படித்தான் இரண்டு அலமாரி வாங்கணும், காலேஜுக்கு போகணும் கூட வான்னு சொல்லி கூப்பிட்டீங்க... அங்க போய் என்ன ஆச்சு?" - பவி

"அதுதான் அலமாரி குடுத்துட்டாங்களே பாப்பா..." - நூலகர்

"குடுத்தாங்க... காலேஜ்ல என்ன நடந்துச்சுன்னு? கேட்டேன்"- பவி

" அது வந்து" - நூலகர்

" என்ன வந்து போய்? கரஸ்பாண்டன்ட உள்ள போய் பாருங்க ன்னு சொல்லி அனுப்பி விட்டதுக்கு அப்பறம்... கடைசி நேரத்தில் உங்க தங்கச்சி அங்க வேலை பாக்குது.. அதை பார்த்துட்டு அது கூட நின்னுட்டீங்க... நீ போய் பேசிக்கிட்டு இருடா, நான் வர்றேன்னு சொல்லிட்டு... கதவு எல்லாம் திறந்ததுக்கு அப்புறம்... நான் உள்ள போனேன்... எப்பவும் வருகிற கரஸ்பாண்டன்ட் இல்லாம அவரோட உத்தம புத்திரன் உட்கார்ந்து இருக்கான் உள்ள.... அவன் கிட்ட போய் என்ன பேசுறது என்று எனக்கு தெரியல... ஆயிரத்தெட்டு கேள்வி கேட்டான்... எல்லாத்தையும் சமாளிச்சு கடைசில அவனை சம்மதிக்க வச்சேன்" -. பவி

" அதுதான் சம்மதிச்சுட்டாங்களே.. உன் டேலன்ட் வேற யாருக்காவது வருமா?"- நூலகர்

" நல்லா வந்துரும் என் வாயில... அதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சு தெரியுமா?" - பவி

" என்ன நடந்துச்சு?" - நூலகர்

"காலேஜ் லைப்ரரிக்கு புத்தம் புதுசா வாங்கின அலமாரியை இங்கு கொடுத்து விட்டு... அதனால சர்க்குலர் அனுப்பி கல்லூரி நூலகத்துக்கு நன்கொடையாக எல்லார்டயும் 200 ரூபாய் கேட்டான்.. இந்த 2 அலமாரி சேர்த்தே 8000 தான் இருக்கும்...

இந்த 200 ரூபாய் நானே என் கிளாஸ்ல வசூல் பண்ணி கொடுத்திருப்பேனே.. உங்களுக்கு...

அவன் கிட்ட போய் கேட்டு அவன் மொத்த காலேஜில் உள்ள 2,000 பேர் கிட்டயும் 200 ருபாய் பிடுங்கி விட்டான்...
இப்போ இந்த ஊரு நூலகத்துல இருக்க அலமாரி விலை 4 லட்சத்துக்கு மேல ஆயிடுச்சு " என்றாள் கடுப்புடன்

" ஹிஹி அவங்க வசூல் பண்ணா நான் என்ன பாப்பா செய்வேன்" என்றார் நூலகர்

"அதே மாதிரி கூட்டிட்டு போயி அவங்க அங்க வேலை செய்றவங்க தலையில மொளகா அரைக்கனும்... அதுதான் உங்க ஆசை .. அரசாங்கத்துக் கிட்ட கேட்க வேண்டியது தானே ஏன் இவங்க கிட்ட எல்லாம் போய் வாங்குறீங்க?" என்றாள் பவி

"அரசாங்கம் library கட்டிக் கொடுத்து books வேற தர்றாங்க.. நம்ம ஊரு தொழிலதிபர்கள் ஏதாவது செய்யணும் இல்லையா? இதெல்லாம் ஊர்க்காரங்க தான் செய்யணும்" என்றார் அவர்

"இப்போ என்னதான் வேணும் உங்களுக்கு?" என்றாள் பவித்ரா

"கோபப்படாமல் என் கூட பயர் ஆபீஸ்க்கு வா" என அழைத்தார் நூலகர்

"உங்க கூட எல்லாம் சகவாசம் வச்சுக்கிட்டதுக்கு வந்து தொலைக்கிறேன்' என்றாள் பவித்ரா

மாலை நேரத்தில் இருவரும் பட்டாசு ஆலைக்கு சென்றனர்... அங்கு சென்று முதலாளியை பார்க்க வேண்டும் என்றதும் அழைத்துச் சென்றார் காவலாளி..

