பிறந்தநாள்

Advertisement

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
"பிறைசந்திரனாய்
புன்னகை தாங்கி
பிறந்தவளே"


"உன் வருகை
உலகிற்கு
உதித்த நாளிலே
உள்ளம் மகிழ்ந்து
நீ வாழ
உன் உயிரின் வாழ்த்துமடல்"


"முழுமதியே
உன் முகம்
கண்ட நொடி
மலர்ந்த தாமரையும்
மனம் உடைந்து தான் போனது
உன் மலர்ச்சி கண்டு"


"உன் மலர்ச்சி
மறையாதிருக்க
மனம் முழுதும்
மகிழ்ச்சியில் மூழ்கியிருக்க
வாழ்த்துகிறேன் நானே
என் பொன்மானே"


"கண்ணம்மா அழகியே
உன் கண்ணின் மை
அழியாததிருக்க
அழுகை அது காணமால் இருக்க
ஆனந்தமாய் நீ இருக்க
அருகே நானிருக்க
ஆசையெல்லாம் நிறைவேற
நீண்ட ஆயுள் அது கொண்டிடுவாய்
நிம்மதியாய் இருந்திடுவாய்"


"பிறந்தநாள் காணும் பிறைநிலவே
உன் பிரியங்கள் எல்லாம்
பிரியாமலிருக்க
பிரியமானவனின்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்"


"பிறந்தநாள் வாழ்த்துக்கள்
என் பிறைநிலவிற்கு"
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top