புதிராய் நீயெனக்கு 13

Barkkavi

Writers Team
Tamil Novel Writer
#1
ஹாய் பிரெண்ட்ஸ்...:love::love::love: கொஞ்சம் லேட்டாகிடுச்சு...:giggle::giggle::giggle: சாரி...:):):) அடுத்த புதிர் இதோ... படிச்சுட்டு உங்க கமெண்ட சொல்லிட்டு போங்க:giggle::giggle::giggle:

1585157688389.jpg


புதிர் 13

விமான நிலையத்தின் வெளியே சிவா, சேகர், அரவிந்த் மூவரும் பேசி சிரித்துக் கொண்டிருக்க, அதற்கு சம்மந்தமே இல்லாதது போல தனியாக எதையோ யோசித்துக் கொண்டிருந்தான் வருண். அவன் மனது ஏதோ பெரிதாக நடக்கப் போகிறது என்று அடித்துக் கொண்டது.

அப்போது தான் அரவிந்த் தன் நண்பனைக் கவனித்தான். காலையிலிருந்தே அவன் சரியில்லை… என்ன பிரச்சனையாக இருக்கும் என்று அவன் யோசிக்க, அவனின் யோசனையைத் தடை செய்தது, “ஹாய் அங்கிள்”, என்ற இனிய குரல்…

‘எவ அவ…’ என்று மனதிற்குள் கூறிக் கொண்டே திரும்பியவன், அங்கு நின்றுக் கொண்டிருந்தவளைப் பார்த்து ஒரு நொடி அதிசயித்தான்.

ப்ளூ அம்ப்ரெல்லா டாப், சான்டல் லெக்கின் அணிந்து அவள் உயரத்தை மேலும் உயர்த்திக் காட்ட, அதே சான்டல் வண்ண ஹீல்ஸ் போட்டு, உதட்டில் சிரிப்பும், கண்களில் குறும்புமாக நின்றிருந்தாள் அவள்.

“லேட்டாகிடுச்சா அங்கிள்…” என்று அவள் கேட்க, அவளின் குரலை ரசித்திருந்தான் அரவிந்த்.

ஆனால் மற்ற பெண்களை ரசிப்பது போன்ற ரசிப்பில்லை இது. ஒரு அண்ணன் தன் குட்டி தங்கையை ரசிப்பது போன்ற, நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கும் தன் சிறு வயது தோழியை ரசிப்பது போன்ற ரசிப்பு இது…

ஆம்… அவள் வர்ஷினி, அரவிந்தின் சிறு வயது தோழி. சேகரின் பூர்விக ஊரும் வர்ஷினியின் தந்தையான கலிவரதனின் பூர்விக ஊரும் ஒன்றே ஆகும்… கலிவரதன் பரம்பரைப் பணக்காரராக இருந்தாலும், அந்த செருக்கு இல்லாமல் அனைவரிடமும் சாதாரணமாகவே பழகுவார். அப்படியான பழக்கமே வரதன்-சேகர் இருவருக்குமிடையே இருந்தது.

விடுமுறை நாட்களை அவ்வூரில் கழிக்கும் வழக்கத்தை இரு குடும்பமும் மேற்கொண்டு வந்தது. அதுவே வர்ஷினி மற்றும் அரவிந்தின் நட்பிற்கு காரணமும் ஆகியது.

வர்ஷினியை அரவிந்திற்கு சிறு வயதிலிருந்தே பிடிக்கும். அவனின் ஐந்தாவது வயதில் தான் அவளை முதல் முறையாக சந்தித்தான். ரோஸ் கலரில், தன் குட்டி விரலை வாய்க்குள் வைத்து சப்பிய படி, தன் குட்டி கண்களால் அவனையே ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்த கொலு கொலு கன்னங்களையுடைய வர்ஷினியை அரவிந்திற்கு பார்த்ததும் பிடித்ததில் ஆச்சரியமில்லை.

“ம்மா… இந்த பாப்பாவ நம்ம தூக்கிட்டு போயிடலாம்…” என்று அவன் கூற, அங்கிருந்த அனைவரும் சிரித்தனர்.

மகேஸ்வரி அவனிடம், “ஏன் டா அர்வி…” என்று கேட்க…

“ஸ்கூல்ல எல்லாருக்கும் தங்கச்சி பாப்பா இல்ல தம்பி பாப்பா இருக்காங்க… எனக்கும் வருக்கும் தான் இல்ல…” என்று உதட்டைப் பிதுக்க, அதைக் கேட்ட மகேஸ்வரியின் மனதிற்கு பாரமாய் இருந்தது.

அவருக்கு கர்ப்பப்பை பலவீனமாக இருப்பதால் இனி குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். இது வரதன் குடும்பத்தினருக்கும் தெரிந்ததால், அங்கு சற்று சங்கடமான சூழ்நிலை உருவாகியது.

வரதனே அங்கு நிலவிய மௌனத்தை கலைத்தார். “அர்வி, நீ பாப்பாவ தூக்கிட்டு போய் உன் தங்கச்சி பாப்பான்னு சொன்னா அப்போ வருணுக்கு தங்கச்சி பாப்பா இருக்காதே… அப்போ அவனும் உன்ன மாதிரி ஃபீல் பண்ணுவான்ல… அப்பறம் பாப்பாவ தூக்கிட்டு போய்ட்டேனா உன் கௌரிம்மா அழுவாங்களே...” என்று கூறினார்.

குட்டி அரவிந்திற்கு என்ன புரிந்ததோ, சிறிது நேரம் குட்டி வர்ஷினியையும் அவளின் அன்னை கௌரியையும் பார்த்தவன், “வரதப்பா எனக்கு வருவும் ஃபீல் பண்ணக் கூடாது, கௌரிம்மாவும் அழக்கூடாது… அதுக்கு என்ன பண்ணனும்…” என்று கேட்க…

அவனை தன் மடியில் அமர்த்தியவர், “நீ ஸ்கூல் லீவ் விடுறப்போ இங்க வந்து பாப்பாவ பார்த்துக்கோ… அப்போ வருணும் ஃபீல் பண்ண மாட்டான்… உன் கௌரிம்மாவும் அழ மாட்டாங்க… ஓகே வா…” என்றார்.

அவனிற்கு அந்த ஏற்பாடு பிடித்திருக்க, சம்மதமாக தலையாட்டினான். அப்போது கூட வர்ஷினியை வருணிற்கு தங்கையாக வரதனும் கூறவில்லை, குட்டி அரவிந்தும் கேட்கவில்லை… இதுவும் விதியின் செயலோ…

அன்றிலிருந்து அரவிந்தின் குட்டி தங்கையாக, வரதன் – கௌரியின் சுட்டிப்.பெண்ணாக, சேகர் – மகேஸ்வரியின் பெறாத பிள்ளையாக வலம் வந்தாள் வர்ஷினி.

ஒவ்வொரு விடுமுறைக்கும் அரவிந்த் – வர்ஷினியின் சேட்டையில் அந்த ஊரே ஸ்தம்பித்து விடும். அவர்கள் இருவரும் வருகிறார்கள் என்றால் ஊரிலிருப்பவர்கள் தெறித்து ஓடிவிடுவர். தினமும் இவர்களினால் இவர்கள் வீட்டில் பஞ்சாயத்து தான்.

சேகர் தன் மகனைக் கண்டித்தால் வரதனும் கௌரியும் அவனைக் காப்பாற்ற வந்து விடுவர். கௌரி வர்ஷினியை அதட்டினால், சேகரும் மகேஸ்வரியும் அவர்களின் பெறாத மகளுக்காக சண்டைக்கே வந்து விடுவர். இவ்வாறு அவர்கள் இருவரின் குறும்புகள் அவர்கள் வீட்டை மட்டுமல்ல ஊரையே உயிர்ப்போடு வைத்திருக்கும்.

அவர்கள் ஊரிலிருந்தால், புகாரளிக்கும் அவ்வூர் மக்களும், அவர்கள் விடுமுறை முடிந்து ஆளுக்கொரு பக்கம் கிளம்பும் போது அடுத்து எப்போது வருவார்கள் என்று காத்திருப்பர்.

வருணிடமும், சிவாவிடமும் வர்ஷினியைப் பற்றி அரவிந்த் சொல்லியிருந்தாலும், வருண் அதை பெரிதாக கவனித்ததில்லை. அவன் காண்பித்த புகைப்படங்களையும் ஒழுங்காகப் பார்த்ததில்லை.

இதுவும் ஒரு வகை பொஸசிவ்னெஸ் தான்… தன் நண்பன் தன்னளவிற்கு இன்னொருவருக்கு முக்கியத்துவம் அளிப்பது... வருண் அரவிந்திடம் எதுவும் சொல்லவில்லை என்றாலும், அரவிந்த் அதை சரியாக கணித்து, அதன் பின்பு வருணிடம் வர்ஷினியைப் பற்றி எதுவும் சொல்வதில்லை… காலப்போக்கில் வர்ஷினி என்ற பெயரையே வருண் மறந்துவிட்டான்.

பாசத்தில் சிவாஜி – சாவித்திரியையே மிஞ்சி விடும் இந்த அண்ணன் – தங்கை ஜோடி முட்டிக் கொண்டது ஒரே விஷயத்தில் தான். அது அரவிந்த் தன் படிப்பிற்காக வெளிநாடு செல்லவிருப்பது.

“ஏன் உன் பிரெண்டு தனியா அங்க போக மாட்டானாமா… உன்னையும் எதுக்கு இழுத்துட்டு போறான்…” என்று வர்ஷினி சண்டைப் பிடிக்க…

வரதனோ, “பாப்பா, பெரியவங்கள மரியாதை இல்லாம பேசக் கூடாதுன்னு சொல்லிருக்கேன்ல…” என்றார்.

“ப்ச் ப்பா… இவனையே வாடா போடான்னு தான கூப்பிடுறேன்… அப்பறம் அவனுக்கு மட்டும் எதுக்கு மரியாதை…” கடைசி வரியை மென்று முழுங்கினாள்…

“வர்ஸு மா… ஒன் இயர் தான் டா… அந்த கோர்ஸ் பண்ணா, பின்னாடி நானும் வருவும் ஹோட்டல் ஆரம்பிக்குறப்போ ரொம்ப ஹெல்ப்ஃபுல்லா இருக்கும்…” என்று சமாதானப் படுத்த முயல, அவனின் அனைத்து முயற்சிகளும் வீணானது தான் மிச்சம்.

இரண்டு நாட்கள் அவளுடன் போராடிப் பார்த்துவிட்டு, மனமே இல்லாமல் தான் லண்டன் கிளம்பினான். வர்ஷினியும் கோபத்தில் அவனை வழியனுப்ப வராததால், வருண் – வர்ஷினி சந்திப்பு அப்போதும் தடைப்பட்டுப் போனது.

லண்டன் சென்றதும் ஒவ்வொரு முறையும் அவளிடம் பேசிவிடும் ஆர்வத்தில் வரதனிற்கு அழைத்தாலும், அவனின் முரண்டு பிடிக்கும் தங்கை அவனிடம் பேச மறுத்து விட்டாள். அதில் அவனிற்கு சிறிது வருத்தமே…

இதோ ஒரு வருடத்திற்குப் பின்னர், மீண்டும் அவளை சந்திக்கிறான்… அவளை கண்களில் நிரப்பிக் கொண்டவன், அவளின் குரலைக் கேட்டு ஆனந்தம் கொள்கிறான்…

ஒரு வாரத்திற்கு முன்பு தான், சேகர் அவனிடம், “வர்ஷினியை வருணிற்கு பார்க்கலாமா?” என்று கேட்டிருந்தார்.

தன் தங்கைக்கு தன் நண்பனைக் காட்டிலும் சிறந்த மாப்பிள்ளை கிடைக்க மாட்டான் என்று அரவிந்த் நினைத்தாலும், அவனிற்கு சிறு வயது வருணின் செயல் யோசனையைத் தந்தது. அதை சேகரிடமும் தெரிவித்தான்.

அவரோ, “அதெல்லாம் சின்ன வயசுல மெச்சுரிட்டி இல்லாம நடந்துக்குறது டா… இப்போவும் அப்படியே நினைப்பான்னு எப்படி சொல்ற… அப்பறம் இது ஜஸ்ட் ஸ்டார்டிங் தான்… ரெண்டு பேருக்கும் பிடிச்சுருந்தா தான் ப்ரோஸீட் பண்ணுவோம்…” என்றார்.

அவனின் மனதிலும், ‘இது நடந்தால் நன்றாக இருக்கும்…’ என்றே தோன்றியது. அவனும் சரியென்று சொல்லி விட்டான். ஆனால் அதைப் பற்றி வருணிடம் வாயே திறக்க வில்லை. எங்கு தான் சொன்னால், சிறு வயதில் நடந்துக் கொண்ட மாதிரி இப்போதும் ‘தன்’னால் வேண்டாம் என்று சொல்லி விடுவானோ என்ற பயம் அரவிந்திற்கு…

நேற்று இரவு சிவா அரவிந்திற்கு அழைத்து, வருணிற்கு புகைப்படம் அனுப்பிவிட்டதாகக் கூறி அவனின் ‘ரியாக்ஷன்’ என்னவென்று பார்த்துவிட்டு கூறுமாறு சொல்லியிருந்தார்.

ஆனால் காலையில் நடந்த களேபரத்தில் அனைத்தையும் மறந்திருந்தான் அரவிந்த். இப்போது தான் அவனிற்கு அது நியாபகத்திற்கு வந்தது.

நினைவிற்கு வந்தவுடன் சட்டென்று திரும்பி வருணைப் பார்க்க, அவனோ பீதியுடன் வர்ஷினியை வெறித்துக் கொண்டிருந்தான்.

அவனின் பார்வையை முகம் சுருக்கி பார்த்த அரவிந்திற்கு, காலையிலிருந்து அவனின் செய்கையில் ஏற்பட்ட மாற்றத்தை அப்போதே கேட்டிருக்க வேண்டுமோ என்று தோன்றியது.

வருணின் கனவைத் தெரிந்து கொள்வானா அரவிந்த்… தெரிந்த பின் நண்பனிற்காக என்ன செய்வான்… கனவில் வருண் – வர்ஷினி காதல் சரிவராது என்று எண்ணியவன்… நனவில் அவர்களின் திருமணத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறான்… அவர்களின் திருமணம் நடக்குமா… வருண் மீண்டும் (!!!) வர்ஷினியின் மேல் காதல் கொள்வானா…

புதிர் விலகும்… காத்திருங்கள்…