பிரிவு : இன்பத்துப்பால், இயல் : கற்பியல், அதிகாரம் : 129. புணர்ச்சி விதும்பல், குறள் எண்: 1281&1287.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 1281:
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.

பொருள் :- நினைத்த அளவிலே உணர்வு அழியாமல் உள்ளம் கிளர்தலும், பார்த்த அளவிலே உணர்வு அழிய உள்ளம் கிளர்தலும் கள் உண்பவர்க்கு இல்லை; காதல் வசப்பட்டவர்க்கே உண்டு.
 

Sasideera

Well-Known Member
குறள் 1287:
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.

பொருள் :- தன்னை இழுத்துக் கொண்டு போகும் என்று தெரிந்தும், ஓடும் வெள்ளத்துள் பாய்பவர் செயலைப் போல, என் சினம் பலன் அளிக்காது என்று தெரிந்தும் அவருடன் ஊடல் கொண்டு ஆவது என்ன?.
 

Sasideera

Well-Known Member
அதிகார விளக்கம் :-


தொழில் காரணமாக நீண்டகாலம் பிரிந்து சென்று திரும்பி வந்துள்ள கணவனை அவனது காதல் மனைவி இன்னும் நெருங்கிச் சந்திக்கவில்லை. எப்பொழுது அருகில் சென்று அவனை அரவணைப்பேனோ என ஏங்கி நிற்கிறாள். பிரிவாற்றாமையில் உண்டான வருத்தத்தை உணர்த்தி ஊடுவதா அல்லது நேராக அவனுடன் கூடிவிடுவதா என்ற மனப் போராட்டம் கொள்கிறாள். அவனை நேரில் கண்டவுடன் அவன் தவறுகள் ஒன்றும் தெரிவதில்லை அவளுக்கு. கண்ணாலேயே தன் மீதான வருத்தத்தைக் காட்டும் அதேநேரம் அவனைத் தழுவிக் கொள்வதை எதிர்நோக்கித் தலைவி பரபரத்துக் காணப்படுவதையும் காதலன் உணர்ந்து கொள்கிறான்.

எண்ணத்தால் போதையும் பார்வையில் மகிழ்ச்சியும் தருவது காமம் ஆனால் அது குடிபோதைக்கு இல்லை. தினை அளவும் வெறுப்பு இன்றி இருந்து பனையளவு காமத்தை அனுபவிக்க வேண்டும். என்னைப் பற்றிய அக்கறை இல்லை என்றாலும் காதலனான இறைவனை காணமல் அமைதியடையாது என் கண். வெறுப்படைந்து விலகினாலும் அவனை கூட நினைக்கும் நெஞ்சு. மை எழுதும் கோல் கண்ணுக்கு மை இடும்பொழுது மறைவது போல் அவன் குற்றம் அவனை கண்டால் தெரிவதில்லை. நெருங்கும் பொழுது குற்றத்தை மறந்து விலகிய நேரம் அவனது நற்பண்பையும் மறுக்கிறேன். நீந்த முடியாத ஆற்றில் குதிப்பது போல் ஊடல் கொண்டு தோல்வியடைகிறேன். துன்பம் தந்தாலும் மது உண்டவர் மீண்டும் மதுவை நாடுவது போல் உன் மார்பை நாடுகிறேன். மலரைவிட மென்மையான காமத்தை சிலரே செம்மையாக அனுபவிக்கின்றனர். கண் கலங்கி ஆறுபோல் ஆனாலும் பற்றிக் கொள்ளவதில் அவளுக்கே முதலிடம்.
 

malar02

Well-Known Member
குறள் 1287:
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.

பொருள் :- தன்னை இழுத்துக் கொண்டு போகும் என்று தெரிந்தும், ஓடும் வெள்ளத்துள் பாய்பவர் செயலைப் போல, என் சினம் பலன் அளிக்காது என்று தெரிந்தும் அவருடன் ஊடல் கொண்டு ஆவது என்ன?.
yes
nanri
 

Manimegalai

Well-Known Member
குறள் 1287:
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.

பொருள் :- தன்னை இழுத்துக் கொண்டு போகும் என்று தெரிந்தும், ஓடும் வெள்ளத்துள் பாய்பவர் செயலைப் போல, என் சினம் பலன் அளிக்காது என்று தெரிந்தும் அவருடன் ஊடல் கொண்டு ஆவது என்ன?.
(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top