நேசம் மறவா நெஞ்சம்-9nesam marava nenjam

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நேசம் மறவா நெஞ்சம்

அத்தியாயம்-----9



கண்ணனின் தந்தை மாரிமுத்து அவனிடம் அடிக்கடி” கண்ணா விவசாயம் முன்ன மாதிரி இல்லப்பா................வானமும் அடிக்கடி பொய்த்து போகுது.........ஒன்னு ரெண்டுமூனு வருசமும் தொடர்ந்து மழைபேயாம பயிருபூராவும் கருகி போகுது.............இல்லன்னா மழை ரொம்ப பேஞ்சு பூரா பயிரும் அப்படியே எல்லாம் அழுகி போகுது............பூமித்தாய்க்கு இந்த விவசாயிக மேல என்ன கோபம்ன்னு தெரியலப்பா...............அதுனால விவசாயம் பண்ணுனாலும் இல்லாட்டாலும் நிரந்தர வருமானம் வர்ற மாதிரி ஏதாவது ஒரு தொழில தொடங்கனும்ப்பா...............”



மாரிமுத்து இறந்து இரண்டு வருடங்களானாலும் கண்ணன் அதைப்பற்றியே யோசித்து கொண்டிருந்தவன்..........பக்கத்து டவுனில் ஒரு வணிக வளாகம் விலைக்கு வருவதை அறிந்தவன்.......அதற்கு ஒரு பெரிய தொகையை அட்வான்சாக கொடுத்திருந்தான்



வாசுவின் தம்பி படித்து முடித்துவிட்டு சிங்கப்பூரில் ஒரு பெரிய கம்பெனியில் வேலை பார்த்து வந்தான். அவன் சம்பாத்தியத்தில் தான் அவர்களின் பழைய வீட்டை இடித்து பெரிய வீட்டை கட்டினார்கள். சென்றமுறை லீவுக்கு வந்திருந்த அவன் தம்பி வீட்டிற்கு தேவையான எல்லா ஆடம்பர பொருளையும் வாங்கிப்போட்டிருந்தான்....வாசுவின் தந்தைக்கு வாசு வேலைஏதும் செய்யாமல் சும்மா சும்மா ஊரைச்சுற்றிக்கொண்டிருப்பதை கண்டு இவனுக்கு நிரந்தர தொழில் எதையாவது வைத்து கொடுத்தால் இவன் உருப்படுவான் என்று எண்ணி அவன் தம்பி வெளிநாட்டுல இருக்கும் போதே தன்னிடம் உள்ள காசோடு அவனிடமும் வாங்கி அந்த வணிகவளாகத்தை வாங்க முடிவு செய்து கண்ணன் அட்வான்ஸ் கொடுத்திருக்கும் கடை டவுனில் நல்ல மெயினான இடத்தில் இருந்ததால் அந்த இடத்தையே வாங்கலாம் என்று எண்ணி கண்ணன் பேசிய தொகையைவிட அதிகம் தருவதாக அந்த ஒனரிடம் வாசுவும் அவன் தந்தையும் பேசியிருந்தனர்.பணத்துக்கு மயங்கிய அந்த கடை ஒனரும் அதற்கு சம்மதித்திருந்தார்.



பெரும் கஷ்டப்பட்டு அந்த வளாகத்தை வாங்க பணம் புரட்டிய கண்ணன் பத்திரம் போடும் நிலையில் பிரச்சனை வரவும் கண்ணன் விட்டு கொடுக்காமல் அதை வணிக தொழிற்சங்கம் வரை கொண்டு சென்றிருந்தான். அவர்கள் பஞ்சாயத்து செய்து அந்த வளாகத்தை கண்ணன் பெயரில் பத்திர பதிவு செய்து இருந்தனர்..........



எப்படியாவது தம்பி ஊரில் இருக்கும்போதே இந்த வணிக வளாகத்தை வாங்கினால் வாழ்க்கையில் ஈஸியாக செட்டிலாகலாம் ..........என்று எண்ணியிருந்த வாசுவுக்கு கண்ணன் தான் தனியாக பணம் தருவதாக கூறியும் அதை ஏற்காமல் கண்ணன் பஞ்சாயத்துவரை கொண்டு சென்று அதை வாங்கியிருந்ததால் வாசு அவன்மீது கடுங்கோபத்தில் இருந்தான்..........வேறு ஏதாவது வளாகத்தை வாங்கலாம் என்று எண்ணினாலும் முதலில் பணம் தருவதாக ஒத்துகொண்டிருந்த அவனுடைய தம்பி இப்போது பணம் இல்லை என்றும் இப்போது ஊருக்குவர லீவு கேட்டு இருப்பதால் பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டான்...............இதற்கு காரணம் கண்ணன்தான் என்று அவன் கண்ணன் மீது வன்மத்துடன் இருந்தான்................

