பன்னீர் மசாலா.......

Advertisement

Joher

Well-Known Member
Net பார்த்து நிறைய method try பண்ணி optimize பண்ணி கடைசியில் இங்கே வந்து நிக்குது.......

வெங்காயம் 4 medium size
தக்காளி 5-6
பாதாம்/cashew (முந்திரி பருப்பு) 10 தண்ணீரில் ஊறவைத்தது
இது மூன்றையும் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் நன்றாக வேகவைக்கவும்.....

ஆறியதும் மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும்........

thumbnail (2).jpg
***************

இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 டேபிள் ஸ்பூன்
வத்தல் பொடி தேவைக்கேற்ப......
மஞ்சள் பொடி 1/2 டீ ஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
இறைச்சி மசாலா பொடி 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய்/வெண்ணெய் தேவைக்கேற்ப.......
பச்சை பட்டாணி (தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம்)
கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா கொஞ்சம் கொஞ்சம்.......
**************

ஒரு கடாயில் எண்ணெய்/வெண்ணெய் போட்டு சூடானதும் கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்....... (பட்டாணி சேர்த்தால் (fresh பச்சை பட்டாணி என்றால் அப்படியே/காய்ந்த பட்டாணி என்றால் ஊறவைத்து வேகவைத்து) அதையும் சேர்த்து வதக்கவும்)
வதங்கியதும் இறைச்சி மசாலா, மஞ்சள் பொடி, வத்தல் பொடி சேர்த்து ஒரு முறை கிளறி விட்டு அரைத்து வைத்த பேஸ்ட், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்........ பின் ஒரு 5 நிமிடம் சிம்ல வைத்தால் போதும் (ஏற்கெனவே வேகவைத்ததால்)........

பின்னர் தீயை புல்லா வச்சி பன்னீர் cubes சேர்க்கவும்....... உப்பு சரி பார்த்து கொதித்ததும் மெதுவா கிளறி விட்டு ஒரு 5 நிமிடம் சிம்ல வைத்துவிட்டு எடுத்துடலாம்......
இப்போ கொத்தமல்லி, புதினா குட்டியா cut பண்ணி சேர்த்து கிளறி கொஞ்சம் மூடி வைக்கவும்......

பன்னீர் மசாலா ரெடி.......

thumbnail (1).jpg

இன்னும் ரிச்சா வேணும்னா தீயை அணைக்கும் முன்
பாலில் வரும் ஆடையை (அப்பப்போ எடுத்து பிரீஸ்ர்லா ஸ்டோர் பண்ணிவைத்தது) கொஞ்சம் பால் சேர்த்து மிக்ஸியில் அடித்து ஊற்றிக்கொள்ளலாம்........ அந்த shining வரும்........

************
பன்னீர் அப்படியே தான் போடுவேன் (fry பண்ணமாட்டேன்)........ உடையாது.......

Homemade பன்னீர்.....
***************

இன்னும் கொஞ்சம் வெண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம்.......
சுகர் போடுவாங்களாம்...... நான் use பண்ணியதில்லை........
***************

வெங்காயம் தக்காளி தனி தனியா அரைத்து வதக்கி பண்ணி பார்த்திருக்கேன்........
கலர் taste வேகவைத்து பண்ணுனதுல தான் நல்லா இருக்குது..........
***************

எங்க வீட்டு காம்போ fried rice அல்லது சப்பாத்தி with பன்னீர் மசாலா..........
thumbnail.jpg


***************

இறைச்சிமசாலா veg தான்........
NV க்கு போடுறதால அதுக்கு இந்த பேர் எங்க ஊரில்.......

சோம்பு 1 பங்கு
கசகசா 1.5 பங்கு

மற்றதெல்லாம் கொஞ்சம் கொஞ்சம்.......
குழல் பட்டை
ஏலக்காய் பச்சை and கருப்பு
கிராம்பு
ஜாதிக்காய்
அண்ணாச்சி பூ
மராத்தி மொக்கு
கடல் பாசி
கருஞ்சீரகம்
தற்கோலம்
பிரிஞ்சி இலை

எல்லாத்தையும் நல்லா வெயிலில் காயவைத்து மிக்ஸியில் பவுடர் பண்ணிக்கணும்....
 
Last edited:

Joher

Well-Known Member
ithellam niyaayame illai jo....... neengala senju neengalaa sappidureengaleeeee

இதெல்லாம் கூரியர் பண்ணமுடியாது.........
சூடா சாப்பிடணும்........ சென்னைக்கு வாங்க........ செஞ்சுடலாம்.........
 

banumathi jayaraman

Well-Known Member
Some doubts, Joher டியர்
வெங்காயம் தக்காளி பாதாம் or முந்திரி
குக்கரில் வேக வைக்கும்பொழுது
வெயிட் போட்டு விசில் வரணுமா?

அந்த இறைச்சி மசாலாவுக்குப்
பதிலாக வேறு என்ன போடணுமுன்னு
சொன்னால் நான் இந்த ரெசிபியை
செய்ய உதவியாக இருக்கும்,
Joher டியர்

பசங்களுக்கு இந்த பன்னீர் மசாலா
பிடிக்கும்
அதனால் செஞ்சு பார்க்கலாமுன்னு
ஒரு ஆசை, Joher டியர்
இது பியூர் சைவம்தானே?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top