பிரிவு : இன்பத்துப்பால், இயல் : களவியல், அதிகாரம் : 114. நாணுத்துறவுரைத்தல், குறள் எண்: 1137 & 1140.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 1137:
கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்க தில்.

பொருள் :-
அதுதான் அவள் பெருமை; கடல் போலக் கரையில்லாத காதல் நோயை அவளும் அனுபவித்தாலும் மடல் ஊராது பொறுத்திருக்கும் பெண் பிறவியைப் போலப் பெருமையான பிறவி இவ்வுலகத்தில் வேறு இல்லை.
 

Sasideera

Well-Known Member
குறள் 1140:
யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு.

பொருள் :- நான் பார்க்க, இந்த அறிவற்ற மக்கள் என்னைப் பார்த்துச் சிரிக்கின்றனர். அப்படிச் சிரிக்க காரணம், நான் அனுபவித்த துன்பங்களை அவர்கள் அனுபவிக்காததே!.
 

Sasideera

Well-Known Member
அதிகார விளக்கம் :-
காமத்தின் வலி போக மடல் வெட்கத்தை விலக்கிடச் செய்யவேண்டும். நாணமும் நல்ல ஆண்மையும் காமத்தால் மடல் ஏறும். காமம் என்ற கொடிய வெள்ளம் நாணம் என்ற படகை கவிழ்த்துவிடும். மாலை நேரத்து துன்பத்தை வளையல் அணிந்தவள் தந்தாள். எந்த வேலையும் செய்யமுடியாத மடல் அடைந்தேன் பேதை அவளை என் கண் கண்டதால். கடல் அளவு காமம் இருந்தாலும் மடல் அடைய பெண் பெருமைக்குரியவள். நிறைவு அடையதவர் மதிக்கத் தகுந்தவர் இல்லை என்பதை அறியாமல் மறையாமல் காமம் வெளிப்படுகிறது. நம் ஏக்கம் அறியாதவர் நம் கண்ணில் படும்படியே நகைப்பர்.

நாணுத்துறவுரைத்தல் அதிகாரத்தில் காதலனுடைய நிறை சிதையும்போது அவன் அகத்தும் புறத்தும் நேரும் விளைவுகள் குறித்துப் பேசப்படுகிறது. தன் காதலில் இடர் எதிர்கொள்ளும் தலைவன் மடலேறத் துணிகிறான். மடல் ஏறுதல் என்பது ஊரார் முன் முறையிட்டுத் தன் காதலை நிறைவேற்றித் தரக் கெஞ்சுவது ஆகும். இச்செய்கையால் தன் நாணையும் நல்லாண்மையையும் அவன் இழப்பான் என உணர்ந்து இருக்கின்றான். தன் காதல் நிறைவேற உதவ முன்வராத ஊர் மக்களை அறிவில்லாதவர்கள் என இகழ்கிறான். ஊரார் பார்வையில் அவன் பைத்தியக்காரன் போல் காட்சி அளிக்கிறான். காதல் மிகுதியால் தன் நாணம் நீங்கியமையைத் தலைமகன் இங்கு உரைக்கின்றான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top