இதனால் கண்ணனை அந்த கடையை எப்படி மூட வைக்கலாம் என்று எண்ணி சிலரிடம் பணம் கொடுத்து அங்கு கடைக்கு வந்து போகும் பெண்களிடம் குடித்துவிட்டு வம்பிழுத்து தேவையில்லாமல் பிரச்சனை உருவாக்கியிருந்தான்.

கண்ணன் அவர்களை அடித்து விசாரித்த்தில் அவர்கள் வாசுதான் இப்படி செய்ய சொன்னான் என்பதை ஒத்துக்கொண்டிருந்தார்கள்.



கண்ணன் வாசுவின் தந்தையிடம் இனிமேல் ஏதாவது பிரச்சனை வந்தால் போலீசுக்கு செல்ல வேண்டியிருக்கும் என்று எச்சரிந்திருந்தான்.

வாசுவின் தந்தை “டேய் தம்பி ஊருல இருந்து வரப்போறான் இப்ப போயி தேவையில்லாத வினைய இழுத்துகிட்டு வராத ............சும்மாவே உன்னோட தம்பி ரொம்ப கணக்கு கேக்குறான்......................என்ன சொல்லுறது புரியுதா..............”



“சரிப்பா....................”





கண்ணன் பணம் இருந்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாமா.........ஒரு நியாயம் நேர்மை வேண்டாமா.......... தன் கடைக்கு வரும் வாடிக்கையாளரிடம் வாசு பிரச்சனை செய்ததை பொருத்து கொள்ளமுடியவில்லை..........கண்ணன் தொழிலை தெய்வம் போல கருதினான்....கண்ணனுக்கு விவசாயத்தில் ஈடுபாடு அதிகம் என்பதால் எந்த பொருள் எங்கு சகாயமாக கிடைக்கும் என்பதை விரல் நுனியில் வைத்திருந்தான்.. ....கண்ணன் வீட்டில் எந்த பிரச்சனையையும் சொல்லவில்லை. இன்னும் ஆறுமாத காலத்தில் பணப்பிரச்சனை கொஞ்சம் முடிவிற்கு வரும் என்பதால் திருமணத்தில் நாட்டமில்லாமல் இருந்தான்.............அவனுடைய அம்மாதான்” உனக்கு கண்டிப்பாக கல்யாணம் நடக்கணும் இல்லைனா அஞ்சுவருஷம் நடக்காதுன்னு ஜோசியர் சொல்லிட்டாருப்பா........இப்பவே உனக்கு வயசு 27ஆச்சு..........இன்னும் 5வருசம்னா உனக்கு 32 வயசாகிரும்...............அப்புறம் உனக்கு எப்ப கல்யாணம் ஆகி நான் எப்ப பேரன் பேத்திய பாக்குறது.............”.என்று கட்டாயபடுத்தி இங்கு கூட்டி வந்திருந்தார்,,,,,,,,,,,,,,



“அழகர் தாமர தங்கச்சிய கூட்டிட்டு வாத்தா............”...

தாமரை சென்று சுதாவை அழைத்துவர..............ஏற்கனவே காந்திமதி அவளிடம் “சுதா இங்க பாரு சும்மா ...........இந்த டான்ஸ்காரிக மாதிரி உடை போட கூடாது...........என்ன சொல்லுறது புரியுதா...............”..என்று மிரட்டியிருந்ததால் சுதா ஆகாய ரோஜா வண்ணநிறத்தில் ஜரிகைகரை வைத்த பட்டுச்சேலைக்கட்டி அதேநிறத்தில் பிளவுஸ்போட்டு காதில் கிளிகூடு போட்ட ஜிமிக்கி போட்டு கழுத்தில் சிம்பிளாகவும் அதே நேரத்தில் மிக அழகாகவும் நெக்லஸ் போட்டு இருந்தாள்.. கையில் நிறைய கண்ணாடிவளையலும் தலையை சாதாரணமாக சீவி மல்லிகைப்பூ வைத்திருந்திந்தாள். வந்தவள் அனைவருக்கும் கைகூப்பி வணக்கம் தெரிவித்து அனைவரையும் வணங்கினாள். பின் அங்கு விரித்திருந்த ஜமுக்காளத்தில் அமர வைக்கப்பட்டாள்.



பெண்ணை நிமிர்ந்து பார்த்த கண்ணனுக்கு அவள் அழகெல்லாம் கண்ணுக்கு தெரியவில்லை.இவள் நம்ம வீட்ல இருக்கவங்ககிட்ட அன்பா அனுசருச்சு போவாலா என்று ஆராய்ச்சி பார்வை பார்த்து கொண்டிருந்தான்,

அவன் அம்மாவுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை........பொண்ணு நல்லா செவப்பா அழகாயிருக்கு.............

வாசுவோ திறந்த கண்ணை சிமிட்டவில்லை...............இவ்வளவு அழகாயிருக்க இந்த பொண்ணு இவனுக்கா.............



நம்ம அம்மாவும் பொண்ணு பாக்குறேன்னு பொண்ணு பாக்குறேன்னு சொல்லுது...........இந்த சுதாவெல்லாம் அது கண்ணுக்கு தெரியலயா.................இன்னைக்கு வீட்டுக்கு வரட்டும் அதுக்கு இருக்கு அதுவும் இவனுக்கு கண்டிப்பா .....................சுதா கிடைக்கவே கூடாது....................என்ன செய்யலாம்.....................
 
Last edited:

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கயலும் மற்ற மூவரும் மண்டபவாசலின் அருகே வந்தவர்கள் அங்கே இருந்து உள்ளே பார்த்தவள் மண்டபத்தின் நடுவில் சேரில் அமர்ந்திருந்து கண்ணனை பார்த்தவுடன் திக் என்றானது.மெதுவாக அமுதாவின் கையை பிடித்தாள் .அமுதாவின் காதிற்குள்” ஏய் அமுதா வாடி இப்படியே ஒடிபோயிரலாம்……………”

“ஏண்டி..............”.

“அப்படியே திரும்பி உள்ளே பாரு..........”.

“இவரு ஏண்டி இங்க உக்காந்து இருக்காரு............”



“எதுக்கு............அங்க திட்டும்போது கொஞ்சம் வார்த்தைய மறந்திருப்பாரு..............அது இப்ப ஞாபகம் வந்திருக்கும் அதான் இப்ப வந்திருக்குறாரு...........”



“ச்சீ....ச்சீ பாத்தா அப்படி தெரியலடி இது வேற என்னமோடி...........”



அப்போது வாசலுக்கு வந்த மாணிக்கம்”.என்னம்மா இங்க நின்னுகிட்டு என்ன பண்ணுறீங்க........அங்க மாப்ள வீட்டுக்காரங்க வந்துருக்காங்க...........உள்ள வாங்கம்மா..........”.

“என்னது............மாப்ள வீட்டுகாரங்களா....”..

நடுவில் அமர்திருந்த கண்ணனை சுட்டிக்காட்டியவர் “அவருதாத்தா மாப்ள”

“என்னது அவரு மாப்ளயா.....................”.

“ஆமாத்தா..................வாங்க...........”.என்று உள்ளே கூட்டிச்சென்றவர் அவர்களிடம்” இவ என்னோட மூணாவது பொண்ணு பேரு கயல் பக்கத்தூருல BCA 2வது வருசம் படிக்குறா.........”



அப்போதுதான் அவளை நிமிர்ந்து பார்த்த கண்ணன் இவளா,,,,,,,,,,இவ பொண்ணோட தங்கச்சியா..................காலேஜ்ல ரெண்டாவது வருசம் படிக்குறான்னா..............வயசு 18 இல்ல 19 தான இருக்கும்............அதான் சிறுபிள்ளத்தனமா நடந்துக்குறாளோ..............நம்ம ராமனுக்கும் அதே வயசுதானே..............ஆனா அவன் எவ்வளவு பொருப்பா இருக்கான்...............



கண்ணனின் தம்பி ராமன் வந்ததிலிருந்து இது என்னடா அண்ணனுக்கு பொண்ணுபாக்க வந்தா.............பொண்ணத்தவிர அம்புட்டும் வயசான டிக்கெட்டுகளா இருக்கு . இதுக்கு பேசாம காலேஜ்க்கு போயிருந்தா பிரண்ட்ஸ்களோடயாச்சும் பொழுது போயிருக்கும்.........பக்கத்தில அண்ணன் இருக்குறதுனால போன எடுத்தும் பாக்கமுடியல.................



இது என்னோட நாலாவது பொண்ணு மல்லிகா........ஊருல 11ன்னாவது படிக்கிறா.............



நிமிர்ந்து பார்த்த ராமன் அப்பா.........................யாருடா இது குலோப்ஜாமூன் மாதிரி இருக்கா.............மல்லிகாவின் குண்டு கன்னங்களும் கோலிகுண்டு கண்களும் அப்பாவிதனமான முகமும் பூசிய உடல்வாகும் அவனை மிகவும் கவர்ந்தது.



அப்போதுதான் அவனை நிமிர்ந்து பார்த்த மல்லிகாவை கண்டவன்.உதட்டை சுழித்து கண்சிமிட்டினான்......................



மல்லிகாவிற்கு பக்கென்றது.என்னது இந்த ஆளு நம்மள பாத்து கண் அடிச்சது மாதிரி இருந்துச்சு...............இவர முன்ன பின்ன பாத்தமாதிரி தெரியலயே...............மீண்டும் அவனை நிமிர்ந்து பார்க்க வந்த சிரிப்பை அடக்கியவன் எதுவுமே நடக்காத சாது பிள்ளைபோல அமர்ந்திருந்தான்............



