பிரிவு : அறத்துப்பால், இயல் : இல்லறவியல், அதிகாரம் : 8. அன்புடைமை. குறள் எண்: 71.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் :- அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும்.

பொருள் :- அன்புக்கும் அடைத்துவைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே (உள்ளே இருக்கும் அன்பைப்) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.

உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும்.

பிரிவு : அறத்துப்பால்,
இயல் : இல்லறவியல்,
அதிகாரம் : 8. அன்புடைமை.
குறள் எண்: 71.
 
Sasideera

Well-Known Member
அதிகார விளக்கம் :-

இல்வாழ்வார்க்கு அமைய வேண்டிய இன்றியமையாத குணம் அன்பு. இது அகத்தே உணரப்படும் மென்மையான உணர்வு; இதற்குப் புறவடிவம் இல்லை. மணமான ஆண்-பெண் தாங்கள் ஒருவருக்காக ஒருவர் உள்ளதாக உணருவது அன்பின் முதல்படியாக அமையும். காமத்தில் தோன்றிய, தன்னலம் சார்ந்த அன்பு பின்னர் அதனைக் கடந்து பிள்ளைகள், உற்றார், உறவினர், நட்பினர் என்று, தன்னலம் மறைந்து, பரந்து விரிகிறது. அன்புமுதிர்ந்து ஆர்வம் என்ற அடுத்த நிலைக்கு உயர்கிறது. ஆர்வம் இன்னும் உயர்ந்த நிலையான நண்பைத் தருகிறது. அன்புடைமைதான் மனிதனை மனிதனாக்குகிறது என்கிறது இவ்வதிகாரம். உடலுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு அன்புதான். அன்பு இல்லாவிட்டால் உண்டாகும் குற்றங்களும் பேசப்படுகின்றன.
 
Sasideera

Well-Known Member
திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை.

திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்.

திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி.

திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்.
 
Manimegalai

சூப்பர்.
 
mithrabarani

Writers Team
Tamil Novel Writer
திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை.

திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்.

திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி.

திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்.
enga pudikreenga facts ellam!! interesting kaa :love::love:(y)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top