பாரதியாரின் நினைவு தினம்.

Advertisement

kavipritha

Writers Team
Tamil Novel Writer
செப்டம்பர் 11. இன்று பாரதியாரின் நினைவு தினம்.
அவரின் கவிதைகளில் நம் மனதில் நின்றத்தைப் பகிர்வோம் மக்களே.

புதிய கோணங்கி

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு

நல்ல காலம் வருகுது; நல்ல காலம் வருகுது;

சாதிகள் சேருது சண்டைகள் தொலையுது

சொல்லடி, சொல்லடி, சக்தி மாகாளீ!

வேதபுரத் தாருக்கு நல்ல குறி சொல்லு;

தரித்திரம் போகுது; செல்வம் வருகுது;

படிப்பு வளருது, பாவம் தொலையுது;

புடிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்

போவான் போவான் ஐயோவென்றுபோவான்!

#$#$#$#$#$#$#$#$
“விசையுறு பந்தினைப்போல் – உள்ளம்

வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்

நசையறு மனங்கேட்டேன் – நித்தம்

நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்

தசையினைத் தீசுடினும் – சிவ

சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்

அசைவறு மதிக்கேட்டேன் - இவை

அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?

-பாரதி-
 

Devi29

Well-Known Member
சோலை மலரொளியோ நினது சுந்தரப் புன்னகை தான்
நீலக் கடலலையே நினது நெஞ்சின் அலைகளடீ
கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடீ
வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன்

சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரமுண்டோடீ
மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தமொன்று
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
சோலை மலரொளியோ நினது சுந்தரப் புன்னகை தான்
நீலக் கடலலையே நினது நெஞ்சின் அலைகளடீ
கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடீ
வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன்

சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரமுண்டோடீ
மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தமொன்று
சூப்பர் தேவி சிஸ்....
 

SINDHU NARAYANAN

Well-Known Member
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளொரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சை கொண்ட பொருளெலாம் இழந்த விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளொரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சை கொண்ட பொருளெலாம் இழந்த விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
அருமை சிந்து சிஸ்... ஸ்கூல் டைமில், இந்த கவிதையை நான் மனப்பாடம் செய்து ஒப்புவித்து இருக்கிறேன்.. இப்போ மறந்தே போச்சு.. தேங்க்ஸ் சிஸ்.
 

Sasideera

Well-Known Member
தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி
என்னைப் புதியவுயி ராக்கி - எனக்
கேதுங் கவலையறச் செய்து - மதி
தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்...
 

Sasideera

Well-Known Member
காணி நிலம் வேண்டும் - பராசக்தி காணி நிலம் வேண்டும்;
காணி நிலம் வேண்டும் - பராசக்தி காணி நிலம் வேண்டும்; அங்கு

தூணி லழகியதாய் - நன்மாடங்கள்

துய்ய நிறத்தினதாய் - அங்கு
தூணி லழகியதாய் - நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் - அந்தக்

காணி நிலத்தினிடையே – ஓர் மாளிகை கட்டித் தரவேண்டும் - அந்தக்
காணி நிலத்தினிடையே – ஓர் மாளிகை கட்டித் தரவேண்டும் - அங்கு

கேணி யருகினிலே - தென்னைமரம்k கீற்று மிளநீரும் – அங்கு
கேணி யருகினிலே - தென்னைமரக கீற்று மிளநீரும
காணி நிலம் வேண்டும் - பராசக்தி காணி நிலம் வேண்டும்;
பத்துப் பன்னிரண்டு, பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்-அதன்

பக்கத்திலே வேணும்
பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்-அதன்
பக்கத்திலே வேணும் - நல்ல

முத்துச் சுடர்போலே - நிலாவொளி முன்பு வரவேணும் - நல்ல
முத்துச் சுடர்போலே - நிலாவொளி முன்பு வரவேணும் - அங்கு

கத்துங் குயிலோசை, கத்துங் குயிலோசை - சற்றே வந்து காதிற் படவேணும்,
கத்துங் குயிலோசை - சற்றே வந்து காதிற் படவேணும், - என்றன்

சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந் தென்றல் வரவேணும்- என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந் தென்றல் வரவேணும்

காணி நிலம் வேண்டும் - பராசக்தி காணி நிலம் வேண்டும்;

