பிரிவு : இன்பத்துப்பால், இயல் : கற்பியல், அதிகாரம் : 119. பசப்புறுபருவரல், குறள் எண்: 1183 & 1188.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 1183:
சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து.

பொருள் :- அவர் என்னைப் பிரிகிறபோதே உள்ளத் துன்பத்தையும் பசலையையும் எனக்குக் கொடுத்துவிட்டு அவற்றுக்கு ஈடாக என் அழகையும் வெட்கத்தையம் கொண்டு போய்விட்டார்.
 

Sasideera

Well-Known Member
குறள் 1188:
பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல்.

பொருள் :- இங்கோ இவள் பசலை உற்றாள் என்று சொல்கிறார்களே தவிர, இந்தப் பெண்ணை விட்டுவிட்டு அவர் போய்விட்டாரே என்று சொல்பவர் ஒருவரும் இல்லை.
 

Sasideera

Well-Known Member
அதிகார விளக்கம் :-
பசலை என்பது பெண்களுக்கு மட்டுமே வரும் காதல் நோய் என்று சொல்லப்படுகிறது. காதலர் பிரிவால் உணவு,உறக்கம் செல்லாது அவரையே சிந்தித்துக் கொண்டிருக்கும் தலைவிக்கு ஏற்படுவது பசலை நோய் பசப்பு என்றும் அறியப்படும். பிரிவுத் துன்பத்தைத் தாங்கமுடியாமல் உடல் மெலிந்து அழுது அழுது, கண் சோர்ந்து போயுள்ள தலைவியினது. தோலின் இயற்கையான நிறம் மாற்றம் அடைந்ததைக் குறிப்பது பசலையாகும்; நிறவேறுபாட்டாலும் தன் மேனியழகு குறைந்தது கண்டு மேலும் வருத்தம் அடைகிறாள் தலைவி. இதுபற்றி[ பேசும் அதிகாரம் பசப்புறு பருவரல். பருவரல் என்ற சொல்லுக்கு வருத்தம் என்று பொருள். .

நயம்பட பேசி உடன்படாத என்னை ஒப்புக்கொள்ள செய்தார் என்பதால் என் பசலையை யாரிடமும் சொல்ல முடியவில்லை. பசலையோ அவரைப் போல் என்னில் பரவுகிறது. என் அழகையும் நாணத்தை அவர் பெற்றுக்கொண்டு நோயும் பசலையும் எனக்கு தந்தார். அவரது திறத்தை எண்ணியபடி இருப்பினும் பசப்பு வருகிறதே. அவர் என்னை பிரியும் பொழுதே பசப்பு தொற்றுகிறதே. விளக்கை அகற்ற இருல் பரவுவது போல் அவர் முயக்கம் முடிந்ததும் பசலை பரவுகிறது. பசலை படந்தது என்றே கூறுகின்றார் காதலன் பிரிந்தான் என கூறுவது இல்லை. எப்படியோ அவர் நன்றாக இருந்தால் போதும். (பசலை என்பது பிரிவு தாங்கமல் தோலில் ஏற்படும் மாற்றம்)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top