பிரிவு : இன்பத்துப்பால், இயல் : கற்பியல், அதிகாரம் : 133. ஊடலுவகை, குறள் எண்:- 1321 & 1326.

Sasideera

Well-Known Member
#1
குறள் 1321:
இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளிக்கு மாறு.

பொருள் :- அவரிடம் தவறே இல்லை என்றாலும், அவர் என்னிடம் மிகுந்த அன்பைச் செலுத்தும்படி செய்யவல்லது ஊடல்.
 
Sasideera

Well-Known Member
#2
குறள் 1326:
உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.

பொருள் :- உண்பதைவிட உண்டது செரிப்பது இனியது; அதுபோலக், கூடிக் கலப்பதை விட ஊடுவது காதலுக்கு இனியது.
 
Sasideera

Well-Known Member
#3
அதிகார விளக்கம் :-

ஊடல் உவகை என்பது ஊடல் கொள்வதில் மகிழ்ச்சி அடைதலைக் குறிக்கும். இருவர் பூசலிடும்போது மகிழ்ச்சி எப்படி உண்டாகும்? ஊடலுக்குப் பின் கூடினால் இன்பம் மிகும் என்பதை அவர்கள் அறிந்தவர்களாதலால் ஊடலில் ஈடுபட்டு இன்பம் காண்கின்றனர். பொதுமையான ஒரு ஊடற்காட்சியில் காமம் மிகக்கூடிய தலைவன் காதலியைத் தழுவ நெருங்கும்போது அவள் அகன்று நிற்பாள். அப்பொழுது அவன் படும் ஏக்கத் துயரத்தைக் கண்டு அவள் மகிழ்வாள். பின் அவள் பொய்க்காரணம் கற்பித்து அவன்மேல் சினம் கொண்டவள்போல் நடிப்பாள். அப்பொழுது உள்ளுக்குள் நகைத்து உவகை கொள்வாள் தலைவி கொள்ளும் ஊடலைத் தீர்க்கத் தலைவன் பணிந்து இன்மொழி கூறுவான். அது தலைவிக்கு வேடிக்கையாகத் தோன்றும். ஆனால் அதை வெளிகாட்டாமல் ஊடிக்கொண்டிருப்பாள். அதுபோலவே தலைவனும் சில சமயங்களில் ஊடலைத் தொடங்கி வைப்பான். இந்த விளையாட்டு இரவு முழுவதும் நீடிக்க வேண்டும் என இருவரும் விரும்புவர்.

தவறே செய்யாத பொழுதும் பிணங்குவது இன்பம்தர வல்லமை உள்ளதாக இருக்கிறது. பிணங்குவது சிறிய துன்பம் தந்தாலும் நல்ல பயனை தரும். புணர்ந்து மகிழ்ந்தவர் புதிய ஒன்றை நாடமுடியாது காரணம் அவர்கள் நிலத்தின் தன்மை அடைந்த நீர் போல் இணைந்த அகத்தை பெறுகிறார்கள். கூடி மகிழ்வதே அதிகபடியான கூடி மகிழ ஊக்குவிக்கும் இதிவே உள்ளத்து நாணத்தினை அழிக்கும். தவறு செய்யாமலேயே ஆறுதலாக தோள் தழுவுதலில் சுகம் இருக்கிறது. செரித்தபின் உண்ணுவது இனிமையானது அது போல் ஊடலுக்கு பின் காமம் இனிமையானது. ஊடலில் தோற்றவரே வேற்றி பெற்றவர் அதை கூடி மகிழ்வதில் அறியலாம். ஊடலின் சிறப்பு கூடி மகிழ்ந்து நெற்றி வியர்வையின் வந்த உப்பால் அறியலாம். ஊடலே இரவின் நீளத்தை அதிகமாக்கும். ஊடுவதே காமத்திற்கு இன்பம் அதற்கு இன்பம் கூடி மகிழ்வது.
 
Manimegalai

Well-Known Member
#5
குறள் 1321:
இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளிக்கு மாறு.

பொருள் :- அவரிடம் தவறே இல்லை என்றாலும், அவர் என்னிடம் மிகுந்த அன்பைச் செலுத்தும்படி செய்யவல்லது ஊடல்.
:love:yessu
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement