பிரம்ம ஞானம்

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
*பிரம்ம ஞானம்*

ஒரு புகழ் பெற்ற ஞானியை பார்க்க அந்த ஊரின் செல்வந்தர் வந்திருந்தார்.
அதிக நீர் பொங்கி ஓடும் ஆற்றங்கரை அருகே இருக்கும் சிறிய பாறையில் கண்களை மூடி அமர்ந்திருந்தார் ஞானி.
அவரின் முன் ஒரு பட்டுத்துணியை விரித்து இரண்டு வைர கற்களை வைத்து விட்டு விழுந்து வணங்கினார் செல்வந்தர்.

மெல்ல கண்களை திறந்த ஞானி என்ன வேண்டும் என்பது போல பார்த்தார்.
உங்களுக்கு காணிக்கையாக விலை உயர்ந்த வைரங்களை கொண்டு வந்திருக்கிறேன்.
எனக்கு ஞானத்தை போதியுங்கள் என்றார்.
கண்களை மூடு என்பது போல சைகை செய்தார் ஞானி.
கண்கள் மூடியபடி சில நிமிஷங்கள் கரைந்தது.
செல்வந்தர் சிறிது நேரம் கழித்து கண்கள் மெல்ல திறந்து பார்த்தால் ஞானியின் முன் ஒரே ஒரு வைரம் மட்டுமே இருந்தது.

“ஞான குருவே இரண்டு வைரம் உங்களுக்கு கொடுத்தேன்.
ஒரு வைரம் காணவில்லையே எங்கே?” என கேட்டார் செல்வந்தர்.

ஞானியோ சைகையால் ஆற்றில் வீசி விட்டேன் என காண்பித்தார்.
அதிர்ச்சியடைந்த செல்வந்தர், “என்ன ஆற்றில் வீசி விட்டீர்களா எங்கே எறிந்தீர்கள்?” என்றார்.

பதட்டமடையாமல் ஞானி மற்றொரு வைரத்தை எடுத்து ஆற்றின் மையத்தில் வீசி, “இங்கேதான்” என சுட்டிகாட்டினார்.

இந்த செல்வந்தர் பிரம்ம ஞானத்தை இரண்டு வைரக் கல்லில் விலை பேசியது போல நாமும் நம் வாழ்க்கையில் அடைய வேண்டிய பெரிய விஷயங்களுக்கு சில்லறைத்தனமான பொருட்களை கடவுளுக்கு கொடுக்கிறோம்.

இறைவன் நமக்கு அருள்வதையே தொழிலாக கொண்டவன் என்றும் நாம் இறைவனிடத்தில் பெறுவதையே வாழ்வின் அடைப்படையாக கொண்டவர்கள் என்பதை உணர்ந்தோம் என்றால் என்றும் ஆனந்தம்தானே?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top