பதில் சொல்ல முடியாத பாடல்

Advertisement

Rajesh Lingadurai

Active Member
இரண்டு நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சிப்பெட்டியில் "மீசையை முறுக்கு" படத்திலிருந்து "மாட்டிக்கிச்சே மாட்டிக்கிச்சே" என்ற பாடல் ஒலித்தது. அந்த பாடலைக் குறித்து நான் எதிர்கொண்ட கேள்விகள் இவை.

எனது மகன் இளமாறன் (5 வயது): அப்பா என்னது மாட்டிக்கிச்சி?

எனது மகள் யாழினி (இரண்டரை வயது): அப்பா ஏன் மாட்டிக்கிச்சி?

அதன் பிறகு தொலைக்காட்சிப்பெட்டியில் பாடல் கேட்கவே சற்று யோசனையாக இருக்கிறது..
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
குழந்தைகளுக்கான கார்ட்டூன்,
சுட்டி டி வி, POGO, CHIN CHAN, etc.,
இவற்றைத் தவிர வேறு நிகழ்ச்சிகளை
அதுவும் தமிழ் நிகழ்ச்சிகளை
தொலைக்காட்சியில் பார்க்கவே
மிகவும் பயமாக இருக்கிறது,
சகோதரரே
 

Suvitha

Well-Known Member
நாம்தான் மாட்டிக்கிட்டோம் சகோ நம் குழந்தைகளிடம்...
இந்த மாதிரி பாடல்களுக்கெல்லாம் அவங்க கேட்க்கிற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலையில் நாம் மாட்டிக்கொண்டோம் பாருங்க...
 

Sainandhu

Well-Known Member
கேள்வி மட்டுமா...?
சில சமயம் விளக்கம் கொடுப்பார்கள், பாருங்க...!!!!
நாம் வாயே திறக்க முடியாத படி இருக்கும்,...
இன்னும்,, பாட்டின் அர்த்தமே புரியாது
பாவனையோட பாடுவார்கள் ....
அது இன்னும் மோசமாக இருக்கும்...
இதில் யாரை குறை சொல்வது....!!!???
 

Rajesh Lingadurai

Active Member
பதிவுகளைப் பார்க்கும்போது இது போன்ற பிரச்னைகளை எல்லோரும் சந்திக்கிறீர்கள் என்று புரிகிறது. குழந்தைகளுக்கு எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று பயிற்சி எடுக்க வேண்டும் போலிருக்கிறது.
 

Eswari kasi

Well-Known Member
பதிவுகளைப் பார்க்கும்போது இது போன்ற பிரச்னைகளை எல்லோரும் சந்திக்கிறீர்கள் என்று புரிகிறது. குழந்தைகளுக்கு எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று பயிற்சி எடுக்க வேண்டும் போலிருக்கிறது.
Yentha paiyerchi eduthalum pathil sollamudiyatha kelivilkalai dhan kepparkal. They r updated everyday.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top