Rajalakshmi Narayanasamy

Writers Team
Tamil Novel Writer
#1
கடுப்பின் உச்சத்திற்கு சென்று விட்டாள் பவித்ரா.. அவளுக்கு வந்த கோபத்தில் ஆதியின் தலையில் சுத்தியலைக் கொண்டு நங்கென்று நான்கு அடிகள் கொடுக்க வேண்டும் என்று தீராத ஆத்திரம் வந்தது..

எதையும் யோசிக்காமல் வீட்டிலிருந்து வெளியேறியவள் அங்கு நின்று கொண்டிருந்த அனைத்து வாகனங்களிலும் அனைத்து டயர்களையும் பஞ்சர் ஆக்கி விட்டு, தான் வந்த வாடகைக் காரில் ஏறி பறந்து விட்டாள்..

ஆதவனின் புறக்கணிப்பிலேயே திகைத்து நின்ற பெரியவர்கள், பவித்ரா வேகமாக வெளியேறவும் என்ன செய்வது என தெரியாமல் குழம்பிப் போய் நின்றார்கள்..

இவர்களது சிறுபிள்ளைத்தனமான பிரச்சனைக்குள் இப்போதைக்கு தாங்கள் தலையிட வேண்டாம் என முடிவெடுத்து நால்வருமே அமைதியாயிருக்க, தங்கையை எப்போதும் தாங்கி பழக்கமில்லாத பாலன், வேகமாய் ஆதவனைத் தேடிச் சென்றான்..!!

"டேய் எரும, என்ன பண்ணி வச்சிருக்க? அவ தான் கூப்பிட்டால்ல? இன்னும் அவட்ட பேசாம நீயா விறுவிறுன்னு வந்தா என்னடா அர்த்தம்?"

"ஓ.. உன் தங்கச்சி என்னைய கூப்பிடறதுக்கு ஏர்போட் வரமாட்டா.. ஆனா, அவ வந்து கூப்பிட்டதும் நான் போய் பேசணுமா?" என்றான் சிறு குழந்தை போல..

"ஆதி அவ போனது ஒரு முக்கியமான வேலைக்காக தானே..? அப்படி போனாலும் நீ வீட்டுக்கு வர்றப்ப இருக்கணும்னு எப்படியோ சமாளிச்சு வந்து இருக்கா.. அவள போய் இப்படி பண்றியே டா.. அவர் கோபப்பட்டா நீ தாங்குவியா?"

"ஓ கோச்சுக்குவாளா? நல்லா கோச்சுக்கட்டும்.."

"டேய்.. புரியாம பேசாத.. அவ கோச்சிக்கிட்டு வீட்டிலிருந்து வெளியே போயிட்டா.. எங்க போனா? என்ன செய்யப் போறான்னு தெரியலையே..இதெல்லாம் நல்லதுக்கில்ல டா" என்றான் பாலா..

யோசித்தவன்.. 'தானும் கொஞ்சம் ஓவரா தான் போயிட்டமோ?' என சிந்தித்து.. "சரி, வா போய் பாக்கலாம்.." என முன்னே நடந்தான்..

இருவரும் வேகமாக வெளியே வரும் போது சமையல்கார பெண் வந்து அனைவருக்கும் கேரட் அல்வாவை தட்டில் வைத்து எடுத்துக் கொண்டு வந்தார்..

"பெரிய அய்யா.., இது நம்ம பவித்ரா அம்மா அவங்க கையால செஞ்சாங்க.. சின்னய்யாக்கு பிடிக்கும்னு வந்ததும் அவசர அவசரமா ரெடி பண்ணுனாங்க.. யாரையும் எதுவும் உதவி கூட செய்ய விடவில்லை.. எல்லாம் நானே செய்யுறேன்.. கேரட் ஒரசரதுல இருந்து எல்லா வேலையும் அவங்களே கஷ்டப்பட்டு செஞ்சாங்க.. ஆனா, கொடுக்க மறந்துட்டாங்க போல.." என சொல்லியபடி கிண்ணங்களை கொண்டு வந்தார்..

அதைக் கேட்ட ஆதிக்கு ஐயோ வென்றிருந்தது "அட டேய் வெண்ணை திரண்டு வரும் போது தாளிய போட்டு உடைக்கிறது அப்டிங்கறது இது தான்டா.. அவளே இறங்கி வந்து இவ்வளவு செஞ்சிருக்கா.. ஆனா நீ அவளை பத்திவிட்ட.. வாழ்க்கை நல்லா இருக்கும் டா.. இத்தன வருஷமா இல்லாம இப்ப என்ன புதுசா உனக்கு இப்படி ஒரு கோபம் எல்லாம் வர்றது.. ஐயோ எங்க போனான்னு தெரியலையே.." என்றபடி இருவரும் வெளியே வந்து பார்த்தால் அவள் வேலையை அவள் வசமாய் காட்டியிருந்தாள்..

