பிரிவு : இன்பத்துப்பால், இயல் : கற்பியல், அதிகாரம் : 131. புலவி, குறள் எண்:- 1301 & 1309.

Sasideera

Well-Known Member
#1
குறள் 1301:
புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது.

பொருள் :- நாம் ஊடும்போது அவர் அடையும் காதல் வேதனையை நாமும் கொஞ்சம் பார்க்கலாம்; அதனால் அவரைத் தழுவாதே; ஊடல் செய்.
 
Sasideera

Well-Known Member
#2
குறள் 1309:
நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது.

பொருள் :-
நீரும்கூட வெயிலுக்குக் கீழ் இராமல் நிழலுக்குக் கீழ் இருப்பது இனிமை; ஊடலும் அன்புள்ளவரிடம் மட்டுமே இனிமை ஆனது.
 
Sasideera

Well-Known Member
#3
அதிகார விளக்கம் :-

தொழில் காரணமாகப் பிரிந்து சென்றிருந்த கணவன் இல்லம் திரும்பியிருக்கிறான். இதுகாறும் ஆற்றாமையால் வாடியிருந்த மனைவி இன்று மிக்க மகிழ்ச்சியுடன் காணப்படுகிறாள். அவர்கள் இருவரும் நெருங்கிக் கூடும் வேளைக்காகக் காத்திருக்கின்றனர். இப்பொழுது படுக்கையறைக் காட்சி. தலைவி பாயலில் காதல்நோய் மேலிட உள்ளாள். நீண்ட பிரிவிற்குப் பின் காதலியைக் காணப்போவதால் அவனும் காதல் வேகம் மிகக் கொண்டிருப்பான் என்பதை அவள் அறிவாள். தன் உள்ளத்தில் வேட்கை மிகக்கொண்டிருந்தாலும் செயற்கையாகப் பிணங்கி புணர மறுப்பது போல் காட்டிக் கொள்ள எண்ணுகிறாள். அந்த ஊடல் காமத்திற்குச் சுவை ஊட்டும் என்பதையும் அது பின்வரும் புணர்ச்சி இன்பத்தை இருவரிடையேயும் கூட்டுவிக்கும் என்பதையும் உணர்ந்தவள் அவள்.

புணராது இருந்து அதன் வேதனை அறியலாம் சிறிது. உப்பு போல் அளவாக அனுமதிக்கலாம் பிணக்கை. பிணக்கு அளவுக்கு அதிகமானால் புணர்தல் நிகழாது. ஊடலை உணராமல் இருந்தால் வேறுடன் பிடுங்கிய செடி போல் ஆகிவிடும். அடுத்தவர் நலத்தை விரும்பும் மலர்ந்த கண் உடையவர் ஊடலை அகத்தே மட்டுமே வெளிப்பட்டு மறையும். பிரிவும் ஊடலும் இல்லாத காமம் காயும் கனியும் இல்லாததைப் போன்றது. ஊடலுக்கு தடுப்பாக அமைவது கூடுவது குறையும் என்ற நினைப்பு. வருத்தமடைய யார் காரணம் என்று அறியாமல் காதலரை மாற்றும் வழி இல்லை. நிழலில் இருக்கும் நீர் போல் விருப்பமானவர்களின் பிணக்கும் இருக்கும். ஊடலை மாற்ற அறியாதவரை கூடி மகிழ்வோம் என்பது அளவற்ற என் ஆசை.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement