பீட்ரூட் கோப்தா

Advertisement

Sahi

Well-Known Member
தேவையானபொருட்கள்:
துருவிய பீட்ரூட்: 150 கி
சோம்பு: 1 ஸ்பூன்
வெங்காயம்: 1
கறிவேப்பிலை: சிறிதளவு
கொத்தமல்லி: சிறிதளவு
பூண்டு: 10
இஞ்சி: 1 இன்ச்
காய்ந்த மிளகாய்: 4
கடலைப் பருப்பு: 3 ஸ்பூன்
உப்பு: தேவையானளவு
எண்ணெய்: பொறிக்க தேவையானளவு
செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு தாளிக்கவும். அதில் வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு, இஞ்சி, காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பு சேர்த்து வதக்கவும். அதனுடன் துருவிய பீட்ரூட் மற்றும் தேவையானளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
சூடு ஆறியதும் மிக்ஸில் நீர் விடாமல் மைய அரைத்து எடுத்து கொத்தமல்லி சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி நன்றாக காய்ந்த எண்ணெயில் மிதமான தீயில் பொறித்து எடுத்தால் சுவையான பீட்ரூட் கோப்தா தயார்.
செய்துப்பார்த்துவிட்டு சொல்லுங்க எப்படி இருந்துச்சுன்னு.
நன்றி.IMG_20190314_201220.jpg
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
beetroot வைத்து beautiful to see and to taste recipes share பண்றீங்க..thanks..healthy root veggie..

இரண்டு கேள்வி உங்களுக்கு..last time barfila ஒரு doubt..எவ்வளவு கெட்டிப்படணும் பாகு..இந்த சக்கரைப் பாகு கரெக்டா வைக்கலேன்னா கால வாரி விடும்..இல்ல கிளற கையக் காலி பண்ணிடும்..

koftaல..to bind the ingredients..i mean to make it into a ball you are not using any flour..எண்ணெய்லப் போட்ட பிறகு இது உதிர்ந்து போகலையே எப்படி? 3 spoons கடலை பருப்பு அந்த வேலையைப் பண்ணுதா?
 

Sahi

Well-Known Member
உருகிய சர்க்கரை கெட்டியாகி சிறிது பிசு பிசுப்பு இருக்கும் போது இறக்கணும் (பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் 1st ஸ்டேஜ்).
2nd ஸ்டேஜ் நெய் பிரிந்து வரும் அது அல்வா பதம்.
கடலை பருப்பு தான் இங்க பைண்டிங் factor. In maximum koftas, we use this. Or else u can use powdered fried gram (pottu kadalai).
vlcsnap-9615-08-28-20h12m42s959.png
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top