நேசம் மறவா நெஞ்சம் - 4 nesam marava nenjam

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நேசம் மறவா நெஞ்சம்


அத்தியாயம் _4


" டேய் ராமா, டேய் முத்து டேய் இங்க வாங்கடா"


"என்னம்மா, எதுக்கு இப்ப கூப்படுறீங்க"

"டேய் அண்ணன் பக்கத்துல நடக்கிற கண்ணத்தா கோவில் திருவிழாவுக்கு கிளம்பச் சொன்னான்."


"ஐ, சூப்பர்ம்மா, எங்க பிரண்ட்ஸ் எல்லாரும் இன்னைக்கு லீவு போட்டு திருவிழாவுக்கு போயிருக்காங்க, ஆனா நான் எப்படி இங்கே அண்ணன் கிட்ட கேக்குறதுன்னு யோசிச்சு கிட்டு இருந்தேன்."


" ஆமானே, அங்க நிறைய ராட்டினம், திருவிழா கடை, அங்க வந்திருக்காம்"


" ஆனா அம்மா அண்ணன் கிட்ட சொல்லி 500ருபாய் வாங்கி தாங்க இல்லைனா 300ரூபாயாச்சும் வாங்கித்தாங்கம்மா".


" டேய் வாங்கிதாறேன் ஆனா பாத்து செலவு செய்யனும்".

இதை கேட்டுக் கொண்டே உள்ளே வந்த கண்ணனுக்கு நாம் ரொம்ப கஞ்சமாக இருக்கிறோமோ என்ற எண்ணம் தோன்றியது. தம்பி பஸ்ல போயிட்டு வருவோமா?".


"ஏம்மா நம்ம காருலயே போவோம்"
"இல்லப்பா பெட்ரோல் ரொம்ப விலையாம்ல"" பரவால்லம்மா காசு நிறைய இருக்கு".
டேய் வாங்க நேரமாச்சு" என்று கிளம்பி நால்வரும்கோவிலுக்கு வந்தனர்.



"அம்மா கூட்டம் ரொம்ப இருக்கு. நீங்க மூனுபேரும்இங்கயே நின்னு கும்பிட்டு கோயிலுக்குள்ள போங்க நான் போய் தேருக்கு அர்ச்சனை செஞ்சுட்டு இன்னொரு அர்ச்சனை வாங்கிட்டு கோவிலுக்கு வாரேன். டேய் அம்மா பத்தரம்டா"




" சரிண்ணே".
அதே நேரம் கயல் குடும்பத்தினர் கோவிலுக்குள்நுழைந்தனர்


. ்கயல்" அம்மா. எங்கம்மா. அப்பாவ
காணோம்".



அப்பா அழகர் பெரியப்பாவோட சேர்ந்து நம்ம மாலையையும் தேர் சாமிக்கு சாத்திட்டு வரதா அப்பா சொன்னாங்க. நம்மள சாமி கும்பிட்டு வீட்டுக்கு போகச் சொன்னாங்க.
"அப்ப தம்பிம்மா".



"அந்த கொடுமையை ஏண்டி கேக்குற. இந்தப் இந்த திருவிழா ஆரம்பிச்ச நாள்ல இருந்து இங்க இருக்குற எல்லா ராட்டினம் சுத்தி சுத்தி அங்க இருக்குறவங்களோட நல்லா சினேகிதம் பிடிச்சுட்டான் போலடி . சாயங்காலம் பள்ளிக்கூடம் விட்டு வந்ததில் இருந்து இங்க தான் கிடையா கிடக்கிறான் தினம்தினம் 100ருபாய் வாங்கிட்டு போறான். இன்னைக்கு காலையில வந்து அந்த அண்ணனுக்கெல்லாம் சாப்பாடு கட்டித் தர கேட்டான். நானும் மூனு வேளைக்கும் கட்டி கொடுத்து விட்டேன். "




" ஏம்மா, அதுக்கு அவங்களை வீட்டுல கூப்பிட்டு சாப்பாடு போட்டுறுக்களாம்ல".
மல்லிகா" ஏக்கா, அவுக வேலை கெட்டுப் போயிராதா. பாவம் அந்த 10 நாள் மட்டும் தான் அந்தக் ராட்டினம் நிக்காம சுத்திகிட்டு இருக்கும். அப்புறம் அதை கழட்டி ஏத்துக்கூலி, இறக்குக்கூலி குடுத்து ஊரு ஊராகொண்டுபோய் அந்தந்த ஊருல குத்தகை காரங்ககிட்ட வரி குடுத்து பாவம்பா.



