பிரிவு : இன்பத்துப்பால், இயல் : கற்பியல், அதிகாரம் : 117. படர்மெலிந்து இரங்கல், குறள் எண்: 1162 & 1168.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 1162:
கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும்.

பொருள் :- இந்தத் துன்பத்தை என்னால் மறைக்கவும் முடியவில்லை. துன்பத்தைத் தந்த இவருக்கு (எழுத்தில் தொலைபேசியில்) இதைச் சொல்லவும் வெட்கமாக இருக்கிறது.
 

Sasideera

Well-Known Member
குறள் 1168:
மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை.

பொருள் :- பாவம் இந்த இரவு! இது எல்லா உயிர்களையும் தூங்கச் செய்துவிட்டுத் தனியாகவே இருக்கிறது. இதற்கு என்னைத் தவிர வேறு துணை இல்லை!.
 

Sasideera

Well-Known Member
அதிகார விளக்கம் :-

பணி காரணமாகத் தலைவன் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவிக்குப் பிரிவைத் தாங்க முடியவில்லை. அவனை நாளும் நினைந்து துன்பத்தில் உழல்வதால் உடல் இளைத்து விடுகிறாள். அந்த நிலையில் அவளது கடலளவான காதல் வேதனைகளையும் இரவு தரும் துயரையும் கண்ணீர் வெள்ளமாய் காட்சி அளிப்பதையும் அவளே இரங்கல் குரலில் கூறுகிறாள்.

மறைக்க முடியாதபடி ஊற்று நீராய் வெளிப்படுகிறது என் நோய். இதை உண்டாக்கிய அவரிடம் சொல்லவும் வெட்கமாக இருக்கிறது. காமமும் வெட்கமுட் காவடிக் தண்டுபோல் இருந்து என்னை வேதனை அடையச் செய்கிறது. காமக்கடல் நீந்திட ஏதுவான கப்பல் இல்லை. நட்பாய் இருக்கும் பொழுதே வராத அவர் வெறுத்தால் என்ன செய்வாரோ. கடல் அளவு இன்பம் தரும் காமமே தடை உண்டானால் கடலைவிட துன்பம் தருகிறது. காமக் கடல் நீந்த முடியாமல் நள்ளிரவிலும் நான் தவிக்கிறேன். எல்லாவற்றிற்கும் ஓய்வு தந்த இரவு என்னை துணையாக விழுத்திருக்கச் செய்தது. கொடியவர்கள் செய்யும் கொடுமைவிட துணை இல்லா இந்த இரவு கொடுமையானது. உள்ளம் போல் நினைக்கும் இடம் எல்லாம் சொல்ல முடியும் என்றால் வேதனையான கண்ணீரில் மிதக்காது என் கண்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top