ச்சி.......ச்சி.......இல்ல..........அப்போது அங்கு வந்த தாமரை ஏய் எல்லாரும் போயி சுதாட்ட உக்காருங்க...........

கண்ணன் ராமனை விட 9 வருடங்கள் மூத்தவன் என்பதால் ராமன் கண்ணனிடம் அதிகம் பேசமாட்டான்...........மிகவும் பொறுப்பாக நடந்து கொள்வான். அவனது சேட்டை வால்தனங்கள் எல்லாம் அண்ணன் இல்லாத போதுதான்...............



கயல் மிகவும் கலகலப்பானவள். எப்போதும் துறுதுறுப்புடன் இருப்பாள். வீட்டிலே மிகவும் பொறுப்பானவள். அனைவரிடமும் அன்பாகவும் விட்டுகொடுக்கும் தன்மையும் உள்ளவள். ஆனால் கண்ணன் பார்வையில்...........................



அதுவரை அங்கே அமர்ந்திருந்த சுதா கண்ணனை நிமிர்ந்து பார்த்தவள் அவன் அருகில் அமர்ந்திருந்த வாசுவையும் பார்த்தாள்.........

கண்ணன் கையில் வாட்ச் மட்டும் கட்டி கம்பீரமாக வேட்டி சட்டை போட்டு ஆண்மையின் இலக்கணமாக இருந்தான்.



வாசுவோ கைச்செயின் இரண்டு கையிலும் மோதிரம் கழுத்தில் பட்டையான செயின்..............தலையிலிருந்து கால்வரை அலங்கார பூச்சுடன் ஒருநடிகனை போல இருந்தான்............



சுதாவிற்கு வெளிப்பூச்சே கண்ணை கவர்ந்த்து..........கண்ணனின் குடும்பத்தை பார்த்தவள் எங்கே தானும் தாமர அக்கா மாதிரி கூட்டுகுடும்பத்தில் வாக்கப்பட்டு காலம்பூராவும் குடும்பத்துக்காக உழைக்கனுமோ......என்று யோசித்து கொண்டிருந்தாள்............



சுதாவின் அருகில் அமர்ந்திருந்த கயல் அமுதாவிடம்” என்னடி இவரப்போயி மாப்பிள்ளைங்கிறாங்க...................இவரு ஒரு சிடுமூஞ்சியில்ல சிரிக்கவே காசு கேப்பாருல்லடி.....................”.



“ஏய் விடு விடு ஆமா உங்க அக்கா பெரிய சிரிச்சமூஞ்சி .அவளும் எப்ப பாத்தாலும் கடு கடுன்னுதானடி இருப்பா..................ரெண்டுபேருக்கும் சூப்பர் பொருத்தம்டி...........”



“இருந்தாலும் அவ பாவம்தான்டி................ஆனா இவரு சுதாவ கல்யாணம் பண்ணுனா நான் மாமான்னு தான கூப்புடனும்...........”.



“தாமர அக்கா வீட்டுகாரார மாமான்னு தான கூப்புடுற...........”.



“அவரு பாவம்டி கோபமே வராது. எப்பவுமே சிரிச்சுக்கிட்டே இருப்பாரு.....ஆனா இவரு...................”.

அதுவரை மனதுக்குள் யோசித்து கொண்டிருந்த சுதா பக்கத்தில் உட்கார்ந்து சிரித்து பேசிக்கொண்டிருந்த அமுதாவையும் கயலையும் கண்டவளுக்கு கடுகடுப்பு தோன்றியது...............நிமிர்ந்து இவர்கள் இருவரையும் பார்க்க இருவரும் கப்சிப் ஆனார்கள்............



இவர்களை பார்த்து கொண்டிருந்த கண்ணன் சுதா தன் ஒரே பார்வையில் அவர்களை அடக்கியவளை கண்டவன் பரவால்லயே இந்த ரெண்டுவாலும் அடங்கிருச்சுங்க...............இவுக வீட்டுல எல்லா பொண்ணுகளுமே ஆடம்பரம் இல்லாம ரொம்ப சிம்பிளா இருக்குறாங்க. அதுனால பொண்ணும் ரொம்ப சிம்பிளாத்தான் இருக்கும்................தன் அம்மாவை நிமிர்ந்து பார்காக சாவித்திரி சந்தோசத்துடன் தலை அசைத்தாள்................. கண்ணனும் கண்மூடித்திறந்து தன் சம்மத்த்தை தெரிவித்தான்...........



சாவித்திரி அழகரிடம் திரும்பி” அண்ணே எங்களுக்கு முழு சம்மதம்”...................... ஆனால் .சுதாவிற்கு .......................?



தொடரும்........
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top