பிரிவு : பொருட்பால், இயல் : குடியியல், அதிகாரம் : 107. இரவச்சம், குறள் எண்: 1064 & 1070.

#1
குறள் 1064:
இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு.

பொருள் :- ஏதும் இல்லாமல் வறுமை உற்றபோதும் பிறரிடம் சென்று பிச்சை கேட்கச் சம்மதியாத மன அடக்கம், எல்லா உலகும் சேர்ந்தாலும் ஈடாகாத பெருமையை உடையது.
 
#2
குறள் 1070:
கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்.

பொருள் :- இல்லை என்று சொல்வதைக் கேட்ட உடனே பிச்சை எடுப்பவரிடமிருந்து போய் விடும் உயிர், இல்லை என்று சொல்பவர்க்கு மட்டும் போகாமல் எங்கே போய் ஒளிந்து கொள்கிறது?.
 
#3
அதிகார விளக்கம் :-

சலிப்பற்ற கண் போல் கொடுக்கும் ஒருவர் இருப்பினும் கேட்காமல் இருப்பதே கோடி நன்மை. கேட்டுப் பெற்றே வாழ வேண்டும் என்றால் கெட்டு ஒழியட்டும் உலகை படைத்தவன். வறுமையை துன்பத்தை அடுத்தவர் உதவியால் அழிக்க வேண்டும் என்பது கொடுமையிலும் கொடுமை. கேட்டுப் பெறாமல் உழைத்து உண்ணும் அரிசி குறைந்த கஞ்சி சிறப்பானது. கேட்பவரை அவமதிப்பவர் இடத்தில் கேட்க வேண்டாம். கொடுப்பவர் உள்ளம் மென்மையாகவும் மேன்மையாகவும் இருக்கும். கொடுக்க மறுப்பவர் தன் உயிரை எப்படி காக்கமுடியும்.
 
#5
குறள் 1064:
இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு.

பொருள் :- ஏதும் இல்லாமல் வறுமை உற்றபோதும் பிறரிடம் சென்று பிச்சை கேட்கச் சம்மதியாத மன அடக்கம், எல்லா உலகும் சேர்ந்தாலும் ஈடாகாத பெருமையை உடையது.
(y):love:
 
Advertisement

New Episodes