படம் பார்த்து கவிதை சொல்....

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
கருமை நிறக் கண்ணன் என்ற பெயரடா உனக்கு..
கத்திரி வெயிலில் மேலும் கருத்துவிடாதே!!
நாளை பெண் கிடைப்பது கஷ்டம்..

நிறத்தில் ஒன்றுமில்லை அம்மா..
என் தோற்றம் எதுவாகினும்
அந்த ராதையின் காதல் இந்த கண்ணனுக்கே!!

கமலநயனனை வெண்மையாக்கும் முயற்சியில்
இறங்கிய அன்னையின்
மனதை அறிந்து
புன்னகையோ பாலனுக்கு!!
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
அம்மா...
உன் பாதங்களை அரியணையாக்கி
எவ்வளவு நீ தேய்த்தாலும்
உன் போல் வெண்ணிறம் வராத
கார்வண்ணன், கருத்த அழகனே நான்
போதும்! விட்டுவிடு என்னை...
namma mind um ipadithan ninachiruku hifi kaa:D:D
 

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
மாயவன் குளியல்
அன்னையவள் திண்டாட்டம்
கண்களை நீர்திவலைகள்
முற்றுகையிட
அதில் கிலி கொண்டு
கண்ணனவன்
தன் பிஞ்சுப்பாதங்களை உதைத்து
கைகளை அசைத்து
திமிற
அரவணைக்கும்
அன்னையின் கைகள்
அத்திவலைகளை
துணியாய் மாறி
துடைக்க
அதில்
அந்த கருநீல நிற மேனியவன்
தன் கள்ளச்சிரிப்பை
பிரபலிப்பாக்க
அதில் எந்தன்
உள்ளம் மதி மயங்கிய
விந்தையினை
என்னவென்று சொல்வது??
 

malar02

Well-Known Member
தாய்மை
கடலையே தனதாய் கொண்டவனின்
கண்ணை மூடும்
தண்ணிரீல் இருந்து காப்பாற்ற



கண்ணா
உன் பொக்கை
ஜொல்லில்
பிறந்ததோ இந்த பூமி



யார் நீ
வானமும் கடலும் உன் நிறம்
புரிந்தது என் இடம்



மாயவனே
நீல நிறம்
நீ கொண்டால் வண்ணம்

நான் கொண்டால் பின்னம்


கள்ளழகா
எண்ணமெல்லாம்
உன் வண்ணம்
ஆள்கிறதே எனை

அனுதினம்


பாற்கடலின்
சொந்தக்காரனே
நீ
சொம்புனீரில்
குளிக்கும் அழகில்
சொக்கி போகிறேன்
சொகுசுக்காரா



காத்தலின் காதலனே
கட்டுண்டு இருக்கின்றாய்
தாய்மையை போற்றி
 

Sainandhu

Well-Known Member
தாய்மை
கடலையே தனதாய் கொண்டவனின்
கண்ணை மூடும்
தண்ணிரீல் இருந்து காப்பாற்ற



கண்ணா
உன் பொக்கை
ஜொல்லில்
பிறந்ததோ இந்த பூமி



யார் நீ
வானமும் கடலும் உன் நிறம்
புரிந்தது என் இடம்



மாயவனே
நீல நிறம்
நீ கொண்டால் வண்ணம்

நான் கொண்டால் பின்னம்


கள்ளழகா
எண்ணமெல்லாம்
உன் வண்ணம்
ஆள்கிறதே எனை

அனுதினம்


பாற்கடலின்
சொந்தக்காரனே
நீ
சொம்புனீரில்
குளிக்கும் அழகில்
சொக்கி போகிறேன்
சொகுசுக்காரா



காத்தலின் காதலனே
கட்டுண்டு இருக்கின்றாய்
தாய்மையை போற்றி


தீராத விளையாட்டு பிள்ளை....
நீராடும் அழகை...
அழகான சொற்களில்
உயிரோட்டமான கவிதையில்
கண்முன் கொண்டு வந்த கைகளுக்கு...
அழகான பூங்கொத்து...


(y)(y)(y):):):)
 

Sundaramuma

Well-Known Member
neegale ippadi sonna epapdi kkaaaa.... mmmm sari pillayaar suli poduvom...

அமுதுண்ட கண்ணனுக்கு நீராட்டலோ..
அன்னையின் கைப்பிடியில் அத்தனை சுகமோ??
கண்ணா.. நீல வண்ணா..
உன் புன்னகை ஒன்றே லட்சம் கவிதைகள் சொல்லுமே...
(y)(y)
 

Sundaramuma

Well-Known Member
சிரிக்கிறாயா அழுகிறாயா

நீல வண்ண கண்ணா...

ஆனால்...

உன்னை பார்க்கும்

போதெல்லாம்

நான் சிரிக்கிறேன்...

உன்னை எண்ணும்

போதெல்லாம்

கோடி பூக்கள் என்னுள்...
Super(y)(y)
 

Sundaramuma

Well-Known Member
அன்னையின் கால்களை அரியணை ஆக்கி
அவளின் பட்டாபிஷேகத்தில் தினம் தினம் நனையும் மகிழ்ச்சியில் நீ.:D:D:D

அவளோ உன் முத்துப்பல் சிரிப்பில் உலகையே மறந்து நீயே அவள் உலகமென ரசித்துக்கொண்டிருப்பாள்.:love::love::love:

நானோ உன் மேனி பட்ட நீர், பாலாக தீர்த்தமாக அமிர்தமாக மாறிய விந்தையை யோசித்துக்கொண்டிருக்கிறேன். :unsure::unsure::unsure:

அதையும் நீ அறிந்து தான் எங்களை எண்ணி சிரிக்கிறாயோ கண்ணா மயில்தோகை மன்னா.. ;););)
Super(y)(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top