Rajalakshmi Narayanasamy

Writers Team
Tamil Novel Writer
#1
அதியவனின் குடும்பம் வெவ்வேறு ஊர்களில் ஐந்து ஆறு பட்டாசுத் தொழிற்சாலைகல் வைத்திருந்தார்கள்.... ஒரே இடத்தில் ஆலையை வைத்து, ஊர் ஊருக்கு வாகன ஏற்பாடு செய்து, ஆட்களை வர வைத்து வேலை செய்யலாம் தான்...

ஆனால் ஏதேனும் விபத்து நடந்தால் அது மிகப்பெரிய உயிர் சேதத்தையும் பொருட் சேதத்தையும் ஏற்படுத்தும்... எனவே பிரித்து பிரித்து பல ஊர்களில் தொழிற்சாலைகளை அமைத்திருந்தார்கள்...

ஆதலால் மாவட்டம் முழுவதும் அதியவனின் குடும்பம் பற்றி பரவலாக அனைவருக்கும் தெரிந்திருந்தது.. தொழிற்சாலைகளை ஆரம்பித்தது போலவே அந்தந்த ஊர்களில் பல சேவைகளையும் செய்து கொண்டிருந்தார்கள்... பள்ளிகளுக்கு மேசை, நாற்காலிகள் வழங்குவது.. நோட்டுப் புத்தகங்கள் வழங்குவது, நூலகங்களுக்கு தேவையான உதவிகளை செய்வது.., ஊர் திருவிழா சமயங்களில் அதற்கு உதவி செய்வது.., தனிப்பட்ட முறையில் யாரேனும் வந்து உதவி கேட்டால்.. அவர்களுக்கு உதவுவது என எல்லா வகையிலும் மக்களுடன் துணையாக இருந்தார்கள்..

எனவே வளையபட்டி திருவிழாவிற்கும் அவர்களது பங்களிப்பு நிச்சயம் இருக்கும் என்ற அடிப்படையில் அவர்களை ஊர் கூட்டத்துக்கு அழைத்திருந்தார்கள் ஊர் பெரியவர்கள்... வழக்கமா ஊர் மக்களை கூட்டி திருவிழா எப்போது நடத்தலாம்? என்னென்ன கலை நிகழ்ச்சிகள் நடத்தலாம்? என்பது பற்றி விவாதிப்பார்கள்...

பெரும்பான்மையான மக்கள் சொல்லும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும்.. அதன் பிறகு ஊர் முக்கியஸ்தர்கள் ஏதேனும் ஒரு இடத்தில் கூடி விழா ஏற்பாடுகளை பற்றி விவாதிப்பார்கள்..

அதுபோல அந்த ஊரில் விவாதிக்க அவர்கள் தேர்ந்தெடுத்த இடம்.. ஆதி மூலத்தின் தென்னந்தோப்பு... மற்ற இடங்கள் போலல்லாமல் பாதுகாப்பாகவும், பேசுவதற்கு இடையூறு இல்லாமல் இருக்கும் என்பதால்.. எப்போதுமே அவருடைய ஏதாவது ஒரு தோப்பில் வைத்து தான் நிகழ்ச்சிகளுக்கான கூட்டங்கள் நடக்கும்.

மற்றுமொரு முக்கிய காரணம் இலவசமாக இளநீர், பதநீர், நுங்கு என்று வெயிலுக்கு இதமாக உண்டு விட்டு வரலாமே? எங்கு சென்றாலும் நமக்கு சாப்பாடு தான் முக்கியம் இல்லையா?!!


“நான் நன்கொடை தருவேன் அன்னதானத்திற்கு பணம் தருகிறேன்”, என்று கூறி விட்டு ஒதுங்கிவிட முடியாது.. நகரங்களில் நடக்கும் விழாக்களில் வேண்டுமானால் பணத்தை வாங்கிக் கொண்டு சரி என விட்டு விடுவார்கள்.. ஆனால் கிராமங்களில் பணம் கொடுக்கிறோமோ இல்லையோ நம்முடைய பங்களிப்பு தான் முக்கியமாக கருதுவார்கள்..

" நான் பணம் தரேன்.. நீங்களே பாத்துக்கோங்க" என்றால் "எங்க கிட்ட இல்லாத பணமா? தலைக்கு நூறு ரூபாய் அதிகமாக வரி போட்டா சரியா போது... " என்பார்கள்..