"அடேய் உன் மேல உள்ள கோவத்துல என் பைக் டயரயும் சேர்த்து பஞ்சர் ஆக்கிட்டாளே.. இந்த டயர்கள மாத்தறதுக்கான பணத்தை நீ தான் கொடுக்கிற.. ஒன்னா.. ரெண்டா? இருக்கிற எல்லா வண்டியிலயும் எல்லா டயரையும் பஞ்சர் ஆக்கி வெச்சிருக்கா.. இதுக்கே ஒரு லட்சம் செலவு செய்ய வேண்டி வரும் போல இருக்கு அவ கோவப்பட்டா நமக்கு தான் ஆபத்துன்னு சொன்னா கேக்குறியா டா?" என்றான் பாலன்..

பின்னாலேயே வந்த அனைவரும் சிரித்தாலும், அகிலா கவலையாக "ஐயோ பிள்ளை எங்கே போச்சுன்னு தெரியலையே.. நாம யாரும் பின்னாடி போக கூடாதுன்னு தானே டயர் எல்லாம் பஞ்சராகி போயிருக்கா? ஏதாவது பண்ணிக்கிட்டா என்ன செய்றது?" என்று கவலைப்பட்டார்.

ஆதவன் பாலனின் மேல் விழுந்து அவனுடன் கட்டிப் புரண்டு சண்டை போட ஆரம்பித்து விட்டான் "அடேய் உன்னால தான் எல்லாம்.. நான் இங்கிருந்து போய் ஒரு நாள்ல கோபம் குறைந்து அவட்ட பேச ஆரம்பிச்சி இருப்பேன்.. நீ தான் அவ கிட்ட பேசாத... அவளே இறங்கி வர்றாளான்னு பார்ப்போம்னு என்னை பேசவிடாமல் பண்ணுன.. உன்னால தாண்டா இப்போ போயிட்டா.. " என்ன சரமாரியாக தாக்கினான்..

"டேய் உன்ன வெளிநாட்டுக்கு போய் பேசாதன்னு தான் சொன்னேன்.. நீ ஊருக்கு வர்ற அப்ப அவ மனசு இளகி தனிஞ்சி வருவா.. அப்படியே ஒரு ஊலல்லலா பாடிக்கிட்டு ரெண்டு பேரும் சுவிட்சர்லாந்துல டூயட் பாடுவீங்கன்னு நெனச்சா.. நீ ஏன்டா இங்க வந்தும் அய்யனார் மாதிரி முறுக்கிக்கிட்டு இருந்த? இப்போ என்னய அடிக்க வர?" என சிரித்தான் பாலன்

"ஹே மேன், உங்க தங்கச்சி எங்கேயோ போயிட்டாங்க.. நீங்க அவங்களுக்கு என்னாச்சு ஏதாச்சுன்னு ஒன்னும் கவலைப்படாமல் இப்படிச் இருக்கிறீர்களே?" என கோபப்பட்டாள் ஆதிரா

"அட நீ வேற போமா.. கோவமா போயிருக்காளே.. இவளால யாருக்கு என்ன ஆபத்து வருமோன்னு இல்ல நான் பயப்படனும்.." என வெடி சிரிப்பு சிரித்தான் பாலன்..

ஆதிமூலம், "சிரிக்குற நேரமா இது? வயசு புள்ள எங்க போச்சு என்ன ஆச்சுன்னு தெரியலை போய் பாருடா.. போ" என்றார்.

உடனே வாடகை காருக்கு போன் செய்து வரச் சொல்லிவிட்டு இருவரும் ஒவ்வொரு இடத்திற்காய் பேசியில் அழைத்து விசாரித்தனர்..

ஊருக்கும் செல்லவில்லை, பட்டாசு ஆலைக்கும் செல்லவில்லை.. மருத்துவமனை, ஹோட்டல் என எங்கும் செல்லவில்லை..!! அவளது நட்புகளுக்கும் அவள் எங்கிருக்கிறாள் என தெரியவில்லை..

நேரம் ஆக ஆக விளையாட்டுத்தனம் நீங்கி அனைவரும் கவலையாகவே தேட ஆரம்பித்துவிட்டனர் அவர்களது படபட பட்டாசை..!!

பின் ஆளுக்கு ஒரு வண்டி வர வைத்து திசைக்கு ஒருவராய் தேடி அலைந்தனர்.. மாலை வரை அவள் எங்கிருக்கிறாள் என யாருக்கும் தெரியவில்லை..

கொஞ்சம் கொஞ்சமாய் பயம் ஏற ஆரம்பிக்க அனைவரும் கையை பிசைந்து கொண்டு என்ன செய்வது எனப் புரியாமல் தவித்தனர்..

இப்படித்தான் சில சமயங்களில் விளையாட்டாக நாம் செய்யும் காரியம் நமக்கு மிக வேண்டியவர்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி அவர்களை நம்மிடமிருந்து ஒரே அடியாய் விலக்கிவிடும்.

அப்படியான ஒரு விலகல் ஆக இது இருக்குமோ? என மிகவும் தவித்துப் போனான் ஆதவன்.. தேடி களைத்து அனைவரும் வீடு வந்து சேர தலையில் கை வைத்து சக்திகள் எல்லாம் பறி போனவனாய் அமர்ந்து விட்டான் அவன்..!!

துவண்டு போன அவனைக் கண்டு அனைவருக்கும் உள்ளம் வருந்த தான் செய்தது.. கைக்குக் கிடைத்த புதையலை எங்கோ தொலைத்து விடுவோமோ என்று மிகவும் பரிதவித்துப் போனான்..!
 
Advertisement

New Episodes