Rajalakshmi Narayanasamy

Writers Team
Tamil Novel Writer
#1
யசோதா காடுகளில் சுற்றிக் கொண்டிருந்தார்... எவ்வளவு பெரிய பண்ணை வைத்து விவசாயம் செய்தாலும் சிலவற்றை தேடி காடு கரை என அலைவது கிராமங்களில் சகஜம் தான்..

மழை நேரத்தில் தானாக முளைத்து ஆங்காங்கே விரவிக்கிடக்கும் அதலைக்காய் கொடியை தேடி அலைந்து கொண்டிருந்தார்.. வீட்டில் அனைவருக்குமே அதலைக்காய் என்றால் அவ்வளவு உயிர்.. பாகற்காய் போல மிகவும் குட்டியாக இருக்கும் அதலைக்காய் வெண்டைக்காயில் இருப்பதைவிட கொஞ்சம் பெரிய விதைகளை கொண்டு இருக்கும்.. பாகற்காயை போலவே பயங்கர கசப்பை வழங்கும் காய்.. மழை நேரத்தில் மட்டுமே அதுவும் தென் மாவட்டங்களில் சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே விளையும் அதலைகாய்க்கு கிராமங்களில் கூட மவுசு அதிகம் தான்..!!

அதலைக்காய் சீசனில், அனேகமாக எல்லோர் வீட்டிலும் தினமும் கூட அதலைக்காய் செய்வார்கள்.. ஏனெனில் சீசன் முடிந்து விட்டால் எங்கு தேடினாலும் கிடைக்காது.. விளைவிக்கவும் இயலாது என்பதால் அரிய பொருளை உரிய நேரத்தில் பயன்படுத்திக் கொள்வார்கள்..

யாரையாவது பறித்து வரச் சொன்னால் பரித்து கக்கத்தில் கட்டிக்கொண்டு "காயே இல்லை அம்மா.. " என்று விடுவார்கள் நம் மக்கள்..!! அதனால் வீட்டுத் தேவைக்கு தானே அதலைகாய் பறிக்க காடுகளில் திரிந்து கொண்டிருந்தார் யசோதா.

"யசோதாம்மா, மகளுக்கு கல்யாணம் எப்போ?" என கேட்டார் எதிர்ப்பட்ட பெரியவர் ஒருவர்

"இந்த ஐப்பசி கடைசியில் கல்யாணம் குறித்து இருக்கு ஐயா.." என்றார் மகிழ்வாக

"மாப்பிள்ளை எல்லாம் பார்த்தாச்சா? அப்போ நம்ம பக்க சொந்தமா? இல்ல ஐயா அவங்க பக்க சொந்தமா?"

" அதெல்லாம் இல்லைங்க.. நம்ம பயராவுசு காரக மகனுக்கு கேட்டாங்க.. அவர்களுக்குத் தான் கொடுக்கிறதா இருக்கு.. தேதி குறிச்சாச்சு .. சீக்கிரமா பத்திரிக்கை வைக்க வர்றோம்.. " என்றார் மகிழ்வாக..

பெரியவர் ஒன்றும் தெரியாமல் கேட்கவில்லை.., அரசல் புரசலாக ஊரெல்லாம் திருமணச் செய்தி பரவி இருந்தது.. அதனால் எதிர்ப்பட்ட அனைவரும் தெரியாமலே கேட்பது போல் கேட்பதும் அதற்கு உரிய பதில் சொல்வதும் ஆக குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சி தான்..

இரண்டு ஆண்டுகள் மூன்று ஆண்டுகள் என்று மகள் இழுத்துக்கொண்டே சொல்வாளோ? என்று கவலைப்பட்ட தாய்க்கு, 'இந்த மாசத்துக்குள்ள கல்யாணத்த முடிங்க' என்று பவித்ரா சொன்னது பேரின்பம் தான்..

அனைவருமே மிக மகிழ்ச்சியாக கல்யாணத்திற்கு தயார் ஆகினர்..

எந்த தொழிலும் குறைந்ததுமில்லை உயர்ந்ததுமில்லை.. இருவரும் வேறு வேறு துறைகளில் தங்களுக்கு சம்பந்தமில்லாத வேலைகளை எடுத்திருந்தாலும், அதில் இந்த ஒன்றரை வருடத்தில் நல்ல பெயரை வாங்கி இருந்தார்கள்..

வேண்டியது, கடின உழைப்பும் உண்மையும் நேர்மையும் தானே தவிர வேறு எதுவும் இல்லை.. என நிரூபித்து இருந்தார்கள்!

தங்கள் காதலினால், காதலுக்காக எடுத்து செய்த வேலையை 100 சதவீதம் உண்மையாக செய்ததால் இருவருக்குமே திருப்தியாக இருக்க, எந்த மன சங்கடமும் இல்லாமல் திருமணத்திற்கு தயாராகினர்.. ஊரிலும் கூட பலருக்கும் இந்த திருமணத்தை நினைத்து மகிழ்ச்சி தான்..

ஆதவன் இறக்கை இல்லாமல் வானத்தில் பறந்தான்.. வெளியே காட்டிக் கொள்ளாவிட்டாலும் அவன் மீதான காதலை மனதில் சுமந்து வந்த மங்கை அவள் தனக்கான நல்வாழ்வை எதிர்நோக்கி காத்திருந்தாள்..

திருமண வேலைகள் படு பிசியாக செல்ல ஆதிரா என்னேரமும் பாலன் உடனே சுற்றினாள்..

அவள் இயற்கை விவசாயத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஆராய்ச்சி மாணவி..!! ஆதவனும் இயற்கை விவசாயம் செய்வதாக சொல்லவே, தமிழ்நாட்டில் தன்னுடைய ஆராய்ச்சிக்கான தகவல்களை திரட்ட ஆதவனுடன் கிளம்பி வந்தாள்.. அவன் தன் திருமண கனவுகளில் மூழ்கி விட அவளுக்கு ஆசானாக, வழிகாட்டியாக மாறிப் போனான் பாலன்.

ஒவ்வொரு நாளும் அவனது அறிவையும் தெளிவையும் கண்டு அவள் வியந்து போனாள்.. அவளது குணத்தையும் , கூர் புத்தியையும், தெளிவான சிந்தனையும் கண்டு அவன் மயங்கி போனான்..

சத்தமில்லாமல் புதிதாய் ஓர் காதல் காவியம் எழுதப்பட்டுக் கொண்டிருந்தது.. விவசாய வேலை பார்ப்போர், பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், பல ஆலை அதிபர்கள், விவசாயப் பெருமக்கள் என மாவட்டத்தின் முக்கால்வாசி பேர் கூடியிருந்த மிக பிரம்மாண்டமான திருமணம் ஆக அரங்கேறிக்கொண்டிருந்தது ஆதவன்- பவித்ரா திருமணம்.

வாழ்த்த வந்தோர் வியந்து போகும் வண்ணம் முழுக்க முழுக்க இயற்கை விவசாயத்தில் விளைவித்த காய்கறிகளை கொண்டு இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகள் பரிமாறப்பட்டன.. அரசாங்கத்தின் வழிகாட்டுதலின் படி புதிதாக முயற்சி செய்து உருவாகிக் கொண்டிருக்கும் பசுமை பட்டாசுகள் வெடித்து சிதறி அனைவருக்கும் குதூகலத்தை அளித்தன..

காதல் கொண்ட மனதுடன் காத்திருந்தவன் சில மணி நேர காத்திருப்பை தாங்க முடியாதவனாய் தவித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் ஹோம குண்டத்தின் முன்னே.. தேவதை பெண் அவள் எளிமையான பருத்தி சேலையில் அன்ன நடை நடந்து வந்து அன்னல் அவன் கைகளினால் பொன் தாலி பெற்றுக் கொண்டாள்..

அதன் பின் அந்த பண்ணை வீட்டில் ஆரம்பித்தது அவர்களுக்கான அதகலமான குதூகலமான வாழ்க்கை..!!

இந்த ஒன்றரை வருடத்தில் தன்னுடைய குறும்புகளை குறைத்துக் கொண்டு பொறுப்புகளை அதிகம் ஏற்றுக் கொண்ட பின், அவள் கணவன் முன்னால் மட்டும் சிறு குழந்தையாகவே நடந்து கொண்டாள்..

