பிரிவு : பொருட்பால், இயல் : அரசியல், அதிகாரம் : 55. செங்கோன்மை, குறள் எண்: 542 & 547.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 542:- வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி.

பொருள் :- உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நோக்கி வாழ்கின்றன. அது போல் குடிகள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.
 

Sasideera

Well-Known Member
குறள் 547:- இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.

பொருள் :- உலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான்; நீதிமுறை கெடாதவாறு ஆட்சி செய்வானாயின் அரசனை அந்த முறையே காப்பாற்றும்.
 

Sasideera

Well-Known Member
அதிகார விளக்கம் :-

செங்கோன்மை என்பது செவ்விய கோல் அதாவது வளையாத கோல் போன்ற நேர்மையான ஆட்சியைக் குறிக்கும். குடிமக்களின் உயிரையும் உடைமையையும் பாதுகாக்கும் அரசியல் அறத்தைப் பேணுவது ஆட்சியாளரது கடமை. அரசாட்சியில் குற்றத்தையும் குணத்தையும் சீர்தூக்கி ஆராய்ந்து செம்மையாக ஆள்வதே செங்கோன்மையாகும். வருவாய், வரிமுறை, நீதி, நிர்வாகம், அரசுப்பணி, தேர்வு முறை போன்ற அனைத்து அரசாட்சியின் உறுப்புக்களும் மக்கள் நலங்களை நேரடியாகப் பாதிக்கக் கூடியவை. இவை எல்லாவற்றிலும் நேரிய ஆட்சிமுறை தேவை. இவற்றில் உண்டாகும் குற்றங்களை ஆராய்ந்து நீதி வழங்குதல் பற்றியே இவ்வதிகாரம் பேசுகிறது. நீதி வழங்குதல் என்பதை முறை செய்தல் என்கிறார் வள்ளுவர். ஆராய்ந்து எந்த ஒரு பக்கமும் அன்பு காட்டாது தெளிவாகத் தகுந்த ஒறுத்தல் விதிப்பதை முறை செய்தல் எனக் குறிக்கிறார் அவர். நல்லாட்சியே செங்கோலாட்சி.
 

malar02

Well-Known Member
இப்ப சொல்லப்பட்ட விஷயம் தான் தலைகீழா போய்விட்டது
நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top