பிரிவு : அறத்துப்பால், இயல் : இல்லறவியல், அதிகாரம் : 21.தீவினையச்சம், குறள் எண்: 204 & 208.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 204:- மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.

பொருள் :- பிறனுக்குக் கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் எண்ணக்கூடாது. எண்ணினால், எண்ணியவனுக்குக் கேடு விளையுமாறு அறம் எண்ணும்.

மறந்தும் பிறர்க்குத் தீமை செய்ய எண்ணாதே; எண்ணினால் எண்ணியவனுக்கு அறக்கடவுளே தீமையைத் தர எண்ணும்.
 

Sasideera

Well-Known Member
குறள் 208:- தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று.

பொருள் :- தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல், ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது.

பிறர்க்குத் தீமை செய்தவர் அழிவது, அவரை அவரது நிழல் விடாது கால்களின் கீழே தங்கியிருப்பது போலாம்.
 

Sasideera

Well-Known Member
அதிகார விளக்கம் :-

தீவினையச்சம் என்பது தீய செயல்களைச் செய்வதற்கு அஞ்சுதல் எனப்பொருள்படும். தீவினை நிகழ்தல் உடலின் தொழில்; தீவினைக்கு அஞ்சுதல் மனத்தின் செயல்; தீவினையச்சம் என்பது செயலின் தீமை நிகழாமல் தடுத்தல் பொருட்டுத் தீய எண்ணங்கள் உள்ளத்தில் உண்டாவதைத் தடுக்க வேண்டும் என்பதைச் சொல்வதாகிறது எனத் தெளியலாம். அஞ்சுவது அஞ்சாமை பேதைமை - பயப்படவேண்டியதிற்குப் பயப்படவேண்டும். தீயசெயல் அஞ்சப்படவேண்டும். விழுப்பங்களை (மதிப்புகளை) வேண்டுவோர் தீவினை செய்ய அஞ்சுவர். தீவினைப் பயன்கள் அதைச் செய்தவனை விடாமல் துரத்திக்கொண்டே இருக்கும். தீய நெறியில் நழுவிச் செல்லாதவன் கேடு இல்லாதவன் என அறியலாம். இவை இவ்வதிகாரப் பாடல்கள் தரும் செய்திகள்.
 

malar02

Well-Known Member
வாழ்வியலை ஒழுங்கு படுத்துவதோடு
தமிழையும் வளர்க்கும் குறள்கள்
204 குறளில் எத்தனை ழ வருகிறது (y)(y)(y)
இதற்காவது இதை கட்டாய பாடமாகவேண்டும் தமிழ் நாட்டில்
எந்த மொழியை படித்தாலும் இங்கு குறளை படிக்கணும்னு
நன்றி sasi
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top