பிரிவு : பொருட்பால், இயல் : அமைச்சியல், அதிகாரம் : 66. வினைத்தூய்மை, குறள் எண்: 655 & 659.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 655:- எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று.

பொருள் :- பிறகு நினைத்து வருந்துவதற்குக் காரணமானச் செயல்களைச் செய்யக் கூடாது, ஒரு கால் தவறிச் செய்தாலும் மீண்டும் அத் தன்மையானவற்றைச் செய்யாதிருத்தல் நல்லது.
 
Sasideera

Well-Known Member
குறள் 659:- அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை.

பொருள் :- பிறர் வருந்துமாறு செய்து பெற்ற பொருள் எல்லாம் பெற்றவன் வருந்துமாறு செய்து போய்விடும், நல்வழியில் வந்தவை இழக்கப்பட்டாலும் பிறகு பயன் தரும்.
 
Sasideera

Well-Known Member
அதிகார விளக்கம் :-

இவ்வதிகாரம் சொல்லும் வினை என்பது அரசாட்சியில் நிகழ்கின்ற செயலைக் குறிப்பது. நாட்டிற்காகச் செய்யப்படும் செயல்களுக்கு அமைச்சரே பொறுப்பு. அவர் வினைகள் ஆற்றும்போது தூய்மையைக் கடைப்பிடித்தல் இன்றியமையாதது என வலியுறுத்தப்படுகிறது. எனவே வினைத்தூய்மை என்ற தலைப்பு. செய்யும் வினை நன்மையும் புகழும் தரவேண்டும். செயல் மட்டுமல்ல அதை நிறைவேற்றும் வழிமுறைகளும் தூயனவாய் இருத்தல் வேண்டும் என்பது நிரம்பச் சொல்லப்படுகிறது.
சிறப்பாக அமைச்சர்க்குச் சொல்லப்பட்டாலும் இங்கு கூறப்பட்ட கருத்துகள் பொதுவகையில் மாந்தர் அனைவர்க்கும் பொருந்தக்கூடியனவே.
 
fathima.ar

Well-Known Member
குறள் 655:- எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று.

பொருள் :- பிறகு நினைத்து வருந்துவதற்குக் காரணமானச் செயல்களைச் செய்யக் கூடாது, ஒரு கால் தவறிச் செய்தாலும் மீண்டும் அத் தன்மையானவற்றைச் செய்யாதிருத்தல் நல்லது.

Nice da
 
Manimegalai

Well-Known Member
குறள் 659:- அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை.

பொருள் :- பிறர் வருந்துமாறு செய்து பெற்ற பொருள் எல்லாம் பெற்றவன் வருந்துமாறு செய்து போய்விடும், நல்வழியில் வந்தவை இழக்கப்பட்டாலும் பிறகு பயன் தரும்.
நன்று.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top