இவள் உறங்கும் நேரம் அவன் எழுந்தால், அவனை பிடித்து இழுத்து கீழே தள்ளி அவனை கட்டிக் கொண்டு உறங்குவதும்.. இவளுக்கு சீக்கிரம் முழிப்பு வந்து விட்டால் ஆதவன் முகத்தில் ஒரு ஜாடி தண்ணீரை கவிழ்த்து எழுப்பி விடுவதுமாக அவனை பாடாய் படுத்தினாள்.

சமையல் என்ற பெயரில் இருவரும் கிச்சனுக்குள் செய்யும் அட்டகாசங்களில் பயந்து போய் எலி கூட அங்கே தங்க யோசித்து ஓடி விட்டது..

ஏதோ பெயர் தெரியாத உணவை இருவருமாய் சேர்ந்து சமைத்து, உண்டு விட்டு, வேலைகளை கவனிக்க சென்றால் இடையிடையே இருவர் இடையிலும் 100 அழைப்புகள் பறக்கும்.. அதில் ஆயிரம் காதல் வார்தைகள் மணக்கும்..!!

இடையிடையே.. விடுப்பு எடுத்துக் கொண்டு இருவருமாய் சிறு சுற்றுலாக்களுக்கு கிளம்பி விடுவார்கள்.. நாட்கள் பொழுதுகள் நொடிகளாக கடந்து கொண்டிருந்தது.. ஜோடி புறாக்களுக்கு..

ஆனால், இன்னமும் குடும்பம் என்ற பொறுப்பை ஏற்க தயங்கினவளாகவே இருந்தாள் பவித்ரா..!

ஒரு குழந்தையை பெற்று பேணி வளர்க்கும் பக்குவம் இன்னும் தனக்கு வரவில்லை என அவள் தயங்கவே அவள் விருப்பத்திற்கு மதிப்பளித்து நடந்து கொண்டான் ஆதவன்..

இதற்கிடையே பாலனுக்கும் ஆதிராவிற்கும் திருமணம் முடிய.. அவள் தன் ஆராய்ச்சியை முடிக்க ஆஸ்திரேலியா கிளம்பிச் சென்றாள்.. ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தப்படும் நவீன விவசாய முறைகளை கற்க பாலனும் அவளுடன் பயனப்பட்டான்..

இரண்டு பண்ணைகளையும், ஆலைகளையும் பார்க்கும் பொறுப்பு முழுவதும் ஆதவன்-பவித்ராவை சேர, மகிழ்ச்சியாகவே புது புது யுக்திகளை சிந்தித்து விளையாட்டு போலவே வேலை பார்த்து.. ஒருவருக்கு ஒருவர் தோள் கொடுத்து மிகச் சிறப்பாகவே பணியாற்றினர்..

....

ஓராண்டு கழித்து ..,

பாலன்-ஆதிரா தம்பதி தங்கள் ஒரு மாத குழந்தை க்ரிஷிவா வுடன் இந்தியா திரும்பினர்..

ஏர்போர்ட்டில் குழந்தையை கைகளில் வாங்கிய பவித்ராவிற்கு கைகள் நடுங்கின.. சிறு வயது பாலனை பார்த்தது போல இருந்த குழந்தையை கண்டு ஆச்சர்யம் என்றால், தான் அத்தையானது மிகவும் மகிழ்வாக இருந்தது..

மருமகனை கைகளில் ஏந்திய நொடி.. அவளுள்ளும் தாய்மை உணர்வு துளிர்க்க... இதே போல குட்டி ஆதவனை கைகளில் ஏந்தும் ஆவலும் முகிழ்த்தது..

அதன் விளைவாய் அவனை கண்டு செம்முறுவல் செய்தவள்.. (அது தாங்க வெக்கம் கலந்த புன்னகை) குழந்தையை மார்போடு அணைத்து முத்தமிட்டாள்..

ஆதவனுக்கும் பவித்ராவை போன்ற ஒரு குழந்தையை கைகளில் ஏந்தும் எண்ணம் மனதுள் வேர்விட.., அவனவளின் பார்வையின் அர்த்தத்தையும் படித்துக் கொண்டான்..

உடனே டிக்கட் கவுண்டருக்கு சென்றவன் மறுநாளே பாலி தீவு செல்ல முன்பதிவு செய்துவிட்டு வந்து டிக்கட்டுகளை மனைவியின் கைகளில் திணித்தான்...