எனவே விழாவிற்கான ஏற்பாடுகள், விவாதங்கள் போன்றவற்றில் அதியவனும் கலந்து கொள்ள வேண்டியது இருந்தது.. ஆதிமூலம் நட்பும் மேலும் மேலும் நெருங்கி கொண்டிருந்தது..

பவித்ராவிற்கு இது இறுதி ஆண்டு.. பரீட்சைகள் எல்லாம் ஒரு அளவு முடிந்து ப்ராஜெக்ட் வேலைகளையும் சமர்ப்பித்து முடித்துவிட்டார்கள் ...

எனவே கல்லூரியில் அவர்களது கடைசி ஆண்டு விழாவை மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.. அனைவரும் ஒன்று போல, ஒரே மாதிரியான சேலை அணிந்து தேவதைகள் போல வலம் வந்தார்கள்..

கல்லூரி படிக்கும் பெண்கள் எப்போதாவது ஒரு முறை சேலை கட்டுவது அழகு தான்...!! என்றாவது ஒரு நாள் தான் என்பதால் அவ்வளவு நேர்த்தியும் கவனமும் எடுத்து ஆடை அலங்காரங்களை செய்து கொண்டு வருவார்கள்... பட்டாம் பூச்சிகளாய் அங்குமிங்கும் திரியும் பெண்களை கண்டாலே உள்ளம் கொள்ளை போகும்...

அப்படித் தான் அன்று அவளது கல்லூரியும் வண்ணமயமானதாக களைகட்டி இருந்தது.. ஒவ்வொரு பிரிவிற்கும் ஒவ்வொரு நிறம் என தேர்ந்தெடுத்து ஒரே மாதிரியான புடவைகள் வாங்கி அதையும் வித விதமாய் அணிந்து கொண்டு சிட்டுக் குருவிகளாய் சிறகடித்து கொண்டிருந்தனர் தேவதை பெண்கள்..

ஆண்டு விழா எல்லாம் தொடங்கி எப்போதும் பேசுவது போல் வரவேற்புரை, ஏற்புரை எல்லாம் முடிந்து வருடாந்திர கணக்குகள் என எல்லாவற்றையும் சமர்ப்பித்து, மாணவர்கள் ஒரு தூக்கத்திற்கு சென்று திரும்பி வந்து அற்புதமான ஒரு குத்தாட்டத்துடன் களை கட்டியது ஆண்டு விழா... நடு நடுவே பரிசளிப்பு வைபவங்களும் நடந்த வண்ணம் இருந்தன...

விழா மேடையில் ஆதவனை கண்டதுமே மயக்கம் போடாத குறை தான் பவித்ராவிற்கு... அவ்வளவு மாணவிகள் கூட்டத்தையும் சல்லடையாக அளந்தவனின் கண்களுக்கு அவனுடைய தேவதையும் படத்தான் செய்தாள்..

அவள் அவன் கண்களில் பட்ட நொடி முதல் அவளை விட்டு பார்வையை விலக்கவில்லை ஆதவன்... சிறிது நேரத்தில் அவளையே பார்த்துக்கொண்டு இருப்பவனை கண்டு கொண்டு மேலும் திகைத்துப் போனாள் பவித்ரா...

அவனை அவள் பார்ப்பதை உணர்ந்ததுமே.. அவளைப் பார்த்து கண்ணடித்தான் ஆதவன்..

" ஏண்டா மகேஷ்பாபு மூஞ்சி.. அமுல் பேபி பயலே.. என்னை பார்த்து கண்ணா அடிக்கிற? என் கையில தனியா சிக்கனும் .. உனக்கு இருக்குடி" என்று மனதிற்குள் கறுவிக் கொண்டாள் பவித்ரா...

விழா மேடையில் இப்போது போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசளித்து கொண்டிருந்தார்கள்..

அமர்ந்திருந்த ஆதவன் எழுந்து நிற்கவும், இம்புட்டு நேரம் யாருக்கும் எந்த பரிசு கொடுக்காம சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவன்... இப்போ யாருக்குப் பரிசு கொடுக்க எழுந்து நிற்கிறான்... என்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள்.., யாருடைய பெயரை கூறுகிறார்கள் என்று கூட கவனிக்க வில்லை... அவள் அருகில் இருந்த தோழிகள் அவளை விரட்டினர்.. "உன்ன தான் கூப்பிடுறாங்க!! ஓடு.. ஓடு.. " என்று அனைவரும் விரட்டவும் என்னவென்றே புரியவில்லை அவளுக்கு...

திருதிருவென்று முழித்துக் கொண்டிருந்தாள்... "அடியே இப்படியே அந்த மைதா மாவு மூஞ்சிய சைட்டடிச்சிருக்க... என்ன பேசுதுகன்னே ஒன்னும் புரியலையே" என தனக்குள்ளேயே புலம்பிக்கொண்டிருந்தாள்...

"அடியே நீ எழுதிய கட்டுரைக்கு சிறந்த சிந்தனை பரிசு கொடுக்கிறார்களாமா... உன்னை தான் அப்போத போட்டு கூப்டுட்டு இருக்காங்க" என்றனர் தோழிகள்...

"இது என்னடா உலக அதிசயமா இருக்கு!! நமக்கு என்னதுக்கு பரிசு கொடுக்கிறார்கள்" என்று யோசித்தபடியே விழா மேடையில் ஏறினாள்..

அங்கு அவளை தான் ஆகா ஓகோ என்று புகழ்ந்து கொண்டிருந்தான் திலக்... "இயந்திரவியல் படிக்கும் மாணவர்களுக்கு கற்பனை திறன் மிக முக்கியம்... கட்டுரை எழுதச் சொன்னால்.., இன்னும் பள்ளி மாணவர்கள் போல தலைவர்களைப் பற்றியும், சுற்றுலாக்களை பற்றியும் எத்தனை நாட்களுக்கு எழுதி கொண்டிருப்பீர்கள்? இந்தப் பெண்ணின் கட்டுரை மிகவும் சுவாரஸ்யமானதாக அனைவரின் கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது.. எனவே இதை கல்லூரியிலுள்ள எல்லா நோட்டீஸ் போர்டுகளிலும் ஒட்டி வைக்க இருக்கிறோம்... அதை அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.. எந்த ஒரு சிறு விஷயத்திற்கும் மாற்றி யோசித்து கவனம் ஈர்க்க வேண்டும்" என்று கூறிக் கொண்டிருந்தான்.

கேட்ட பவித்ராவிற்கே சிரிப்பை அடக்க முடியவில்லை "என்னடா இது நாம சும்மா பொழுது போகாமல் போய் கட்டுரை எழுதிட்டு வந்தா இவன் அதையும் புகழ்ந்து கொண்டு இருக்கானே!!" என நினைத்தபடி சென்றவளுக்கு ஆதவன் கையால் பரிசு கிடைத்தது... பரிசை அவள் கைகளில் கொடுத்தவன் கைகளை விடவே இல்லை.. புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்ததால் அதற்கு மேல் அவனை முறைக்கவும் இயலவில்லை...

அவள் கையை பிடித்துக் கொண்டு.. அவன் மீண்டும் அவளைப் பார்த்து குறும்பாய் கண்ணடித்து.. யாரும் அறியா வண்ணம் உதட்டை சுளித்து பறக்கும் முத்தம் ஒன்றையும் பரிசளித்தான்..

"அடேய்.. மகேஷ்பாபு மூஞ்சி உன்னோட க்ரைம் ரேட் ஜாஸ்தியாகிட்டே இருக்கு டா.. மவனே, எப்படியும் ஊர் பக்கம் வந்துதான ஆகணும்? உன்னய கவனிச்சுக்கிறேன்" என்று கறுவிய படி அவனை முறைத்தாள்..

என்ன தான் அவனை முறைத்தாலும் அந்தப் புயலில் உள் நெஞ்சுக்குள் சிறிதாய் ஒரு தென்றல் வீசத் தான் செய்தது!!

ஆதவன் சிறிது சிறிதாய் அவளிடம் தன்னை பறிகொடுத்து... அவளை அவளது மனதை தட்டிப் பறிக்க முயற்சி செய்தான்...!! அவன் முயற்சி பலிக்குமா புயல் தென்றலின் கை சேருமா??
 
Attachments

Sundaramuma

Well-Known Member
#5
தொழில் பண்ணுறவன் இப்படி விடலை பையனாட்டம் பறக்கும் முத்தம் கண்ணடிப்பு செய்திருக்க வேண்டாம் ....
நன்றி ராஜலக்ஷ்மி :love::love:
 
Rajalakshmi Narayanasamy

Writers Team
Tamil Novel Writer
#6
தொழில் பண்ணுறவன் இப்படி விடலை பையனாட்டம் பறக்கும் முத்தம் கண்ணடிப்பு செய்திருக்க வேண்டாம் ....
நன்றி ராஜலக்ஷ்மி :love::love:

என்ன செய்ய எல்லாம் காதல் படுத்தும் பாடு...

நன்றி சிஸ்
 
Advertisement

New Episodes