நேசம் மறவா நெஞ்சம் -8 nesam marva nenjam

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நேசம் மறவா நெஞ்சம்

அத்தியாயம்------8

சந்திற்குள் திரும்பப் போன வாசு சந்தின் எதிர்புறத்திலிருந்த குழாயில் மல்லிகாவும் சுதாவும் நிற்பதைக்கண்டவன் ஓ..........எல்லாரும் அங்க இருக்காங்களா ................என்று நினைத்து அவர்களை நோக்கிச் சென்றான்.............

போன் பேசி முடித்து கண்ணன் அந்த சந்திற்குள் வந்துகொண்டிருந்த போது அன்று இரவு மோதிய அதே பெண் கண்ணை முடிக்கொண்டு தன்னை கட்டிப்பிடித்து கத்த ஆரம்பித்ததை கண்டு போச்சு இவளுக்கு இதே வேலையா போச்சு தான் ஏதாவது கேட்டால் மேலும் கத்தி ஊரையே கூட்டுவாளோ என்று எண்ணி அவள் கத்தி முடிக்கட்டும் என்று நினைத்து பேசாமல் கோபத்துடன் அவளை முறைத்தவாறு பார்த்து கொண்டிருந்தான்..........

பரவாயில்லயே இன்னைக்கு நம்மள அமுதா திட்டலயே என்று நினைத்து கண்ணை திறந்த கயல் தன் கண்ணிற்கு நேராக ஒரு ஆணின் சட்டை தெரியவும் போச்சு போச்சு................இன்னைக்கு யார கட்டிப்புடிச்சேன்னு தெரியலயே..........இப்ப என்ன பண்ணுறது......................நம்ம வீக்னெஸ் தெரியுற ஆளுகளோட எண்ணிக்கை கூடிகிட்டேப்போகுது................அன்னைக்கு மாதிரி இன்னைக்கு எந்த ஐயனாருன்னு தெரியலயே.........................என்று நினைத்து தலையை நிமிர்ந்து பார்க்க............................கண்ணன் அவளை முறைத்தபடி நின்று கொண்டிருந்தான்.

ஆத்தி மறுபடியும் அதே ஐயனாரா..............இவரு முறைச்சுப் பாக்குறதப் பாத்தா........விஜயகாந்த் படத்துல அவருக்கு கண்ணு செவக்குமே அது மாதிரியில்ல இவருக்கும் கண்ணு செவப்பா இருக்கு ..........இனி அவரு மாதிரி இவரும் வேஷ்டிய மடிச்சுக்கட்டி தரையில காலு படாம பறந்து பறந்து அடிப்பாரோ............என்று நினைத்து நான்குஅடி பின்னால் தள்ளி நின்றாள்..............

கண்ணன் இவளிடம்” ஏய் உனக்கு அறிவு இருக்கா இல்லையா.......................எப்ப பாத்தாலும் இது என்ன பழக்கம்...............ஒரு பொம்பளப்பிள்ள எப்ப பாத்தாலும் ஒரு ஆம்பளய கட்டிப்பிடிக்கிறது..........உங்க வீட்ல நல்ல பழக்கம் எதுவும் கத்து குடுக்க மாட்டாங்களா ............அன்னைக்காச்சும் ராத்திரி நேரம் இருட்டுல வந்து தெரியாம மோதிட்ட பாவமுன்னு நினைச்சேன் .இன்னைக்கு என்ன .பகல்தானே.............ஆமா உண்மையிலே உனக்கு கண்ணு தெரியுமா ..........தெரியாதா..................”

(அடப்பாவி என்னோட கண்ணு அழகாயிருந்ததால தான்டா எனக்கு கயல்விழின்னு பேர் வச்சேன்னு எங்க அப்பத்தா சொன்னுச்சு....................)

“கத்த ஆரம்பிச்சாமட்டும் கத்தி ஊரையே கூப்பிடுர........நான் இவ்வளவு கேள்வி கேக்குறேனே பதில் சொல்ல தெரியாதா.............இல்ல உனக்கு காதும் கேக்காம போச்சா......................”

(இல்லயே நீங்க பேசறது ஒரு வார்த்த மாறாம நல்லா கேக்குதே..............)

“ஏய் நீ என்ன லூசா ..........”..ம்கூம் இவன் கேட்ட ஒரு கேள்விக்கும் இவளிடம் பதிலில்லை...............கயல் இவனை பார்ப்பதும் பின் தலை குனிவதுமாக இருந்தாள்............

நேரம் ஆக ஆக கண்ணனுக்கு கோபம் சுறுசுறுவென ஏற தொடங்கியது. இன்னேரம் இதுவே ஒரு ஆணாக இருந்தால் இங்கு நடப்பதே வேறாக இருந்திருக்கும்.அந்த நேரம் கண்ணனுக்கு அவன் தாயிடமிருந்து போன் வர அவன் அவளை முறைத்தபடி கிளம்பத்தயாரானான்....................

அந்தநேரம் அங்கு ஓடி வந்த அமுதா இந்த கயலுயாருகிட்ட பேசிகிட்டு இருக்கா......ஆனா இவ பேசற மாதிரி தெரியலயே..............அவரு தான இவள ஏதோ திட்டுற மாதிரி இருக்கு........என்ன ஏழரைய இழுத்தான்னு தெரியலயே........அவளோட அப்பத்தாவுக்கு தெரிஞ்சா...............நம்மளயுமுள்ள சேத்து நாலு போடும்.............இப்ப என்ன பன்னுறது..........என்று நினைத்தபடி................

“கயலு யாரு இந்த அண்ணன் உனக்கு தெரிஞ்சவங்களா நம்ம தாமர அக்காவுக்கு தெரிஞ்சவங்களா..................”

(ஆத்தி அந்த ஆளே இப்ப தான திட்டி முடிச்சிட்டு டயர்டாகி கிளம்பபோனாரு இவ என்னத்தபேசி எரியிற தீயில எண்ணைய ஊத்த போரான்னு தெரியலயே................ )

கண்ணனிடம்” அண்ணே என்னாச்சு ஏன் அவள முறைக்கிறீங்க நீங்க தாமர அக்காவுக்கு தெரிஞ்சவங்களா............இவளும் தாமர அக்கா மாதிரிதாண்ணே........ரொம்ப அமைதியா அடக்கமா இருப்பா.......இவ இருக்குற இடமே தெரியாது அவளோ நல்லவண்ணே.............”.என்று ஏதோதோ வாய்க்கு வந்ததை சொல்லி சமாளித்து கொண்டிருந்தாள்...........

(ஆத்தி இவ தேர இழுத்து தெருவில விட்டுட்டாளே............).

அதுவரை கயலை முறைத்து கொண்டிருந்த கண்ணன் அமுதாவை நோக்கி “ஓஓஓ................உங்க ஊருல அடக்க ஒடுக்கமானவங்க இப்படித்தான் அடுத்த ஆம்பளய கட்டிப்புடிச்சுகிட்டு தொங்குவீங்களா.......?.”

ஆத்தாடி.................அப்ப கிடா வெட்டிடாங்களோ.................என்று நினைத்து மெதுவாக கயலை நிமிர்ந்து பார்க்க அவள் ஆம் என்று கண்ணை மூடித்தி றந்தாள்...........

ஆத்தி எப்படி சமாளிக்கிறது...........”..அது ஒன்னுமில்லண்ணே.............இந்த லூசு நான்னு நினச்சு உங்கள கட்டி புடிச்சிட்டான்னு நினைக்கிறேன்............இவ பயம் வந்தா இப்படித்தாண்ணே பண்ணுறா..................ப்ளீஸ்ஸ் மன்னிச்சுகங்க..............”

ஓஓஓ.........................(.அது நாளதான் இந்த லூசு அன்னைக்கும் அப்படி பண்ணுனாளோ)..............”...ஏன் இந்தம்மா எங்கிட்ட மன்னிப்பு கேக்க மாட்டாங்களோ..............கத்துனா மட்டும் சத்தம் எட்டூரூக்கு கேக்குது.......மன்னிப்பு கேக்க வாய் வராதோ..............”.

“சாரி மன்னிச்சுகுங்க .............தெரியாம மோதிட்டேன்..........”.

“ம்ம்ம்ம்ம்................இனிமே இப்படி பண்ணாத.........”..என்றபடி தன் தாயை பார்க்க சென்றான்...........

“ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...............”.என்று பெருமூச்சு விட்ட கயல்..............அமுதாவை போட்டு மொத்த துவங்கினாள்...........”..லூசுக்கொரங்கே அம்புட்டுக்கும் காரணம் நீதான்.........எத்தன நாளா பிளான் போட்ட என்னைய இப்படி அசிங்கப்படுத்த............எங்க அப்பத்தாவ கூட்டிட்டு வந்திருந்தாக்கூட இம்புட்டு அசிங்கம் வந்திருக்காது.........எல்லாம் உன்னாலதான்டி..............”..என்ற கயலுக்கு அழுகை வரும் போல இருந்தது. கண் கலங்கியது.

“ஏய் சாரிப்பா சாரிப்பா,,,,,,,,,,,,,,,,உங்கிட்ட சொல்லிட்டு தான்டி போனேன். .............நீதான்டி .......கவனிக்கல.......ப்ளீஸ்பா மன்னிச்சுக்கப்பா...............இப்ப இவளோ பேசறவ அவருகிட்ட மன்னிப்பு கேட்டுருக்களாம்ள.............”

“கட்டிப்புடிச்சதும் மொதல்ல நீன்னுதான்டி நினசேன் அப்புறம் அவருன்றதும் ரொம்ப பயந்துட்டேன்................அப்பத்தா வரும்போதே சொல்லி தான்டி கூட்டிகிட்டு வந்துச்சு............இன்னைக்கு சுதாவ பொண்ணு பாக்க வாராங்க.....அதனால எந்த வருஷம் மாதிரியும் இல்லாம இந்த வருஷம் கண்டிப்பா கிடா வெட்டுறத பாக்க போகக் கூடாது.நானும் வரமாட்டேன். மீறி போய் என்னமாவது நடந்தா இங்க ஒரு சாட்டைய விலைக்காச்சும் வாங்கி ஒன்னைய வெளுப்பேன்னு..... அந்த ஆளே மூச்சுவிடாம திட்டுறாரு, நாம ஏதாவது பேசப்போயி அப்புறம் ரொம்ப சத்தம் போட்டா அப்புறம் யாரு அடிவாங்குறது. அதுதான்டி மூச்சுவிடாம நின்னுகிட்டு இருந்தேன்,.”.............

“ச்சே ச்சே......நான் கொஞ்சம் லேட்டாவே வந்திருக்கலாம்...............”.

“ஏண்டி........”

“இல்ல.....கொஞ்சம் லேட்டா வந்திருந்தா.......பிரச்சனை பெருசாகி அப்பத்தா ஒன்னைய சாட்டையால வெளுத்திருக்கும்...........அப்ப இந்த தெருவுல எல்லாம் சாட்டயால அடிச்சுகிட்டு போவாங்கல்ல......அதுமாதிரி அப்பத்தா அடிக்க நீ அடி வாங்க..............கலெக்க்ஷன் சூப்பரா இருந்திருக்கும்………….

ஆனா நீ அவர் திட்டும்பேசாம இருக்கவும் எங்க அவர சைட் அடிக்கிறியோன்னு நினைச்சேன்.................ஆனா அந்த ஆளு சூப்பரா..........கடைக்குட்டி சிங்கம் கார்த்தி மாதிரி இருந்தாருல...............ஆனா என்ன கலருதான் கொஞ்சம் கம்மி................ச்சே ..........நான் தான் அவசரப்பட்டு அவர அண்ணேன்னு சொல்லிட்டேன்...........இப்ப போயி வேணா மாமான்னு கூப்புட்டுட்டு வரவா..............”

“ ஐயனாருன்னு கூப்புடு.............”

“ஏண்டி அன்னைக்கு நைட்டு வந்தவர தானே ஐயனாருன்னு சொன்ன..........”

“அவரும் இவரும் ஒன்னுதான்டி........”

“ஒஒஒ...........கடவுள் ஏண்டி உங்க ரெண்டு பேரையும் அடிக்கடி மீட் பண்ண வைக்குறாரு...............”

“அவருக்கு வேற வேலயில்ல..........அதான்........அடச்சீ வா............ ஆனா நான் இன்னைக்கு யாரு முகத்துல முழிச்சேன்னுதெரியல.............காலையில இருந்து திட்டு வாங்கிகிட்டு இருக்கேன்............முதல்ல சுதாக்கா....... அப்புறம் அம்மா....அப்பத்தா இப்ப இவரு.....................”.

. “சுதாக்கா ஏண்டி திட்டுனா..............”

“நான் ஒன்னுமே பண்ணலடி.............நானும் மல்லிகாவும் அவளோட கிளிப்ப வச்சு விளையாடிகிட்டு இருந்தமா.........அது கைதவறி கீழே விழுந்து சுக்கு சுக்கா உடஞ்சு போச்சு.............அதுக்கு நான் என்னடி பண்ணுறது..............அதுக்கு திட்டுறா...........திட்டுறா........கோயிலுக்கு வேனுல ஏறுனதுல இருந்து இங்க வந்து இறங்குற வரைக்கும் திட்டுறா.........எனக்கு ஒரு பக்கம் காது கேக்காம போச்சுன்னு நினைக்கிறேன்.............”

அப்புறம் எங்க அம்மா” ஏண்டி நீயெல்லாம் ஒரு பொம்பள பிள்ளயா..........இப்படி ஆடுகாலியா இருக்கா..........அடங்காப்பிடாரி”ன்னு திட்டுறாங்க.............

“அப்புறம் அப்பத்தாவும் இந்த ஆளும் திட்டுனதும் உனக்கே தெரியுமே.......”.

“உன்னோட நிலைம இன்னைக்கு கொஞ்சம் கஷ்டம்தான்டி........சரி சரி வா......” என்று இருவரும் வழக்கடித்தபடி நடந்து வர எதிரே மல்லிகாவும் அருணாவும் தண்ணிர்குடத்தை தூக்கிகொண்டு வர .............கயல் ஓடிச்சென்று அருணாவிடம் குடத்தை வாங்கினாள்.


“ஏண்டி இப்படி வேர்த்து விருவிருத்து வார என்னையும் துணைக்கு கூப்பிட்டு இருக்களாம்ல.............”

“இல்லக்கா நீ அமுதா அக்காவோட கோயிலுக்கு போயிட்டன்னு நினைச்சேன்.............”.

“சுதாக்காவையாச்சும் துணைக்கு கூப்பிட்டு இருக்கலாம்ல........”

“ம்கூம் அவ ஒரு குடம் தண்ணீர் மட்டும் தூக்குனாக்கா..................அதுக்கே என்னமோ ஒரு வாட்டர் டாங்க்கையே இடுப்பில் தூக்கிட்டு வந்த மாதிரி பில்டப் கொடுத்தா..............அப்புறம் என்னோட மேக்கப் அழிஞ்சிரும்ன்னு போயிட்டா..................நானும் மல்லிகாக்காவும் தான் ஆளுக்கு பத்து கொடம் தண்ணி பிடிச்சோம்..............”


கயலுக்கு எந்த வேலையும் செய்யாததால் மனதில் உறுத்தியது..............”.இனிமே நீங்க ரெண்டுபேரும் எந்த வேலயும் பாக்க வேணாம்.............நானே பாக்குறேன்..........நீங்க ரெண்டுபேரும் போயி மூஞ்சிய கழுவுங்க................”

“இல்லக்கா இங்க இனி ஒரு வேலயும் இல்ல..............நம்மள அம்மா கோயிலுகிட்ட இருக்குற மண்டபத்துக்கு வரச்சொன்னாங்க............”.

சரியென்று நால்வரும் கிளம்பிவர ..........................

அங்கு கண்ணன் குடும்பத்தை அனைவரும் வரவேற்று அங்கிருந்த நாற்காலியில் அமர வைத்தனர்..............

காந்திமதிக்கு கண்ணனை ஒரே பார்வையில் பிடித்து விட்டது..............

அதுவரை கோயில் பக்கம் சுற்றி கொண்டிருந்த வாசுவுக்கு சுதாவை பெண் பார்க்கும் விசயம் தெரியாது..........அப்போதுதான் தன் தாயின் மூலம் விசயத்தை கேள்வி பட்டவனுக்கு திக்கென்றது............மாப்பிள்ளை யார் என்று பார்ப்பதற்கு வேகமாக மண்டபத்திற்குள் நுழைந்தவன்............அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து அனைவரிடமும் சகஜமாக பேசிக்கொண்டிருந்த கண்ணனை கண்டவன்..............இவனா............................கண்ணனை வன்மத்துடன் முறைக்க ஆரம்பித்தான்............................


அதுவரை எல்லாரிடமும் பேசிக்கொண்டிருந்த கண்ணன் எதேச்சயாக வாசலை நோக்கி திரும்பியவன்.................முகம் கடுகடுவென்று மாறியது...............இவனா................


கண்ணன் வாசு இருவருக்கும் என்ன பகை.......?





தொடரும்....................
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top