பார்வையிலேயே தன் எண்ணம் புரிந்து நடக்கும் கணவனை கண்டு கழிப்பு மிகுந்தாலும்.. "அடேய் மைதா மாவு.. அவன் இப்போ தான் வந்து இறங்கிருக்கான்.. அவன் கூட, குழந்தை கூட ஒரு ஒரு வாரம் இருந்திட்டு கிளம்பலாம்ல..?? ஏன் டா நாளைக்கே டிக்கட் போட்டு வந்து என் மானத்த வாங்குற..?" என பல்லை கடிக்கவும் மறக்கவில்லை அவனது சீனிவெடி..

"ஏ மத்தாப்பு.. அவன் குழந்தைய வச்சி நீ விளையாடினா அங்க இருந்து நகராம நீயே குழந்தை ஆகிடுவ.. அப்புறம் உன்னய கடத்துறது கஷ்டம்.. ஒரு பத்து மாசம் பையன் தனியா விளையாடட்டும்.. நாம அதுக்குள்ள அவனுக்கு விளையாட ஒரு ஆள ரெடி பண்ணிட்டு ஓடி வந்துடுவோம்.. " என்றான் கிறக்கமாக..

"ம்ம்ம் எனக்கு கேட்ருச்சு.. நடத்து நடத்து.. என்சாய் மேன்.." என உரக்க நகைத்தாள் ஆதிரா..

"ஏய் உன் வேலைய மட்டும் பாரு பக்கி.. பாலா உன் புல்லுச் செடிய அங்கிட்டு இழுத்துட்டு போ.. இல்ல மருந்து அடிச்சி விட்ருவேன்.." என்றான் சிரியாமல்..

"டேய் நீ எஞ்செடிக்கு மருந்தடிச்சா.. நான் உன் பட்டாசுல தண்ணிய ஊத்திருவேன்.." என பதிலுக்கு எகிறினான் பாலன்..

"அய்யோ இதுக ரெண்டும் நமக்கு வைக்கிற பட்டப்பேருகளுக்காகவாவது இவனுகள வாய தொறக்க விடக்கூடாது பவி.." என கவலைப்பட்டாள் ஆதிரா..

இருவரும் அவரவர் கணவனை இடுப்பில் கை வைத்து முறைக்க.., இருவரும் கை கட்டி வாய் பொத்தி குனிந்து கும்பிடு போடுவது போல சைகை செய்ய.. கலகலத்துச் சிரித்தனர் பெரியவர்கள்..!!

அவர்களின் சிரிப்பில் மகிழ்ந்து.., தனக்கு விளையாட ஒரு துணையும் கிடைக்கப் போவதை உணர்ந்தோ என்னவோ தானும் சிரித்தான் க்ரிஷிவா..!!


அன்பும் காதலும் தழைத்தோங்கட்டும்...!!

நன்றி!!
 
Attachments

Keerthi elango

Well-Known Member
#3
Really superb ya....Rendu thozhil pathi neraya vishayangala kathaioda pokulaye solirukeenga....athu unmayalume arumai...pavi veedum thotamum enaku rmba pudichuthu.....athi-pavi...bala-aathira... Jodi super...then mazhaikanji concept enaku rmba pudichuthu....really superb... Keep rockinggg dr...ithe mari adutha adutha stories poda enta best wishes..
 
Rajalakshmi Narayanasamy

Writers Team
Tamil Novel Writer
#5
Really superb ya....Rendu thozhil pathi neraya vishayangala kathaioda pokulaye solirukeenga....athu unmayalume arumai...pavi veedum thotamum enaku rmba pudichuthu.....athi-pavi...bala-aathira... Jodi super...then mazhaikanji concept enaku rmba pudichuthu....really superb... Keep rockinggg dr...ithe mari adutha adutha stories poda enta best wishes..
ரொம்ப நன்றி சகி... மகிழ்ச்சி
 
Rajalakshmi Narayanasamy

Writers Team
Tamil Novel Writer
#10
Hi! Very Nice story!
I felt, ரொமான்ஸ் கம்மியா இருந்தது, ரொம்ப heroin orienteda இருந்தது.
என் கதைகளில் எப்பவுமே ரொமான்ஸ் கம்மியா தான் இருக்கும் சிஸ்.. ரெடியாகிக்கோங்க..
 
Advertisement

New Episodes