" ஏம்மா நீ அவங்கள 10நாளும் கூப்பிட்டு சாப்பாடு போட்டிருக்கலாம்*.

" அடுத்த வருஷம் 10 நாளும் போட்டுறலாம்"
"சரிம்மா, ஒரு 20ருபாய் குடுங்க. மீனுக்கு பொறி வாங்கி போட*.
"அருணா, நீயும் மல்லிகாவும் போய் பொறி வாங்கி குடுத்திட்டு சுதாவை பாருடி. தினம்தினம் இந்த திருவிழா கடையில என்னதாண்டி வாங்குவா. இன்னும் சாமி கும்பிடல கூப்பிடு இவளை".



"இவர்கள் பொறி போடும் போது அங்கு வந்த முத்து மீனை ஆசையுடன் பார்த்து கொண்டுருக்க கயல் அவனை பார்த்து சிநேகமாக சிரித்த படி இரு கை நிறைய பொறி யை அள்ளி கயல் அவனிடம் கொடுத்து போடச்சொன்னாள்.( பஸ்டு விக்கெட்டு காலி) முத்துவுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.
தன் தாயின் குரல்கேட்டு கோவிலுக்குள் நுழைந்த கயலும் மல்லிகாவும் தன் தாய் மற்றும் சகோதரிகளுடன் பேசிக் கொண்டு இருந்த
அழகர் மனைவி சௌந்தரத்திடம் சென்றனர்.



"பெரியம்மா நல்லாயிருக்கீங்களா".
"நல்லாயிருக்குகேன் ஆத்தா, இரண்டு பேரும் ரதி மாதிரி இருக்கீங்க."பெண் பிள்ளைகள் இல்லாத சௌந்தரத்திற்கு இவர்களை மிகவும் பிடிக்கும்.



"என்ன பெரியம்மா சாமி கும்பிட்டீங்களா".



"கும்பிட்டேன்த்தா, உங்க பெரியப்பாவோட சிநேகிதகுடும்பத்துக்காரங்க சாமி கும்பிட வந்திருக்காங்க, அதான் அவங்கள வீட்டுக்கு கூட்டிப்போக வந்தேன்".

அதே நேரம் சாவித்திரி குடும்பத்துடன் வெளியே வர


"அத்தாச்சி வாங்க வாங்க நல்லாயிருக்கிகளா..? "

நல்லாயிருக்கோம் அத்தாச்சி"எங்க அத்தாச்சி , பெரிய மருமக பிள்ளையை காணோம்".
"அண்ணன் போன்ல சிக்னல் இல்லைன்னு வெளியே போய் போன் பேசுறான்....... ". (வாங்கப்பா போய் ஒரு டீக்குடுச்சிட்டு வருவோமா. இந்த பிள்ளை இப்ப கண்ணனை பாக்க விடாது போல)

சௌந்தரம் இவர்களை சகுந்தலாவிடம் அறிமுகப்படுத்த அனைவரும் சினேகமாக சிரித்து வாங்க என்றனர்.

