பிரிவு : பொருட்பால், இயல் : நட்பியல், அதிகாரம் : 86. இகல், குறள் எண்: 851&858.

Sasideera

Well-Known Member
#1
குறள் 851:- இகல்என்ப எல்லா உயிர்க்கும் பகல்என்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்.

பொருள் :- எல்லா உயிர்களுக்கும் மற்ற உயிர்களோடு பொருந்தாமல் வேறுபடுதலாகிய தீய பண்பை வளர்க்கும் நோய் இகல் (மாறுபாடு) என்று சொல்வர் அறிஞர்.
 
Sasideera

Well-Known Member
#2
குறள் 858:- இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிகல்ஊக்கின் ஊக்குமாம் கேடு.

பொருள் :- இகலுக்கு எதிரே சாய்ந்து நடத்தல் ஒருவனுக்கு ஆக்கமாகும்; அதனை எதிர்த்து வெல்லக் கருதினால் கேடு அவனிடம் வரக் கருதும்.
 
Sasideera

Well-Known Member
#3
அதிகார விளக்கம் :-

இகழ்ச்சி என்பது இயல்பை மறுப்பது. நடுநிலைமையுடன் விலகிடினும் இகழ்வை கருத்தில் கொண்டு துன்பம் செய்தல்கூடாது. இகல் என்ற பகை பாராட்டும் நோய் அழித்தால் சிறப்பான மாற்றம் வரும் இன்பம் வளர்ந்து துன்பம் அழியும். பகை உணர்வு அற்றவரை யாரும் வெல்ல முடியாது, எதிரிகள் வாழ்வின் ஏற்றத்திற்கு வேண்டும் என்பவர் எளிதில் அழிவார். உண்மை அறியாதவன் பெருமை கொள்வதைப் போன்றே தீய குணம் உள்ளவர் பகையுணர்வு அடைவார். நன்மை அடைபவர் இகல் என்ற பகை உணர்வு இல்லாதவர்.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes