பிரிவு : பொருட்பால், இயல் : அரசியல், அதிகாரம் : 52. தெரிந்து வினையாடல், குறள் எண்: 513 & 520.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 513:- அன்புஅறிவு தேற்றம் அவாஇன்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.

பொருள் :- அன்பு, அறிவு, ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல், அவா இல்லாமை ஆகிய இந் நான்கு பண்புகளையும் நிலையாக உடையவனைத் தெளியலாம்.

நிர்வாகத்தின்மேல் அன்பு, நிர்வாகத்திற்கு நன்மை தருவதை அறியும் அறிவு, அதற்கான செயல்களைச் செய்யும்போது உறுதி, பணியில் பொருள் வந்தால் அதன்மீது ஆசை இன்மை இந்த நான்கையும் உடையவனிடத்தே பதவி தருவதுதான் தெளிவு.
 
Sasideera

Well-Known Member
குறள் 520:- நாள்தோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடாது உலகு.

பொருள் :- தொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது; ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்.

மேல் பதவியில் இருப்பவன் தவறு செய்யாவிட்டால் மக்களும் தவற செய்யார். அதனால் பதவியில் இருப்பவரை நாளும் கவனித்து நிர்வாகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
 
Sasideera

Well-Known Member
அதிகார விளக்கம் :-

தெரிந்து வினையாடல்
செய்யப்படவேண்டிய வினனகளைத் தெரிந்து, அவற்றின் நோக்கங்களைத் திறம்பட நிறைவேற்றும் முகத்தான், அவற்றைச் செய்யவல்லவர்களிடம் ஓப்படைத்து, வினைகளை ஆளுதல் என்பது தெரிந்து வினையாடல் ஆகும். தலைமை தாங்கும் அனைவர்க்கும் பொருந்தக்கூடிய உண்மைகள் இவ்வதிகாரத்துள் காணப்படுகின்றன. முதல் மூன்று குறட்பாக்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பொறுப்பு ஏற்றவனுடைய இலக்கணத்தினைக் கூறுகின்றன. நான்காம் குறட்பா, தொழிலில் வைத்த பிறகு மாறாகி விடுபவர்கள் நீக்கப் பட வேண்டியவர்கள் எனக் குறிக்கின்றது. நன்கு அறியப்பட்டவன் என்பதற்காக மட்டும் தொழில்திறம் இல்லாதவரிடம் வினையை ஒப்படைக்கக் கூடாதென்பதை ஐந்தாம் பாடல் கூறும். ஆறுமுதல் ஒன்பது பாடல்வரை, அதிகாரம் ஒப்படைக்கப்பட்டவனை தலைவன் எவ்வாறு ஆளுதல் வேண்டும் என்பதனை எடுத்துக் காட்டுகின்றன. வினன ஏற்றவன் பிசகாமல் நடக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும்; இதற்காக வினைசெய்பவரை நாள்தோறும் கண்டு வருக என்று பத்தாம் பாடல் அறிவுறுத்தும்.
 
Manimegalai

Well-Known Member
குறள் 513:- அன்புஅறிவு தேற்றம் அவாஇன்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.

பொருள் :- அன்பு, அறிவு, ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல், அவா இல்லாமை ஆகிய இந் நான்கு பண்புகளையும் நிலையாக உடையவனைத் தெளியலாம்.

நிர்வாகத்தின்மேல் அன்பு, நிர்வாகத்திற்கு நன்மை தருவதை அறியும் அறிவு, அதற்கான செயல்களைச் செய்யும்போது உறுதி, பணியில் பொருள் வந்தால் அதன்மீது ஆசை இன்மை இந்த நான்கையும் உடையவனிடத்தே பதவி தருவதுதான் தெளிவு.
தெளிவு இல்லையே
என்ன செய்ய:(
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top