பிரிவு : அறத்துப்பால், இயல் : இல்லறவியல், அதிகாரம் : 5. இல்வாழ்க்கை, குறள் எண்: 44.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள்:- பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

பொருள் :- பழிக்கு அஞ்சாமல் சேர்த்த பொருள் கணக்கின்றி இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்த பொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது.

பிரிவு : அறத்துப்பால்,
இயல் : இல்லறவியல்,
அதிகாரம் : 5. இல்வாழ்க்கை,
குறள் எண்: 44.
 
Sasideera

Well-Known Member
அதிகார விளக்கம் :-

இல்வாழ்க்கை அதிகாரம் மனைவி மக்களோடு குடும்பம் நடத்தி, அறம் செய்யும்முறையை விளக்குகிறது. இல்லறமானது மற்ற எவ்வகைப்பட்ட அறங்கட்கும் ஆதாரமானது என்கிறது. இல்வாழ்க்கையானது இல்வாழ்தல் என்ற அளவில் நில்லாது இல்வாழ்தலின் சிறப்பையும் கூறுவது.

இல்வாழ்க்கை குடும்பத்திற்காக வாழும் வாழ்க்கை எனவும் உலகுக்காக வாழும் வாழ்க்கை எனவும் இரு வகைப்படும். குடும்ப வாழ்விலிருந்து முகிழ்ப்பதே உலக வாழ்க்கை. இல்லறத்தை நடத்துவது இன்ப நுகர்ச்சிக்காக மட்டும் அன்று, அது பலருக்கும் துணையாக நின்று உதவுதற்குரிய அறம் செய்வதற்கும் ஆகும். மாந்தர் தாம், தமக்கு எனத் தன்னலவாழ்வு வாழாமல் துணைவி, பிள்ளைகள், பெற்றோர், சுற்றம், விருந்தினர், வறியர், ஆதரவு நாடுவோர் முதலானோருக்காக மேற்கொள்ளும் அறவாழ்வே குடும்ப வாழ்க்கை அல்லது இல்லறம் எனப்படுவது.
 
Sasideera

Well-Known Member
திருக்குறளில் ஏழு என்ற எண்ணின் இன்னும் பல சிறப்புகள்!!!

ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளால், ஏழு சீர் களை கொண்டது.

திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133
திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380
திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700
திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250
திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330

அறத்துப்பால் தவிர ஏனைய பிரிவில் உள்ள குறள்களை மொத்தமாக கூட்ட கிடைப்பது ஏழே!!!

திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.
 
Manimegalai

:love::love::love:
சிறப்பான தகவல்.
பொருட்பாலில் 700 குறள்..
 
mithrabarani

Writers Team
Tamil Novel Writer
திருக்குறளில் ஏழு என்ற எண்ணின் இன்னும் பல சிறப்புகள்!!!

ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளால், ஏழு சீர் களை கொண்டது.

திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133
திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380
திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700
திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250
திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330

அறத்துப்பால் தவிர ஏனைய பிரிவில் உள்ள குறள்களை மொத்தமாக கூட்ட கிடைப்பது ஏழே!!!

திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.
குறளோடு சேர்த்து நீங்கள் அளிக்கும் தகவல்கள் அனைத்தும் அருமை சசிக்கா :love::love:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top