நூலகர் வழக்கம் போல அங்கு இருவரை பார்த்து விட்டு "நான் அவங்ககிட்ட பேசிட்டு வரேன் நீ.. போய் ஓனர்ட பேசிட்டு இரு பாப்பா" என்று அனுப்பி வைத்தார்..

"வெளில வாங்க உங்களுக்கு இருக்கு..." என பல்லை கடித்துக்கொண்டு கூறியவள் அங்கு காவலாளி அவளுக்காக காத்திருக்கவும்... அவருடன் நடந்தாள்...

ஆதவனை எதிர்பார்த்து சென்றவளுக்கு அங்கு ஒரு வயதானவரை கண்டதும் குழப்பமாக இருந்தது... "இவர் தான் கண்ணு, முதலாளி.. நீ போய் பேசு மா" என்று விட்டு நகர்ந்தார் காவலாளி..
" உள்ளே வாம்மா" என்று கனிவோடு அழைத்தார் அந்தப் பெரியவர்..

பவித்ரா அவரிடம் நூலகத்திற்காக நன்கொடை வாங்க வந்திருப்பதாக கூறி அறிமுகம் செய்து கொண்டு அவருக்கு ஏற்றார் போல் பேசி நூலகத்தின் தேவைகளை நிறைவேற்ற அவரை ஒப்புக் கொள்ளச் செய்தாள்...

அதன் பிறகு தான் உள்ளேயே எட்டிப் பார்த்தார் நூலகர்... அதன்பின் "யார் வீட்டு பொண்ணு மா நீ?" என சாதாரண அடிப்படை விஷயங்களை விசாரிக்க ஆரம்பித்தார் பெரியவர்..

நூலகர் அவள் பண்ணை வீட்டு ஆதிமூலத்தின் பெண் என்று அறிமுகம் செய்ததும் பெரியவருக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது...

அன்று பார்க்க நினைத்த, பார்க்க முடியாது போன ஆதிமூலத்தின் சுட்டிப்பெண்... இன்று அவர் எதிரில் நிற்கிறாளே..!! என அகமகிழ்ந்து போனார்..

உடனடியாக இருவருக்கும் கூல்டிரிங்ஸ் கொண்டுவரச் சொன்னார் பணியாளிடம்... உடனே வேகமாக மறுத்தவள்.. " அய்யா தப்பா எடுத்துக்காதீங்க... நான் பாட்டிலில் அடைத்து விக்கிற குளிர் பானங்கள் எல்லாம் குடிக்கிறது இல்லை... இயற்கையா கிடைக்கிற நம்ம நாட்டு உணவுப் பொருள்களை மட்டும் தான் சாப்பிடுவேன்" என்றாள்...

மேலும் வியந்து போனவர் எலுமிச்சம் பழச்சாறு கலந்து கொடுக்கச் சொன்னார் பணியாளரிடம் ...

அதை வாங்கிப் பருகி விட்டு வீடு நோக்கி நடந்தனர் பவித்ராவும் நூலகரும்..

இப்படி ஒரு பெண் தனக்கும் இருந்திருந்தால் தம் வாழ்வு மேலும் அழகாக இருந்திருக்கும்... என எண்ணினார் அதியவன்..

