பிரிவு : அறத்துப்பால், இயல் : இல்லறவியல், அதிகாரம் : 7. மக்கட்பேறு (அ) புதல்வரைப் பெறுதல். குறள் எண்: 62 & 64.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 62:- எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கள் பெறின்.

பொருள் :- பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப் பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா.

பழிக்கப்படாத நல்ல குணங்களை உடைய பிள்ளைகளைப் பெற்றால், பெற்றவளை அவனுடைய பிறவிகள்தோறும் துன்பங்கள் தொடமாட்டா.
 
Sasideera

Well-Known Member
குறள் 64 :- அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.

பொருள் :- தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தைவிட மிக்க இனிமை உடையதாகும்.

தம் பிள்ளைகளின் சிறு கையால் பிசையப்பட்ட கூழ், அமிழ்தைக் காட்டிலும் மிக இனிது.
 
Sasideera

Well-Known Member
அதிகார விளக்கம் :-

புதல்வரைப் பெறுதல் என்பது மக்களைப் பெறுதல் அதாவது மக்கட்பேறு பற்றியது. மக்கள் அறிவுள்ள பிள்ளைகளாக உருவானால் அதைவிடச் சிறந்த பேறு வேறெதுமில்லை எனத் தொடங்குகிறது அதிகாரம். அவர்கள் பண்புள்ளவர்களாகவும் அவரவர் காலில் நிற்கும்படியாகவும் வளர்க்கப்படவேண்டும் என்று தொடர்கிறது. குழந்தைகளின் சிறுகை ஊட்டிய உணவும், மெய்தீண்டலும், மழலைச் சொல்லும் பெற்றோர்க்கு அளவிலா இன்பம் பயக்கும் என்றும் மகனை உலக அரங்கில் முந்தியிருக்கச் செய்தல் தந்தையின் கடமை என்றும் குழந்தைகளை அறிவுடைமையராக்குதல் பெற்றோரின் வளர்ப்பு நோக்கமாக இருக்கவேண்டும் என்று கூறுகிறது. பிள்ளைகள் நற்குணம் கொண்டவரானால் தாய்க்கு மகிழ்ச்சி. அவர்கள் பெருமை கொண்டவர்களாக ஆனால் தந்தையின் முயற்சிகளுக்கு வெற்றி என்று சொல்லி முடிகிறது இவ்வதிகாரம்.
 
fathima.ar

Super da
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top