பிரிவு : அறத்துப்பால், இயல் : இல்லறவியல், அதிகாரம் : 24. புகழ், குறள் எண்: 233 & 238.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 233:- ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதுஒன்று இல்.

பொருள் :- உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது வேறொன்றும் இல்லை.

தனக்கு இணையில்லாததாய், உயர்ந்ததாய் விளங்கும் புகழே அன்றி, அழியாமல் நிலைத்து நிற்கும் வேறொன்றும் இவ்வுலகத்தில் இல்லை.
 

Sasideera

Well-Known Member
குறள் 238:- வசைஎன்ப வையத்தார்க்கு எல்லாம் இசைஎன்னும்
எச்சம் பெறாஅ விடின்.

பொருள் :- தமக்குப் பின் எஞ்சி நிற்பதாகிய புகழைக் பெறாவிட்டால் உலகத்தார் எல்லார்க்கும் அத்தகைய வாழ்க்கை பழி என்று சொல்லுவர்.

புகழ் என்னும் பெரும் செல்வத்தைப் பெறாது போனால், இந்த உலகத்தவர்க்கு அதுவே பழி என்று அறிந்தோர் கூறுவர்.
 

Sasideera

Well-Known Member
அதிகார விளக்கம் :-

ஒருவன் தன் நற்குணங்களினாலும் நற்செயல்களாலும் உலகத்திற்குப் பயனுண்டாக வாழ்ந்தால் போற்றப்படுவான். அவன் உயர்த்திக் கூறப்பட்டு நற்பெயர் பெறுவது புகழ் என அழைக்கப்படுகிறது. எல்லா அறங்களாலும் புகழ் வருதல் கூடும் என்றாலும் ஈகை செய்து புகழ் எய்துவதை வள்ளுவர் மிகவும் வலியுறுத்துகிறார். புகழ் நோக்கோடு எதிலும் ஈடுபடவேண்டும்; புகழ் இல்லா உடலைச் சுமந்த பூமி வள ஆதாரங்களில் குறைவுபடும்; வசையின்றி இசை பெற்று வாழ்வாரே வாழ்வார் எனவெல்லாம் இங்கு கூறப்படுகிறது. புகழ் இல்லாமல் வாழ்வது வாழ்க்கையல்ல என்பது வள்ளுவரது உறுதியான கருத்து.

புகழ்
மனிதன் வாழ்கிறான் என்பதற்கு அடையாளமே நற்குணங்களாலும் நற்செயல்களாலும் புகழ்பெறுதல் ஆகும். புகழ் என்பது நாம் செய்யும் செயல்களின் விளைவாகத் தாமே நமக்கு வந்து சேருவது. புகழுக்குரிய பண்புநலன்கள் வெளிப்படாமலோ அல்லது செயல்கள் ஆற்றாமலோ பெயர் பெறமுடியாது. புகழ் பெறுவது மட்டுமல்லாமல் இகழ்ச்சி நேராமலும் காத்துக் கொள்ள வேண்டும். ஒருவனைச் சுற்றி வாழும் மக்கள் அவனுடைய நற்பண்புகளை அறிந்து போற்றுவது, நாட்டின் மூலை முடுக்கெல்லாம் செல்லும் புகழ் (நிலவரை நீள் புகழ்) எனப் புகழ்நிலைகள் பேசப்படுகின்றன. உலகில் பொன்றாது (அழியாது) நிற்பது புகழ் ஒன்றுதான். தேவர்களைவிட புகழ்பெற்றவர்களையே வானுலகம் போற்றும். நிலையானதான புகழைப் பெற ஒருவன் தனது பொருட் செல்வத்தை இழக்க நேரிடலாம்; உயிரையும் இழக்க வேண்டி இருக்கலாம். வித்தகர்களாய் இருப்பவர்கள் இவற்றிலிருந்து போராடி புகழை எய்துவர். தனி மனிதன் புகழ் நோக்கொடு செயலாற்ற வேண்டும்; புகழ் மிக்கார் இல்லாத நாடு அதன் வள ஆதாரங்களில் குறைவுபடும் என்பன சொல்லப்படுகின்றன. இறந்தபின் ஒருவன் நல்லதாகப் பேசப்படாவிட்டால் அவன் இகழப்பட்டவன் என்பதாகிறது.விளங்கித் தோன்றாமல் வாழ்வது வாழ்க்கை அல்ல; பழி இல்லாமல் வாழ்வதே வாழ்க்கை. இவை இவ்வதிகாரம் கூறும் செய்திகள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top