பாட்டுக் கலந்திடவே, பாட்டுக் கலந்திடவே - அங்கே யொரு பத்தினிப் பெண்வேணும்
பாட்டுக் கலந்திடவே அங்கே யொரு
பத்தினிப் பெண்வேணும் - எங்கள்

கூட்டுக் களியினிலே - கவிதைகள் கொண்டுதர வேணும் - எங்கள்
கூட்டுக் களியினிலே - கவிதைகள் கொண்டுதர வேணும் - அந்தக்

காட்டு வெளியினிலே – அம்மா, நின்றன் காவ லுறவேணும்- அந்தக்
காட்டு வெளியினிலே – அம்மா, நின்றன் காவ லுறவேணும்- என்றன்

பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப் பாலித்திட வேணும்- என்றன்
பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப் பாலித்திட வேணும்

காணி நிலம் வேண்டும் - பராசக்தி காணி நிலம் வேண்டும்
காணி நிலம் வேண்டும் - பராசக்தி காணி நிலம் வேண்டும்
பராசக்தி காணி நிலம் வேண்டும்
பராசக்தி காணி நிலம் வேண்டும
 

anupk

Well-Known Member
வாழ்க நலம்...



இன்றைக்கு மகாகவி பாரதியாரின் நினைவு நாள்...

ஆகவே கவியின் நினைவுகள் சில..








மகாகவி பாரதியாரின் நாவில் கலைமகள் குடிகொண்டிருந்தார் என்பது உண்மையான சத்திய வாக்கு. பொய்யே பேசாதவர், அவர் சொல்லும் வாக்கு ஒவ்வொன்றும் அருள் வாக்கு என்பதை பல நேரங்களில் அவர் நிரூபித்திருக்கிறார்.

பாரதி புதுவையில் குடியிருந்த ஈஸ்வரன் தர்மராஜா கோயில் தெருவில் அடுத்த வீட்டில் வசித்தவர் செல்வந்தர் பொன்னு முருகேசம் பிள்ளை.

பாரதியார் குடும்பத்தின் தேவையறிந்து அவ்வப்போது பல உதவிகளைச் செய்து வந்தவர்கள் பிள்ளையும் அவரது மனைவியும். யாரும் வந்து உதவி செய்கிறேன் என்று சொல்லி செய்தால் அதை சுயமரியாதை காரணமாக பாரதி நிராகரித்து விடுவது வழக்கம்.

அவருக்கு உதவி செய்ய விரும்புகிறவர்கள் அவர் அறியாமல் அந்த உதவிப் பொருட்களை அவர் வீட்டில் வைத்துவிட்டுச் சென்றுவிட வேண்டும்.

நெசவுத் தொழில் செய்துவந்த அவருடைய நண்பரும், பாரதி குயில் பாட்டைப் பாடிய மாந்தோப்புக்குச் சொந்தக்காரரும், பாரதியால் வெல்லச்சுச் செட்டியார் என்று அன்போடு அழைக்கப்பட்ட நண்பர் கூட பாரதிக்குப் பண உதவி செய்யும்போது அவர் அறியாமல் பணத்தை அவர் வீட்டில் வைத்துவிட்டு வந்து விடும் வழக்கமுடையவர்.

பாரதியார் வீட்டில் சமையலுக்கு அரிசியோ, காய்கறிகளோ ஒரு பையில் போட்டு ஒருவரும் அறியாமல் அவர் வீட்டு சமையல் அறையில் வைத்து விடுவாராம் பொன்னு முருகேசம்பிள்ளையின் மனைவி.

அப்படிப்பட்டவரின் மகன் ராஜாபாதர் என்பவர் படிப்பதற்காக பிரான்சு நாட்டிற்குச் சென்றார். அப்போது முதல் உலக யுத்தம் முடியும் தருவாயில் இருந்தது.
வெகுகாலம் ஆகிவிட்டபடியால் தன் மகனைப் பார்க்க தந்தை முருகேசம் பிள்ளையின் மனம் துடித்துக் கொண்டிருந்தது. மகனுடைய பிரிவு அவரை மிகவும் துன்புறுத்தியது.

அப்போது ராஜாபாதர் ஊர் திரும்புவதாக ஒரு செய்தி வந்தது, தந்தைக்கு அளவிடமுடியாத மகிழ்ச்சி. தொடர்ந்து சில நாட்களுக்குள் ராஜாபாதர் பயணம் செய்த கப்பல் நடுக்கடலில் உடைந்துவிட்டது என்ற செய்தி இடிபோல வந்து பிள்ளையைத் தாக்கியது.

மனம் பேதலித்த பொன்னு முருகேசம் பிள்ளை நடமாட்டம் இல்லாமல் படுத்த படுக்கையாக தன் மகன் நினைவோடு கிடந்தார். பலரும் பல விதங்களில் அவரைத் தேற்ற முயன்றும் ஒன்றும் பயனளிக்கவில்லை.

மகன் பயணம் செய்த கப்பல் கடலில் மூழ்கவில்லை என்றொரு பொய்த் தந்தியைத் தயார் செய்து கொண்டு வந்து காட்டியும் பார்த்துவிட்டனர்.

ஒன்றுக்கும் அவர் மனம் தேறவில்லை. கடைசியில் பாரதியார் வந்து சொல்லட்டும் நான் நம்புகிறேன் என்றார் பொன்னு முருகேசம் பிள்ளை.

அவர் உடல் நலம் தேறவேண்டுமென்கிற நல்ல எண்ணத்தில் சுற்றத்தார் பாரதியாரிடம் வந்து ராஜாபாதருக்கு ஒரு கெடுதலும் நேரவில்லை என்று பிள்ளையிடம் சொல்லுமாறு வேண்டிக் கொண்டனர்.

செய்வதறியாது திகைத்த பாரதி எப்படி இப்படியொரு பொய்யைச் சொல்லி ஒரு நல்ல மனிதரை ஏமாற்றுவது என்று தயங்கினார்.

இதுபோன்ற இக்கட்டான சந்தர்ப்பங்களில் பொய் சொல்வது தவறில்லை; மகாபாரதத்தில்கூட தர்மரை 'அஸ்வத்தாமன்' இறந்து விட்டதாகப் பொய் சொல்லச் சொன்னபோது தயக்கத்துடன் அவர் "அஸ்வத்தாமா ஹத: குஞ்சர:" (அஸ்வத்தாமன் எனும் யானை இறந்தது) என்று குஞ்சர: எனும் சொல்லை மெல்லச் சொல்லிவிடவில்லையா.

ஆகவே முருகேசம் பிள்ளையின் உயிரைக் காக்கவேண்டுமானால் அப்படியொரு பொய்யைச் சொல்வதில் தவறில்லை என்று கருதி, அவரிடம் சென்று "ஐயா! கப்பலே கவிழ்ந்தாலும் பராசக்தியருளால் நம் ராஜாபாதருக்கு ஒரு கெடுதலும் நேராது. அதற்கு நான் ஜவாப்தாரி" என்று ஆறுதல் கூறினாராம்.

எனினும் மனத் துன்பம் காரணமாக பிள்ளை ஓரிரு நாட்களில் உயிர் துறந்து விட்டார்.


அப்படியானால் கவியின் வாக்கு பொய்த்து விட்டதா? இல்லை, கப்பல் உடைந்த போதும் ராஜாபாதர் உயிர் பிழைத்து புதுவைக்கு வந்து சேர்ந்தார்.

மகாகவி சொன்ன வாக்கு "ஐயா! நாம் ஜவாப்தாரி; பராசக்தி காப்பாற்றுவாள்" என்று அவர் சொன்னதை பராசக்தி நிறைவேற்றி விட்டாள். இந்த அதிசயத்தைச் சொல்லிச்சொல்லி அனைவரும் மகிழ்ந்து போனார்கள்.


(இணையத்திலிருந்து )










குருவிப் பாட்டு

அருவிபோலக் கவி பொழிய --
எங்கள் அன்னை பாதம் பணிவேனே 1
குருவிப் பாட்டை யான்பாடி --
அந்தக் கோதைபாதம் பணிவேனே.


கேள்வி

சின்னஞ்சிறு குருவி -- நீ செய்கிற வேலையென்ன? 2
வன்னக் குருவி -- நீ வாழும் முறை கூறாய்!

குருவியின் விடை

கேளடா மானிடவா --
எம்மில் கீழோர் மேலோர் இல்லை 3
மீளா அடிமை யில்லை --
எல்லோரும் வேந்தரெனத் திரிவோம்.


உணவுக்குக் கவலையில்லை --
எங்கும் உணவு கிடைக்குமடா 4
பணமும் காசுமில்லை --
எங்குப் பார்க்கினும் உணவேயடா!

சிறியதோர் வயிற்றினுக்காய் --
நாங்கள் ஜன்ம மெல்லாம் வீணாய் 5
மறிகள் இருப்பதுபோல் --
பிறர் வசந்தனில் உழல்வதில்லை.

காற்றும் ஒளியுமிகு --
ஆகாயமே எங்களுக்கு 6
ஏற்றதொரு வீடு --
இதற்கெல்லை யொன்றில்லையடா!

வையகம் எங்குமுளது --
உயர்வான பொருளெல்லாம் 7
ஐயமின் றெங்கள் பொருள் --
இவைஎம் ஆகார மாகுமடா.

ஏழைகள் யாருமில்லை --
செல்வர் வறியோர் என்றுமில்லை 8
வாழ்வுகள் தாழ்வுமில்லை --
என்றும் மாண்புடன் வாழ்வமடா.

கள்ளம் கபடமில்லை --
வெறும் கர்வங்கள் சிறுமையில்லை 9
எள்ளற்குரிய குணம் --
இவை யாவும் உம் குலத்திலடா.

களவுகள் கொலைகளில்லை --
பெருங் காமுகர் சிறுமையில்லை 10
இளைத்தவர்க்கே வலியர் --
துன்பம் இழைத்துமே கொல்லவில்லை.


சின்னஞ்சிறு குடில்லி --
மிகச் சீரழி வீடுகளில் 11
இன்னலில் வாழ்ந்திடுவீர் --
இது எங்களுக்கு இல்லையடா.


[பாட பேதம்]: செல்வம் ஏறியோர்}


பூநிறை தருக்களிலும் --
மிகப் பொலிவுடைச் சோலையிலும் 12
தேனிறை மலர்களிலும் --
நாங்கள் திரிந்து விளையாடுவோம்.

குளத்திலும் ஏரியிலும் --
சிறு குன்றிலும் மலையினிலும் 13
புலத்திலும் வீட்டினிலும் --
எப் பொழுதும் விளையாடுவோம்.

கட்டுகள் ஒன்றுமில்லை --
பொய்க் கறைகளும் ஒன்றுமில்லை 14
திட்டுகள் தீதெங்கள் --
முதற் சிறுமைகள் ஒன்றுமில்லை.

குடும்பக் கவலையில்லை --
சிறு கும்பித்துயருமில்லை 15
இடும்பைகள் ஒன்றுமில்லை --
எங்கட் கின்பமே என்றுமடா.

துன்பமென்றில்லையடா --
ஒரு துயரமும் இல்லையடா 16
இன்பமே எம் வாழ்க்கை --
இதற்கு ஏற்றமொன்றில்லையடா.

காலையில் எழுந்திடுவோம் --
பெருங்கடவுளைப் பாடிடுவோம் 17
மாலையும் தொழுதிடுவோம் --
நாங்கள் மகிழ்ச்சியில் ஆடிடுவோம்.

தானே தளைப்பட்டு --
மிகச் சஞ்சலப்படும் மனிதா 18
நானோர் வார்த்தை சொல்வேன் --
நீமெய்ஞ்ஞானத்தைக் கைக்கொள்ளடா.

கெடுதலை ஒன்றுமில்லை --
உன் கீழ்மைகள் விடுதலையைப் பெறடா --
நீ விண்ணவர் நிலைபெறடா 19
உதறிடடா.

இன்பநிலை பெறடா! --
உன் இன்னல்கள் ஒழிந்ததடா 20
துன்பம் இனியில்லை --
பெருஞ் சோதி துணையடா.

அன்பினைக் கைக் கொள்ளடா --
இதை அவனிக்கிங்கு ஓதிடடா 21
துன்பம் இனியில்லை --
உன் துயரங்கள் ஒழிந்ததடா.

சத்தியம் கைக்கொள்ளடா --
இனிச் சஞ்சலம் இல்லையடா 22
மித்தைகள் தள்ளிடடா --
வெறும் வேஷங்கள் தள்ளிடடா.

தர்மத்தைக் கைக்கொள்ளடா --
இனிச் சங்கடம் இல்லையடா. 23
கர்மங்கள் ஒன்றுமில்லை --
இதில் உன் கருத்தினை நாட்டிடடா.

அச்சத்தை விட்டிடடா --
நல் ஆண்மையைக் கைக்கொள்ளடா 24
இச் சகத்தினிமேலே நீ --
என்றும் இன்பமே பெறுவையடா.











வாழ்க கவியின் புகழ்..


அன்புடன்
அனுபிரேம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top