இரவு வீட்டிற்கு சென்றவர் தன் மனைவியிடமும் அதையே கூறினார்... அகிலா இதற்கு ஒரு தீர்வு சொன்னார் "அதே மாதிரி பொண்ணு என்ன? அந்த பொண்ணையே நம்ம வீட்டுக்கு கொண்டு வந்துட்டா போச்சு" என்றார்

" என்னம்மா சொல்ற இத்தனை வயசுக்கு அப்புறம் பெண்ணை எப்படி தத்துக் கொடுப்பாங்க? அதுவும் ஆதிமூலம்.. அவர் பொண்ணு மேல உயிரையே வச்சிருக்கார்...." என்றார்.. அதியவன்..

" தத்து கொடுக்க மாட்டார்கள் ... ஆனால் கட்டிக் கொடுப்பாங்க இல்ல?" என்றார் அகிலா.

"புரியுது புரியுது அந்த பொண்ணு நம்ம வீட்டு மருமகளாக்கிக் கொள்வோம்ன்னு சொல்றியா?” என்றார் பெரியவர்...

" அப்பாடா உங்களுக்கு புரிஞ்சிடுச்சு... நான் கூட விம் ஜெல் தான் வாங்கிட்டு வரணும் போலன்னு நினைச்சேன்" என வாரினார் அகிலா...

" அந்த பொண்ணு படிச்சிகிட்டு இருக்கு இன்னும் ஒரு நாலஞ்சு மாசம் தான் இருக்கும் காலேஜ்... அதுக்கு அப்புறமா நாம பேசலாம்" என்றார் மனைவிடம்

"இந்த காலத்தில் அப்படியெல்லாம் விட முடியாது.... எப்போ எப்படி ஒரு கல்யாணம் நிச்சயமாகும்னு யாரும் சொல்ல முடியாது ... அதனால அவ படிப்பது படிக்கட்டும்... நாம கேட்கிறது கேட்போம்... படிச்சதுக்கப்புறம் என்கேஜ்மென்ட் ' கல்யாணம் எல்லாம் வச்சுக்கலாம்" என்றார் அகிலா

சிறிது யோசித்தவர்... " அந்த ஊர் திருவிழா வருது மா... அதுசமயம் பேசுவோம்" என்றார்

மிக்க மகிழ்ச்சியுடன் "சரிங்க அப்படியே பேசுவோம்" என்றார் அகிலா

"ஏம்மா பொண்ணு போட்டோ கூட பார்க்காமல் சம்பந்தம் பேசுற அளவுக்கு போறியே எப்படிம்மா?" என்று கேட்டார் மனைவியிடம்

"யார்ட்டையும் பேசாத நீங்களே ஒரே நாள்ல அவர் கூட நட்பாகி இருக்கீங்க... அதுல இருந்து அவங்களோட தங்கமான மனசு புரியுது... எத்தனையோ பெண் குழந்தைகளை தினமும் நாம பார்க்கிறோம்... ஆனா இந்த மாதிரி ஒரு குழந்தை இல்லைன்னு எப்போ அந்த பொண்ண பாத்து நீங்க ஏங்குனீங்களோ...!! அப்பவே அவ தான் இந்த வீட்டு மருமக அப்படின்னு நான் முடிவு பண்ணிட்டேன்... அவ கருப்போ சிவப்போ, குட்டையோ நெட்டையோ, எப்படி இருந்தாலும் அவ தான் என்னோட மருமகள்” என்றார் அகிலா...

" நீ சொல்ற மாதிரி இல்ல மா.... ரொம்ப அம்சமான லட்சுமி கடாட்சம் நிறைந்த பொண்ணுதான்" என்றார் பெரியவர்

"அதுக்கு முதல்ல நம்ம மகன்கிட்ட கேட்கணுமே... அவன் வேண்டாம்னு சொல்லிட்டா என்ன செய்வது" என்றார் பெரியவர்

"அதுதான் அந்த ஊர் திருவிழாவுக்கு போகணும்னு சொன்னீங்களே... அங்க போய் இவன் முதல்ல பொண்ண பார்த்து... இவனுக்கு சரின்னு சொன்னா.... உடனே பேசி முடித்து விடுவோம்" என்றார் அகிலா..
 
Attachments

Advertisement

New Episodes