பிரிவு : அறத்துப்பால், இயல் : இல்லறவியல், அதிகாரம் : 8. அன்புடைமை. குறள் எண்: 74 & 80.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 74 :- அன்புஈனும் ஆர்வம் உடமை: அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு.

பொருள் :-
அன்பு, பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்; அஃது எல்லோரிடத்திலும் நட்பு என்று சொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்.

குடும்பம், உறவு என்பாரிடத்துக் கொள்ளும் அன்பு, உலகத்தவரிடம் எல்லாம் உறவு கொள்ளும் விருப்பை உண்டாக்கும். அதுவே அனைவரையும் நட்பாக்கும் சிறப்பையும் உண்டாக்கும்.
 

Sasideera

Well-Known Member
குறள் 80 :- அன்பின் வழியது உயிர்நிலை அஃதுஇலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

பொருள் :- அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்; அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல் போர்த்த வெற்றுடம்பே ஆகும்.

அன்பை அடிப்படையாகக் கொண்டதே உயிர் நிறைந்த இந்த உடம்பு, அன்பு மட்டும் இல்லை என்றால் இந்த உடம்பு வெறும் எலும்பின்மேல் தோலைப் போர்த்தியது போன்றது ஆகும்.
 

Manimegalai

Well-Known Member
:love:(y)சூப்பர் சசி..
தினமும் வந்து திருக்குறள் படிச்சிட்டு
என்ட்ரி போடுறது
அலாதி சுகம்:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top