அப்போது சாவித்திரிக்கு அழகர் அண்ணன் சொன்ன பெண் குடும்பம் அவங்களா இருக்குமோ, (ஆத்தி எல்லாம் ரதி மாதிரி இருக்கு பேசாம நம்ம ராமருக்கும் இங்கயே பொண்ணு எடுத்துறலாம்போலவே),
(கண்ணா...., ரெண்டு லட்டு திங்க ஆசையா, ஏம்பா இங்க கண்ணனே இன்னும் பொண்ணப்பாக்கல.)
"சரி, நேரமாச்சு" என்று கயல் குடும்பத்தினர் கோவிலுக்குள் செல்ல சாவித்ரி குடும்பத்தினர் அழகர் வீட்டுக்கு கிளம்பினர்.
சாமி கும்பிட்டு வீட்டுக்கு வந்த கயல் சாப்பிட்டு விட்டு மல்லிகாவையும், அருணாவையும் கலை நிகழ்ச்சிகள் பார்க்க கிளம்பினர்.
"சுதாக்கா, நீயும் வர்றீயா? ".
" இல்லடி, எனக்கு தலைவலிக்குது நீங்க போயிட்டு வாங்க நான் படுக்கப்போறேன்".
அங்கு அழகர் வீட்டில் சாப்பிட்டு கொண்டிருந்த ராமருக்கு போன் வர

ராமர் தன் தாயிடம் "அம்மா. அண்ணே போன் பண்ணுனாங்க அழகர் மாமாவோட கோவிலில இருக்காங்களாம். வர லேட்டாகுமாம் நான் கச்சேரி பாக்க போறேன். நீங்க என்ன பண்ணபோறீங்க".

முத்து" அம்மா நான் ராட்டினம் சுத்தப் போறேன். காசு குடுங்க

. சரிசரி இந்தா" டேய் இரண்டு பேரும் போயி சுத்திப்பாத்துட்டு அங்கே கோவில்மண்டபத்துக்கு வந்திருங்க. . நானும் போயி இங்க பொட்டி, சொலகு(பனை ஓலைப் பெட்டி, முறம்) சவுகரியமாக கிடைக்கும். பலாப்பழம், மாம்பழமும் நெறைய கெடைக்கும் வாங்கிட்டு மண்டபத்துக்கு வந்துடறேன்.

" ஏண்டி, எங்க உங்க பாடிகார்டு அப்பத்தாவ காணோம்..?".

"இன்னைக்கு வள்ளி திருமணம் நாடகம் நடக்குதுல்ல...... பப்பூன் டான்ஸ் ஆரம்பிக்கரதுள்ள இருந்து அவுக வேன்ல ஏறுற வரைக்கும் அப்பத்தா இங்க இருந்து நகராது... முனை வீட்டு பூவாத்த அப்பத்தா பாயெல்லாம் விரிச்சு இடம்பிடிச்சு, 71/2 மணிக்கே போன் பண்ணிட்டாங்க... அப்பத்தாவும் உடனே கிளம்பி போய்டாங்க... இனி காலைலதான் அத வீட்டுப்பக்கம் பாக்க முடியும்... ".

" மல்லிகா, நீயும் அருணாவும் ஆடல்பாடல் மட்டுந்தானே பாக்க போறீசங்க..? ".

" இல்லக்கா கொஞ்ச நேரம் பாத்துட்டு நானும், அருணாவும் கச்சேரி பாக்கப்போறோம் என் பிரண்ட் செல்வி வரச் சொன்னாக்கா... ".

அனைவரும் ஆடல் பாடல் பார்த்து பாதி நடைபெறும் போது செல்வி போன் பண்ண அருணாவும், மல்லிகாவும் பாட்டுக்கச்சேரி பார்க்கச் சென்றார்கள்.

சிறிது நேரத்திலேயே தனது தோளில் பாரத்தை உணர்ந்த கயல் தன் தோளில் சாய்ந்து தூங்கி கொண்டிருந்த அமுதாவை எழுப்பினாள்...

" ஏய் அமுதா எழுந்திருடி என்னடி இப்படி தூங்குற...?"
"ஆமாண்டி நைட்டும் தூக்கமில்ல அதாண்டி கண்ண கட்டுது..... ஆமா அந்த பிரஸிடெண்ட் மகன் வாசு ஏண்டி இப்படி நம்மளயே பார்த்துகிட்டு இருக்கான்....?".

