பிரிவு : இன்பத்துப்பால், இயல் : கற்பியல், அதிகாரம் : 121. நினைந்தவர்புலம்பல், குறள் எண்: 1206 & 1210.

Sasideera

Well-Known Member
#1
குறள் 1206:
மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்
உற்றநாள் உள்ள உளேன்.

பொருள் :- அவரோடு கூடி வாழ்ந்த நாள்களின் நினைவுகளை நினைப்பதால்தான் நான் இன்னும் உயிர் வாழ்கிறேன். இல்லை என்றால், வேறு எதனால் வாழ்வேன்?.
 
Sasideera

Well-Known Member
#2
குறள் 1210:
விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி.

பொருள் :- திங்களே! பிரியாமலிருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக!.
 
Sasideera

Well-Known Member
#3
அதிகார விளக்கம் :- நினைத்தாலே இனிக்கும் தீராத இன்பம் தரும் காமம் மதுவிலும் மதிப்பானது. எப்படி பார்த்தாலும் நினைத்தாலே இன்பம் தருவது காமம். நினைப்பது போல் நினைக்க மறுப்பது தும்பல் தோன்றி நிற்றது போல் இருக்கும். என் நெஞ்சில் அவர் இருப்பது போல் நானும் அவர் நெஞ்சில் இருப்பேன். அவர் என்னை கடிந்து கொண்டாலும் என் நெஞ்சில் நிலைக்கிறார். உறவோடு இருக்கும் தருணம் தவிர மற்றபடி அவரது நினைப்பிலே இருக்கிறேன். மறந்தால் வாழ்வேனோ தெரியாது என்பதால் மறப்பதில்லை இருப்பினும் நினைப்பும் என் நெஞ்சை சுடுகிறது. நின்னத்துக் கொண்டே இருப்பதை வெறுக்காமல் இருப்பதே காதலர் சிறப்பு. உயிரே நீதான் என்றவர் அதன்படி இல்லை என்பதால் நினைப்பால் தவிக்கிறேன். நிலவே மறையாதே நெஞ்சில் இருக்கும் அவரை காண கண்கள் ஏங்குது.
 
Advertisement

New Episodes