பிரிவு : பொருட்பால், இயல் : அமைச்சியல், அதிகாரம் : 64. அமைச்சு குறள் எண்: 632 & 638.

Sasideera

Well-Known Member
#1
குறள் 632:- வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு.

பொருள் :- அஞ்சாமையும், குடிபிறப்பும், காக்கும் திறனும், கற்றறிந்த அறிவும், முயற்சியும் ஆகிய இவ்வைந்தும் திருந்தப் பெற்றவன் அமைச்சன்.
 
Sasideera

Well-Known Member
#2
குறள் 638:- அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழைஇருந்தான் கூறல் கடன்.

பொருள் :- அறிவுறுத்துவாரின் அறிவையும் அழித்துத் தானும் அறியாதவனாக அரசன் இருந்தாலும், அமைச்சன் அவனுக்கு உறுதியானவற்றை எடுத்துக்கூறுதல் கடமையாகும்.
 
Sasideera

Well-Known Member
#3
அதிகார விளக்கம் :-

ஆட்சிக்கு இன்றியமையாத் துணையும் ஆட்சித்தலைவனுக்கு அடுத்தபடியாகச் சிறப்பு வாய்ந்தவனுமான அமைச்சன் இலக்கணம் கூறப்படுகிறது. எந்தவகையான ஆட்சிமுறையாக இருந்தாலும் அமைச்சரவை இன்றியமையாதது. ஆட்சித்தலைவன் அறிவாலும் ஆற்றலாலும் சிறந்தவனாக இருந்தபோதிலும் தனியனாக அரசாட்சியைத் திறம்பட நடத்தமுடியாது என்பதால் அவனுக்குத் துணையாக அறிவுரை வழங்க அமைச்சரவை ஏற்பட்டது. மக்களுக்கும் ஆட்சித்தலைவனுக்கும் நெருங்கிய தொடர்புடையவன் அமைச்சன். அமைச்சர் தம் தகுதிகள், பண்புகள், ஆளுமைத் திறன்கள். செயற்பாடுகள் தொகுப்பாக இவ்வதிகாரத்தில் கூறப்படுகிறது. எப்படி இறைமாட்சியில் அரசனின் தன்மைகள் விரிந்து பின் வரும் அதிகாரங்களில் சொல்லப்பட்டதோ அதுபோல அமைச்சனின் இயலும் செயலும் தொடரும் பத்து அதிகாரங்களில் கூறப்படுகின்றன. அவற்றில் முதல் அதிகாரம் 'அமைச்சு' என்னும் பெயரில் அமைந்த இத்தொகுதி,
 
Manimegalai

Well-Known Member
#6
குறள் 632:- வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு.

பொருள் :- அஞ்சாமையும், குடிபிறப்பும், காக்கும் திறனும், கற்றறிந்த அறிவும், முயற்சியும் ஆகிய இவ்வைந்தும் திருந்தப் பெற்றவன் அமைச்சன்.
இப்படி அமைச்சர்
இருந்தா நல்லா இருக்கும்.
 
Advertisement

Sponsored