வாசு அந்த ஊரு பிரசிடெண்ட் மகன் வயது 29 மனதுக்குள் பெரிய மைனர் என்று நினைப்பு கையில் பெரிய பட்டையான கைச் சங்கிலியும், கழுத்தில் பெரிய கனமான சங்கிலி, கையில் 3 மோதிரம் போட்டு, ராயல் என்பீல்டில் அடிக்கடி அவர்கள் வீட்டை பார்த்துக்கொண்டே செல்வான். அவனுக்கு அவர்கள் வீட்டு பெண்கள் மேல் ஒரு கண். எப்படியாவது ஒரு பெண்ணையாவது லவ் பண்ணனும். அதிலும் இந்த கயலை எப்படியாவது கரெக்ட் பண்ணனும்னு ரொம்ப நாளா டிரை பண்றான். ம்கூம் எங்க முடியல.... அவன் அங்கு கூட்டமாக வந்த மற்ற பெண்களை கவனிக்க.


"ஏய், வாடி எனக்கும் தூக்கம் வருது போகலாம்.....".

"உங்க தங்கச்சிங்க....?".

"அவ கச்சேரிக்கு போயிட்டா. போகும் போதே சொல்லிட்டா பக்கத்து வீட்டு வசந்தா அக்காவோட அப்புறம் வர்றாளாம்..

இருவரும் பேசியபடி வீட்டிற்கு செல்ல, அமுதாவின் வீடு நேர்ரோடு. கயலு வீடு குறுக்கு சந்தில் நேராக பதினைந்து வீடு தள்ளி இடது புறத்தில் இருக்கும். 5 வீட்டிற்கு பிறகு வலது புறம் சிறு சந்து அதில் இருவீடுகள் கடைசி வீடு ராமர் வீடு பெரிய காம்பவுண்ட் வைத்து நீளமாக இருக்கும்..


"ஏண்டி போன் கொண்டுவந்தியா..?".

"இல்லடி அந்த போன எங்க வச்சேன்னு தெரியல. நேரமாச்சுன்னு ஓடி வந்துட்டேன். போன் கொண்டு வந்திருந்தா அம்மாவுக்கு போன் பண்ணி அத வீட்டு வாசல்ல நிக்கச்சொல்லியிருக்கலாம்.


"ஏண்டி எனக்கு ஒரு டவுட்டு ஆமா போன வாரம் செத்தாரே நம்ம செல்லப்பன் தாத்தா அவரு இப்ப எப்படிடி இருப்பாரு பேயா மாறி இருப்பாராடி...?".

"ஏண்டி நைட் 12 மணிக்கு இந்த பேச்சை பேசுற..?. நாம வரும் போது அவரு பொண்டாட்டி பேச்சி கிழவி பாய கொண்டுகிட்டு நாடகம் பாக்கப்போச்சுடி அதப் பாத்தேன்".

"ஊரு காவலனுக்கு நாள் வச்சுட்டுதான காப்பு கட்டுறாங்க,அதனால பேயெல்லாம் ஊருக்குள்ள வராது ஐயனாருதாண்டி வருவாரு..".

" இல்லடி தாத்தா இப்பத்தான இறந்து ஒரு வாரமாச்சு பேயா சுத்துராராம்டி நேத்து எங்க வீட்டு திண்ணையில உக்காந்து எங்க அப்பத்தா, நம்ம தெரு கிழவிங்க எல்லாம் பேசிகிட்டு இருந்துச்சுங்க... ".




" அப்ப நீ திண்ணைல உக்காந்து படிக்கிற மாதிரி பில்டப் கொடுத்துட்டு இருந்திருக்க....? ".

" ஆமாண்டி அதெல்லாம் கண்டுக்காத".

" சரிடி நான் வேணும்னா நிக்கிறேன் நீ வீட்டுக்கு போ நான் பாத்துகிட்டே இருக்கேன். அந்த இரண்டாவது வீதிலைட்டு கிட்ட போனதும் நான் போறேன்... ".

