Rajalakshmi Narayanasamy

Writers Team
Tamil Novel Writer
#1
வணக்கம் நட்பூஸ்,

ரொம்ப சந்தோசமா இருக்கு.. புது ரைட்டர்னு யோசிக்காம கதை போட்டதுமே படிச்சு எபி பை எபி கருத்து சொன்ன அன்பர்கள் எல்லாருக்கும் ஆயிரம் அன்பு ❤️ ...

ஒரே நாள்ல நிறைய எபி போட்டதால, சைட்டுக்கும் புதுசுங்கறதால என்னால எல்லாரோட கமெண்ட்ஸ்க்கும் ரிப்ளை செய்ய முடியலை...

கோவிச்சுக்காம தொடர்ந்து இதே போல உங்கள் கமெண்ட்ஸ் மூலமா அன்பை பகிர்ந்துப்பீஙகன்னு நம்புறேன்

நன்றி!!புயலின் புன்னகை 24

காரிலிருந்து இறங்கியவன் அங்கு ஒருத்தி இருப்பதையே கண்டு கொள்ளாமல் ஆதிராவை வரவேற்பதில் முனைந்தான்.. "வெல்கம் ஹோம் ஸ்வீட் ஹார்ட்.. ஐ அம் வெரி ஹாப்பி டு இன்வைட் யூ.." என்று புன்னகை சிந்தி அவளது கைபிடித்து அழைத்துச் சென்று விட்டான்..

ஒன்றும் புரியாமல் திக்பிரமை பிடித்தது போல் நின்றாள் பவித்ரா.. அவன் அவளை தவிக்க விட்டதால் அவன் மீது கோபமாக இருந்தாலும் அவனே விபத்தை பற்றி கேள்விப்பட்டு அவளை அழைக்கவும் அந்த கோபம் சற்று மட்டுப் பட்டிருந்தது..

ஆனாலும் மாரியை தனியாய் விட மனமில்லாமல்மருத்துவமனைக்கு சென்று கேன்சர் அறுவை சிகிச்சை முடிந்ததும்., வேலுவை துணைக்கு வைத்து விட்டு அரக்கப்பரக்க ஓடி வந்தாள்!

அவன் வீட்டிற்கு வரும் போது அவனை வரவேற்க தான் அங்கு இருக்க வேண்டும் என்று வந்தாள்.. அவன் அவளை பார்க்கக் கூட இல்லாமல் சென்றது.. அதுவும் உடன் தேவதை போன்ற ஒரு பெண்ணை வேறு அழைத்து சென்றது.. அவள் மனதில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது..

பின்னே வந்த அதியவனும், அகிலாவும் அவளை மகிழ்ச்சியாக அணைத்துக் கொண்டு "உன்னைய பாக்க எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? நீ வரலன்னு ஆதி முகம் அப்படியே விழுந்துடுச்சு.. இப்போ உன்னை பார்த்ததும் தான் அவன் மூஞ்சில சந்தோஷமே தெரிஞ்சது.." என்று அகிலா கூறவும் கொஞ்சம் மனதிற்கு ஆறுதலாக இருந்தாலும் ஏதோ அவளை சமாதானப்படுத்த அவர் சொல்லும் பொய் என்று நினைத்தாள்..!!

அதனால் "நீங்க வந்ததும் பாத்துட்டு போகத்தான் வந்தேன்.. எனக்கு வேலை இருக்கு நான் கிளம்புறேன்" என்றாள் அமைதியாக...

"பாப்பா இது என்ன பழக்கம்? ஒன்னு வராமல் இருந்திருக்கனும்.. வந்துட்டு அவங்க வந்ததும் கிளம்புறேன் சொன்னா.. அது பெரியவங்கள மதிக்காத மாதிரி ஆகாதா? உன்ன இப்படி தான் சொல்லிக் கொடுத்து வளர்த்தேனா? நான்" என சத்தம் போட்டார் ஆதிமூலம்..

அவரது குரலுக்கு கட்டுப்பட்டு வீட்டினுள் சென்ற அவள் சமயலறைக்கு சென்று தயாராய் எடுத்து வைத்திருந்த பழச்சாறுகளை கொண்டு வந்து அனைவருக்கும் கொடுத்தாள்..

அவளை கட்டி அணைத்துக் கொண்ட ஆதிரா.. "ஹே பட்டாசு.. யூ ஆர் பியூட்டிஃபுல்" என அவள் கன்னத்தில் நச்சுனு ஒரு இச்சு வைத்தாள்..

சும்மாவே கடுப்பில் இருந்த பவித்ரா இவற்றையெல்லாம் ரசிக்கவில்லை.. ஏதோ படாதது பட்டது போல் தன் கன்னத்தைத் துடைத்துக் கொண்டு ஆதிராவிடம் ஏதும் பேசாமல் மௌனமாய் விலகியவள். தனது தந்தையின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்..

அங்கிருந்து பார்த்தால், அவன் அவளை கண்டு கொள்ளவே இல்லை..

ஆதிராவின் காதில் ஏதோ கிசுகிசுத்து சிரித்துக் கொண்டிருந்தான்.. அவளும் இவளது புறக்கணிப்பிற்கு வருந்தாமல் அவனுடன் தீவிரமாய் பேசி சிரித்துக் கொண்டிருந்தாள்..

பவி..ஏதோ வேண்டாத விருந்தாளியாக வந்திருப்பதைப் போல நெளிந்து கொண்டு அமர்ந்திருந்தாள்..

"என்னம்மா பையன் ஆபரேசன் என்னாச்சு?" என்றார் அதியவன்..

"நல்ல படியா முடிஞ்சது மாமா.. பாவம் மாரி தான் அழுதே கரைஞ்சாங்க.. நான் மட்டும் போகலைன்னா ரொம்ப கஷ்டமாகியிருக்கும்" என்றாள் உரக்கவே..

அது ஆதிக்கான விளக்கம் என உணர்ந்து அனைவரும் அமைதி காக்க.. அவள் பேசவே இல்லை போல பாவித்து.. "ஆதிரா வா உனக்கு வீட்சை சுத்தி காட்றேன்..." என்றபடி அவள் கை பிடித்து எழுப்பி விட்டான்..

பொறுமை முற்றிலும் தொலைய... "ஆதி.." என கடிந்த பற்களுக்கிடையே பவித்ரா அழைக்க.. அதை காதிலேயே வாங்காமல் ஆதிராவை இழுத்துக் கொண்டு சென்றுவிட்டான் ஆதவன்..!!
 
Attachments

Advertisement

New Episodes