பிரிவு : அறத்துப்பால், இயல் : துறவறவியல், அதிகாரம் : 26. புலால் மறுத்தல், குறள் எண்: 256 & 260.

Sasideera

Well-Known Member
#1
குறள் 256:- தினல்பொருட்டால் கொல்லாது உலகுஎனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்.

பொருள் :- புலால் தின்னும்பொருட்டு உலகத்தார் உயிர்களைக் கொல்லாதிருப்பாரானால், விலையின் பொருட்டு ஊன் விற்பவர் இல்லாமல் போவர்.

தின்பதற்காகவே கொலை செய்பவர் இல்லை என்றால், இறைச்சியை விலைக்குத் தருபவரும் உலகில் எங்கும் இருக்கமாட்டார்.
 
Sasideera

Well-Known Member
#2
குறள் 260:- கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்.

பொருள் :- ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.

எந்த உயிரையும் கொல்லாதவனாய், இறைச்சியைத் தின்ன மறுத்தவனாய் வாழ்பவனை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்
 
Sasideera

Well-Known Member
#3
அதிகார விளக்கம் :-

புலால் மறுத்தலாவது புலால் உண்பதைத் தவிர்த்தல். புலால் உணவு அருளுக்கு மாறானது. அருளைக் கருதுகிறவர்கள் ஓருயிரைக் கொன்று கிடைக்கும் ஊனை உண்ணமாட்டார்கள். பிற உயிர்களைக் கொன்று அதன் உடலை உண்ணுவது கொல்லாமை அறத்திற்கு எதிரானது என்பதால் அதை மறுக்க வேண்டும் என்று இவ்வதிகாரம் கூறுகிறது. மறுத்தல் என்பதனால், சுவை கருதியோ அல்லது மற்ற காரணங்களுக்காக உண்ண நேரிட்டாலும் வேண்டா என்று மறுத்தல் வேண்டும். வாய்க்கு அடிமையாகி புலால் உண்ணவேண்டாம் என உணவு ஒழுக்கம் கூறப்பட்டது.
 
Advertisement

Sponsored