" வேணாம்டி எனக்கு ஒன்னும் பயமிள்ள நீ கிளம்பு... ". என சொல்லிவிட்டு" ஏண்டி..... அமுதா எல்லாரும் செத்தவுடனே மேலோகத்தில் போனவுடன் டான்ஸ் கத்துகுராங்களோ...? ".

" ஏண்டி இப்படி ஒரு டவுட்டு.. ".

" இல்லடி சந்திரமுகி படத்துல இருந்து காஞ்சனா _2 வரைக்கும் எல்லாப்படத்துலயும் பேய் வந்து சூப்பரா காஸ்ட்யூம் போட்டு ஒரு டான்ஸ் ஆடுதடி அதான் கேட்டேன்.... ".
" ஏண்டி, இப்படி யெல்லாம் பேசிதைரியமா இருக்குற என்னையும் பயமுத்துற...? நான் வீட்டுக்கு ஓடப்போரேன்பா. நீயும் ஓடிடு யாரையும் இடையில காணோம் வேகமா ஓடிரு.... "

அமுதா அந்தப்பக்கம் செல்ல கயல் தன் பாவாடையை தூக்கி இடுப்பில் சொருகி ஓட ரெடியானாள்.

" எதுக்கும், நாம கண்ண மூடிட்டு ஓடிடுவோம் ஒரே நேர்ரோடு தான "என்று தெருவை நன்குஉற்றுப் பார்த்தாள். 4 தெரு விளக்கு வரை நன்கு தெரிந்தது ஒரு வரையும் காணவில்லை. ராமர் வீடு இரண்டாவது தெருவிளக்கின் சற்று தள்ளித்தான் அந்த குறுக்குச்சந்து ஆரம்பிக்கும்.

"கயலு ரெடி ஜுட் ஓட ஆரம்பிக்கலாம்.. "



என்று கூறி கண்ணை மூடிக் கொண்டு ஓட ஆரம்பித்தாள்..

ஓட ஆரம்பித்தாள்............. பேய்க்கு பயந்தா...... இல்ல ஐயனாருக்கா... .?

...... தொடரு‌ம்...!!.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
எப்படி டியர் மின்னல் மாதிரி வர்றீங்க update பிடிச்சிருக்கா........
ஹா... ஹா... ஹா............
அப்டேட்லாம் சூப்பர்ப்
ரொம்பவே பிடிச்சிருக்கு-ப்பா
ஆனால் அப்டேட் நக்கினியூண்டா
இருக்குப்பா, பிரியா டியர்

கேணைச்சி கயல் கண்ணை
மூடிக்கிட்டு ஓடுறாளே
அந்த வாசு வந்து ஏதாவது
கோக்குமாக்கு செஞ்சான்னா?

என்ன? நம்ம சூப்பர்ப் ஹீரோ
கோகுலக் கண்ணனை இன்னும்
காணோமே?
ஒருவேளை கயலிடம் வாசு
வம்பு வளர்க்கும் பொழுது
கலப்பையைப் பிடிச்ச கை
வாசுவுக்கு செம மாத்து
கொடுக்குமோ, பிரியா டியர்?
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹா... ஹா... ஹா............
அப்டேட்லாம் சூப்பர்ப்
ரொம்பவே பிடிச்சிருக்கு-ப்பா
ஆனால் அப்டேட் நக்கினியூண்டா
இருக்குப்பா, பிரியா டியர்

கேணைச்சி கயல் கண்ணை
மூடிக்கிட்டு ஓடுறாளே
அந்த வாசு வந்து ஏதாவது
கோக்குமாக்கு செஞ்சான்னா?

என்ன? நம்ம சூப்பர்ப் ஹீரோ
கோகுலக் கண்ணனை இன்னும்
காணோமே?
ஒருவேளை கயலிடம் வாசு
வம்பு வளர்க்கும் பொழுது
கலப்பையைப் பிடிச்ச கை
வாசுவுக்கு செம மாத்து
கொடுக்குமோ, பிரியா டியர்?
Sry pa எனக்கு நக்கினியூண்டா ன்னா என்னப்பா அர்த்தம் அது எனக்கு புரியலப்பா..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top